
எந்திரன் படத்தின் பஞ்ச் டயலாக்குகள் வெளியாகியுள்ளன. வழக்கத்தை விட அழுத்தமான அரசியல் வசனங்களை இதில் ரஜினிக்கு வைத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். குறிப்பாக 'அர்த்தசாஸ்திரம் உங்க வழி; தர்மசாஸ்திரம் என்வழி' என்று ரஜினி பேசும் வசனம் இந்தப் படத்தின் ஹைலைட்டாகக் கூறப்படுகிறது.ஹாலிவுட் படத்துக்கு சற்றும் குறையாத பிரமாண்ட பொழுதுபோக்குப் படமாகத் தயாராகி வருகிறது எந்திரன். இந்தியாவின் முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3 டி!இந்தியாவில் வெளியாகும் முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3 டி திரைப்படம் எந்திரன்தான். திருட்டு விசிடியைத் தடுக்கவும், படத்தில் இடம்பெற்றுள்ள அற்புதமான கிராபிக்ஸ் காட்சிகளின் முழு அனுபவமும் ரசிகர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், இந்தப் படத்தை டிஜிட்டல் 3டி தொழில்நுட்பத்தில் தருகிறார்கள். இந்தப் பணி மட்டுமே 4 மாதங்கள் நடக்க விருக்கிறது.ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்துக்கு கிராபிக்ஸ் மற்றும் 3 டி எபெக்ட்ஸ் தந்த ஹாலிவுட்டின் ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டுடியோ நிறுவனம்தான் எந்திரனின் முழு கிராபிக்ஸ் பணிகளையும் பார்க்கிறது. எந்திரனை 3 டிக்கு மாற்றுபவர்களும் இவர்களே. எந்திரன் 3 டியில் தயாராவதற்குள், அதற்கேற்ற மாதிரி திரையரங்குகளை மாற்றும் பணியும் நடக்கிறது. சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் இதற்கான வேலைகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளது.படத்தில் அரசியல் வசனங்கள் மற்றும் அரசியல் கவிதைகளும் இடம் பெற்றுள்ளனவாம். ஏற்கெனவே சுஜாதா தன் பங்குக்கு எள்ளல் நடையில் வசனங்களை எழுதியுள்ளாராம். அரசியல் வசனங்களை பெரும்பாலும் ரோபோ ரஜினி பேசுவது போல அமைக்கப்பட்டுள்ளதாம்.இது போதாமல், நா முத்துக்குமார் எழுதிய ஒரு படு சூடான அரசியல் கவிதையும் இடம்பெறச் செய்துள்ளாராம் ஷங்கர்.அதில் சில வரிகள் சாம்பிளுக்கு...'வாழ்க்கைக் கொடுப்பவன் வாக்காளன்… வாக்கரிசி போடுபவன் வேட்பாளன்.''அரசியலில் என்றுமே நான் நிராயுதபாணி''அர்த்த சாஸ்திரம் உங்க வழி… தர்ம சாஸ்திரம் என் வழி!'
No comments:
Post a Comment