
தனது இளைய மகள் சௌந்தர்யாவின் திருமணத்துக்கு ரசிகர்களை அழைக்க முடியவில்லையே என அவர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா - அஸ்வின் திருமணம் செப்டம்பர் 3-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தமிழகத்தின் சகல தரப்பு முக்கிய தலைவர்கள், ரஜினியை கடுமையாக விமர்சித்தவர்கள், ரஜினி எதிர்ப்பு பிரமுகர்கள் என அனைவருக்கும் ரஜினியே நேரில் சென்று பத்திரிகை வைத்து அழைப்பு விடுத்தார்.
நேற்று புதன்கிழமை மாலை பத்திரிகையாளர்களுக்கும் அழைப்பிதழ்களை பிஆர்ஓக்கள் மூலம் வழங்கினார். உடன் அவரது ஒரு அறிக்கையும் வழங்கப்பட்டது.
அதில், தனது பல லட்சம் ரசிகர்களை இந்த மங்கல நிகழ்வுக்கு அழைக்க முடியவில்லையே என வருத்தம் தெரிவித்திருந்தார் ரஜினி. பத்திரிகைகளின் வழியாக ரசிகர்களுக்கு அவர் தனது கைப்பட எழுதி அனுப்பியுள்ள இந்த செய்தியின் விவரம்:
"என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப்பெருமக்களுக்கு என்னுடைய அன்பான வணக்கங்கள். எனது மகளின் திருமணத்தை ரசிகர்கள் நேரடியாக வந்து பார்க்க வேண்டும். வாழ்த்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் தொலைபேசி மூலமாகவும், தபால் மூலமாகவும் எனக்கு தகவல் வந்து கொண்டு இருக்கிறது.
இதற்காக ரசிகர்களை அழைப்பதற்கு ஆசையாக இருந்தாலும் சென்னை நகரின் இட நெருக்கடி காரணமாகவும், போக்குவரத்து இடையூறுகள் கருதியும் ரசிகர்களை அழைக்க முடியவில்லை என மிக வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். மணமக்களுக்கு உங்களின் நல்லாசிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்..."
No comments:
Post a Comment