
இந்தியாவே பரபரப்பாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'எந்திரன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, சேலம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஒரே நேரத்தில் நடந்தது.
ஹாலிவுட்டுக்கு ஒரு இந்தியக் கலைஞர் சவால் என்று வர்ணிக்கும் வகையில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் ஷங்கர். சமீபத்தில் வெளியான எந்திரனின் இந்திப் பதிப்பான ரோபோவின் முன்னோட்டக் காட்சிகளைப் பார்த்த அனைவரும் மிரண்டு போய் உள்ளனர்.
இந்த நிலையில் படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது.
காலை 10 மணிக்கு சென்னையில் சத்யம் தியேட்டரில் நடந்த இந்த விழாவில் தலைவர் , தயாரிப்பாளர் சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான், மற்றும் தமிழ் திரைப்பட முன்னணி நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் உட்பட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டனர். படத்தின் டிரெய்லரை தலைவர் வெளியிட்டார்.
சென்னை கே.கே.நகர் காசி, அம்பத்தூர் ராக்கி மற்றும் தமிழகத்தின் பல முக்கிய திரையரங்குகளிலும் இன்று டிரெய்லர் வெளியிடப்பட்டது.
ஒரு டிரெய்லர் வெளியீட்டு விழாவை ஒரு படத்தின் வெற்றி விழா போல கொண்டாடும் ரசிகர்கள் இந்த உலகில் தலைவருக்கு மட்டுமே கிடைத்த வரம்.
கொண்டாட்டத்தின் முதல் பகுதியாக திருச்சி ரசிகர்கள் அன்பின் வெளிபாடு இங்கே:
No comments:
Post a Comment