“மேடைப் பேச்சுன்னா இது….!” அசத்திய ரசிகர்கள்!! - நலத்திட்ட உதவிகள், பொதுக்கூட்டம், பாலாபிஷேகம் என தூள் கிளப்பிய சைதை விழா! ரிப்போர்ட்





தென்சென்னை மாவட்டம் சைதை பகுதி ரசிகர்களின் சார்பில் சைதாப்பேட்டை தேரடியில் ரஜினி ரசிகர்களின் முப்பெரும் விழா 28/02/2010 (Sunday) அன்று மாலை நடைபெற்றது.

சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் விழா, மணிவிழா, உழைப்பால் உயர்ந்த உத்தமர் ரஜினிகாந்த் நற்பணி மன்றத்தின் 25 ஆம் ஆண்டு விழா - ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சைதை ரவி, சைதை முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

முக்கிய மன்ற நிர்வாகிகள் பேசிய பொதுக்கூட்டத்திற்கு பிறகு நலத்திட்ட உதவிகள் வழகப்பட்டன. உடல் ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வாகனங்கள், 60 பேருக்கு வேஷ்டி சேலை, 60 பேருக்கு தலா 5 கிலோ அரிசி ஆகியவை வழங்கப்பட்டது.
நாடோடிகள் புகழ் விஜய் வசந்த் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். ரசிகர்கள் சார்பாக அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

பழக்கடை பன்னீர்செல்வம், சைதை எம்.கே. மனோ, செட்டி தோட்டம் செல்வம், சென்னை மாவட்ட நிர்வாகிகள் என்.ராமதாஸ், ஆர்.சூர்யா, ஆகியோர், வளசை ஆனந்த, கொடுங்கையூர் ஆனந்த், ரஜினி டெல்லி, ஸ்ரீ ரங்கம் ராயல் ராஜ், நாஞ்சில் ஜெகதீஷ், விருதுநகர் மோசஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தூள் பரத்திய ரசிகர்களின் மேடைப்பேச்சு
முன்னதாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மன்றப் பிரமுகர்களும் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டு பேசினர். ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது. சூப்பர் ஸ்டாரை தமிழின் பெயரால் சிலர் தனிமைப்படுத்த முயற்சிப்பது ரசிகர்களை வெகுவாக பாதித்துள்ளது. அவர்களுக்கெல்லாம் பதிலளிக்கும் வண்ணம் அவர்கள் மேடை பேச்சு அமைந்தது. மைக் கிடைத்ததே என்று கண்டதையும் பேசாது அனைவரும் கட்டுக்கோப்பாக பேசியது குறிப்பிடத்தக்கது. (மேடையில் பேசவதற்கு சரக்கில்லாமல் தமிழை பிடித்து இழுப்பவர்கள் இவர்களிடம் பேசுவதற்கு கற்றுக்கொள்ளவேண்டும்.). இவர்களுக்கெல்லாம் முறைப்படி பயிற்சியளித்தால் எதிர்காலத்தில் சிறந்த பேச்சாளர்களாக வருவர் என்பது உறுதி.

ஆர்வத்துடன் கவனித்த பொதுமக்கள்….
பொதுவாக பொதுக்கூட்டம் என்றாலே வீடுகளுக்குள் முடங்கிவிடும் அந்தப் பகுதி மக்கள், அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து நிகழ்சிகளை கண்டு ரசித்தனர். குறிப்பாக ரசிகர்கள் பேசியதை மிகவும் ஆர்வமுடன் கேட்டனர். இவர்களில் சில கல்லூரி மாணவியரும், தாய்க்குலங்களும் அடக்கம்.

அரசியல் கட்சிகளுக்கு சவால் விடும் அசத்தல் ஏற்பாடுகள்
தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டத்துக்கு இணையாக ரசிகர்கள் தங்கள் கைக்காசிட்டு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது என்றால் மிகையல்ல. விழா ஏற்பாடுகளாகட்டும், மேடை அலங்காரங்கலாகட்டும், டாப் டக்கர் டிஜிட்டல் பேனர்களாகட்டும், காவல் துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகளாகட்டும், நிகழ்ச்சி முழுதும் நிலவிய ஒரு ஒழுங்காகட்டும், அனைத்தும் அரசியல் கத்சிகளுக்கும் மேலாகவே இவர்களின் ஏற்பாடுகள் அமைந்திருந்தது.

நீங்க கொஞ்சம் அப்படி போங்க முதல்ல…
எத்துனை கொண்டாட்டங்களிருந்தாலும் ரசிகர்களின் ட்ரேட் மார்க் பாலபிஷேகம் இல்லாமலா? “அட இன்னுமாப்பா பாலாபிஷேகமேல்லாம் பண்ணுவீங்க? அடுத்த லெவலுக்கு போலாமே…” என்று நாம் அதற்க்கு அங்கு முட்டுக்கட்டை போட நினைத்தாலும், அவர்களது ஆர்வத்தின், பக்தியின், முன் நமது வேண்டுகோள், எடுபடவில்லை. அவர்கள் ஆசை தீருமளவிற்கு சூப்பர் ஸ்டாரின் பேனருக்கு ரசிகர்களின் உற்சாக கூக்குரல்களுக்கு நடுவே பாலாபிஷேகம் நடந்தது. பாலாபிஷேகத்தை தொடர்ந்து தேங்காய்கள் உடைக்கப்பட்டன. பிறகு உயர் ரக பட்டாசுகளை வெடித்து விழாவை மேலும் அமர்க்களப்படுத்தினர். வானில் பட்டாசுகளின் ஜாலத்தை பார்த்தபோது ஏதோ திருவிழாவை போல அந்த பகுதியையே அதகளப்படுத்திவிட்டனர் ரசிகர்கள்.

விழா துளிகள்:
*விழா மேடை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு அதன் மீது ரஜினி மன்ற கொடி பறக்கவிடப்பட்டிருந்தது.
*மேடையில் அலங்கார வேலைப்பாடுகள் கண்ணைக்கவரும் வகையில் அழகாக செய்யப்பட்டிருந்தது.
*தேரடி தெரு முழுக்க விளக்குகளின் ஒளி வெள்ளத்தால் ஜெகஜோதியாக காட்சியளித்தது.
*நிகழ்ச்சியை அந்த பகுதி மக்கள் - குறிப்பாக அந்த தெருவில் வசிப்பவர்கள் ஆர்வமுடன் ரசித்து பார்த்தனர்.
*வெளிமாவட்டங்களிலிருந்தும் மன்ற நிர்வாகிகள் வந்திருந்தனர்.
*நிகழ்ச்சிகள் துவங்கும்முன் ரஜினி பட பாடல்கள் இசைக்கப்பட்டு ரசிகர்கள் அதற்கு குத்தாட்டம் போட்டனர்.
*சுமார் ஐந்து மணிநேரம் விழா நடைபெற்றது. (ஆறு மணிக்கு துவங்கிய நிகழ்ச்சிகள் முடிவதற்கு இரவு 11.00 மணியானது.)*ரசிகர்கள் மற்றும் அமைப்பாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் அனைவரும் விழா பேஜ் குத்தியிருந்தார்கள்.
*இறுதியில் நடைபெற்ற கண்கவர் வானவேடிக்கை அந்த பகுதியையே திருவிழா சூழலுக்கு தள்ளியிருந்தது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...