நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி வேடம்


'அவதார்’, ‘டெர்மினேட்டர்’ உட்பட பல ஹாலிவுட் படங்களை உருவாக்கிய, அமெரிக்காவில் உள்ள ஸ்டான் வின்ஸ்டைன் ஸ்டூடியோவில், நவீன அனிமேட்ரானிக்ஸ் என்ற தொழில் நுட்பத்தில் ‘எந்திரன்’ உருவாகியுள்ளது. ‘டெர்மினேட்டர்’ படத்துக்கு ஹாலிவுட் ஹீரோ அர்னால்டின் உருவத்தை மோல்டு எடுத்தது போன்று ரஜினியின் உருவத்தை மோல்டு எடுத்து பயன்படுத்தியிருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதோடு முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா முதன்முறையாக ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார்.
ஹாலிவுட்டுக்கே புதுமையாக இருக்கும் படமாக, இதை ஷங்கர் இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் ஸ்பெஷல் மேக்கப்பிற்காக, ரஜினிகாந்த் பலமணி நேரம் ஒதுக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷங்கர்&ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உருவான அனைத்து படத்தின், பாடல்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதால், ‘எந்திரன்’ படத்தின் பாடல்களை, உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில், வரும் 31&ம் தேதி மலேசியாவில் உள்ள புத்ரஜெயா சர்வதேச கன்வன்ஷன் மையத்தில் நடக்கும் பிரமாண்ட விழாவில் பாடல்கள் வெளியிடப்படுகிறது. இதில், சன் நெட்வொர்க் தலைவரும் சன்பிக்சர்ஸ் அதிபருமான கலாநிதி மாறன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா, இயக்குனர் ஷங்கர், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உட்பட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...