3D யில் எந்திரன் & ரிலீஸ் எப்போது?



ஷங்கர் அவர் ப்ளாக்கில் (directorshankaronline.com) கூறியிருக்கும் பதில்கள் + மேலும் சில விஷயங்களை சேர்த்து அனைத்தையும் தொகுத்து இங்கு தந்திருக்கிறேன்.

* மறைந்த காமெடி நடிகர் கொச்சின் ஹனீபா எந்திரனில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார்.
எந்திரனில் பணியாற்றியுள்ள நடன இயக்குனர்கள் யார் யார் தெரியுமா?
பிரபுதேவா 1 பாட்டு, ராஜூ சுந்தரம் 2 பாட்டு, தினேஷ் 1 பாட்டு (அனேகமா டைட்டில் சாங்கா இருக்கும்!!)
எந்திரனில் யார் யார் எத்துனை பாடல் எழுதியிருக்கிறார்கள்?

இதுவரை : வைரமுத்து 3, பா.விஜய் 1, மதன் கார்க்கி 1 ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.
* சிவாஜியில் பல்லேலக்கா பாடலில் தலைகாட்டிய ஷங்கர், எந்திரனில் இதுவரை நடிக்கவில்லையாம். இன்னும் கொஞ்சம் படப்பிடிப்பே இருப்பதால் இனி சாத்தியம் குறைவு என்கிறார். (சும்மா ஜஸ்ட் வாங்க சார். நீங்க வர்ற சீன்ல பலத்த விசில் உறுதி!)
3D யில் எந்திரன்?
* இன்றைய நவீன யுகத்தில் பைரசியை ஒழிப்பது பெரும் சவாலாக இருக்கிறது. மக்கள் பைரசியையே நாடாமல் தியேட்டருக்கு வர என்ன வழி?
இருக்கவே இருக்கிறது 3D தொழில்நுட்பம். 3D முறையில் படமெடுத்தால், அதை திரையரங்கில் தான் வந்து பார்க்க வேண்டும். டிவியிலோ மாநிட்டரிலோ பார்க்க இயலாது. எனவே 3D தொழில் நுட்பத்தில் படமெடுப்பீர்களா? என்ற கேள்விக்கு திரு.ஷங்கர் பதிலளிக்கையில், “எந்திரனின் ஒரு பகுதியை 3D யாக மாற்ற ஆலோசனை நடந்துவருகிறது. எந்த ஒரு 2D படத்தையும் 3D யாக மாற்றுமலவிர்க்கு இன்றைய தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள பல முன்னணி கிராபிக்ஸ் நிறுவனங்கள் இந்த பணியில் சிறந்து விளங்குகின்றன. சமீபத்தில் நான் JAAN TRAVOLTA நடித்த ‘GREASE’ படத்தின் டெமோ வெர்சனை பார்த்தேன். இன்று காலை (ஞாயிறு) திரு.ஸ்ரீனிவாசன் நம் இந்தியன் ஆர்டிஸ்ட் குழுவினர் (எந்திரனுக்கு கிராபிக்ஸ் செய்பவர்கள்) எந்திரன் படத்தின் DEMO 3D வெர்சனை எனக்கு போட்டுகாண்பித்தனர். சும்மா சொல்லாகூடாது மிகவும் அசத்தலாக இருந்தது. விரைவில் இது குறித்து ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்.
எந்திரன் ரிலீஸ் எப்போ?
படத்தின் ரிலீஸ் பற்றி நிறைய பேர் ஷங்கரிடம் அவரது ப்ளாக்கில் கேட்கிறார்கள். அவர் அர்த்தத்துடன் மௌனம் காக்கிறார். படத்தின் தரத்தில் (Quality) எந்த காரணத்திற்காகவும் காம்ப்ரமைஸ் செய்யக்கூடாது என்பதில் எந்திரன் குழுவினர் உறுதியாக இருக்கிறார். தயாரிப்பாளர்கள் இந்த விஷயத்தில் ஷங்கருக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார்கள். (ஒரு படம் எப்போ வர்ரதுங்கிரதைவிட எப்படி வருது என்பது தான் முக்கியம் என்பதை அவர்களும் உணர்ந்தேயிருக்கிறார்கள்!)
மேலும் படம் வந்தவரை அனைவருக்கும் பரம திருப்தி சந்தோஷம் என்பதால் அதை மேலும் மெருகூட்ட முடியுமா என்று யோசித்து வருகிறார்கள். அதன் விளைவு தான் இந்த 3D பற்றிய முயற்சி.
படத்தின் எடிட்டிங் பணிகள் உடனுக்குடன் நடந்து வந்தாலும் பின்னணி இசை சேர்ப்பு, கிராபிக்ஸ் பணி, 3D சேர்ப்பது என்று முடிவானால் அதற்க்கு ஆகும் காலம் I மற்றும் இதர முக்கிய POST-PRODUCTION பணிகள் அனைத்திற்கும் மேலும் சில மாதங்கள் தேவைப்படுகின்றன. இவையெல்லாம் முடிந்தால் தான் ரிலீஸ் தேதியை பற்றி சொல்ல முடியும். அதனால் தான் ஷங்கர் அமைதி காக்கிறார் என்று எண்ணுகிறேன்.
எப்படியோ படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் சரி, ஷங்கர் நமது நம்பிக்கையை காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கலாம். அது வரை அவரிடம் ரிலீஸ் பற்றி கேட்டு துரிதப்படுத்தவேண்டாம் என்பது என் அபிப்ராயம். ரிலீஸ் தேதியை பற்றி அவராகவே சொல்லுவார் என்பது என் கருத்து.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...