மும்பையில் சூப்பர் ஸ்டாரின் ஓவியங்கள் & ரஜினி ஸ்டைலை பின்பற்றுங்கள்… நாணயம்

1) மும்பையில் சூப்பர் ஸ்டாரின் ஓவியங்கள்மும்பையில் ஓவியங்கள் விற்பனை செய்யும் மிகப் பெரிய கடை ஒன்று சமீபத்தில் திறக்கப்பட்டதாக நாளிதழ் ஒன்றில் சமீபத்தில் படித்தேன்.
அந்த கடையில் சூப்பர் ஸ்டாரின் பிரமாண்ட ஓவியங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. (அருகே படத்தை இணைத்துள்ளேன்.)

மும்பை நண்பர்கள் அந்தக் கடை மும்பையில் எங்கு திறக்கப்பட்டுள்ளது, மற்றும் மேலும் விபரங்களை பற்றி விசாரித்து மேலும் தகவல்களை அளித்து உதவினால் நன்றாக இருக்கும்.
(தகவல் கிடைத்தால் simplesundar@gmail.com என்ற முகவரியில் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உடனடியாக உங்களை தொடர்பு கொள்வேன். நன்றி.)
2) “உங்கள் விளம்பரங்கள் தனித்து நிற்க வேண்டுமா?” ரஜினி ஸ்டைலை பின்பற்றுங்கள்… நாணயம் விகடன் டிப்ஸ்
சூப்பர் ஸ்டாரின் வெற்றிக்கான காரணங்களுள் அவரை தனித்து அடையாளம் காட்டிய அவரது ஸ்டைலும் ஒன்று.
ஸ்டைல் என்றால் சிகரட்டை தூக்கி போடுவது, தலையை கோதிவிடுவது என்ற அர்த்தம் மட்டும் அல்ல. மற்றவர்களிலிருந்து தனக்கென ஒரு வழிமுறையை உருவாக்கி அந்த வழியில் செல்வதே. (கமல் 50 விழாவில் ரஜினி தனது வெற்றிக்கான காரணமாக கூறியது இதை தான்.)
ரஜினி போல தங்களுக்கென்று தனி ஸ்டைலை பின்பற்றினால் அனைவரும் தங்கள் முயற்சியில் வெற்றியடையலாம் என வர்த்தகர்களுக்கு நாணயம் விகடன் டிப்ஸ் வழங்கியுள்ளது.
//ரஜினிகாந்த் என்றவுடன் உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்? கொத்தாக முன்பக்கம் வந்துவிழும் தலைமுடியை கைவிரல்களாலேயே வாரிவிடும் அழகு; கைவிரல்களில் இருக்கிற சிகரெட்டை லாகவமாகச் சுண்டிவிட, அது கச்சிதமாக உதடுகளை அடையும் நளினம்; கறுப்புக் கண்ணாடியைக் சுழற்றியபடி மாட்டிக்கொள்ளும் வசீகரம். இப்படி ரஜினி எதைச் செய்தாலும் அவரது ஸ்டைல் மட்டும் தனியாகத் தெரியும்.
ஒரு நடிகனாக மாறியபிறகுதான் ரஜினி இதையெல்லாம் செய்தாரா என்றால் இல்லை. பெங்களூருவில் 13-ம் நம்பர் பஸ்ஸில் கண்டக்டராக இருந்தபோது அவர் ரஜினிகாந்த் அல்ல, சிவாஜிராவ் கெய்க்வாட். என்றாலும் மக்கள் அந்த சிவாஜியை விரும்பக் காரணம், அவரிடமிருந்த ஸ்டைலும் வேகமும்தான். பெங்களூரு மக்கள் மட்டுமல்ல, நம் ரசிகர்களும் ரஜினியை மறக்காமல் விரும்பக் காரணம் இந்த ஸ்டைல்தான்! நம்மோடு எந்தச் சம்பந்தமும் இல்லாத ஜப்பான் நாட்டு ரசிகர்கள் ரஜினியை மறக்காமல் இருக்கக் காரணம் அதே ஸ்டைலும் வேகமும்தான்!
ஆனால், ரஜினி மாதிரி எல்லா விளம்பரங்களும் ஆச்சரியத்தை நிகழ்த்தி மக்கள் மனதில் மறக்க முடியாத ஓர் இடத்தைப் பிடிக்க முடியவில்லை என்பதே உண்மை. ரஜினியை நாம் மறக்காமல் இருக்க அவர் பல ஸ்டைல்களைச் செய்தது போல, நம் விளம்பரங்களும் சில விஷயங்களைச் செய்தால் வாடிக்கையாளர்கள் அந்தப் பொருட்களை மறக்கவே மாட்டார்கள். இந்த உண்மையைப் புரிந்துகொண்டு உருவாக்கப்பட்ட விளம்பரங்கள்தான் இன்றும் கொடிகட்டிப் பறக்கின்றன.//
(நன்றி: நாணயம் விகடன்; தகவல் உதவி: புயலமான்)
3) விஜய், அஜீத் - யார் சூப்பர் ஸ்டார்? தினத்தந்தி குருவியார் நச் பதில்
நாம் விரும்பி படிக்கும் பத்திரிகை பகுதிகளுள் தினத்தந்தியில் ஞாயிறு தோறும் வெளிவரும் குருவியார் பதில்களும் ஒன்று. இந்த வாரம் வெளியான ஒரு கேள்வி பதிலை பாருங்கள்.
கேள்வி: விஜய், அஜீத் இருவரும் 50 படங்களை நெருங்கிவிட்ட நிலையில் யார் சூப்பர் ஸ்டார்?
குருவியார் பதில்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.
(எந்த நடிகர் வந்தாலும் போனாலும் ‘சூப்பர் ஸ்டார்’ என்றால் அது தலைவர் மட்டும் தான் என்று சொல்லாமல் சொல்லியுள்ள குருவியாருக்கு ஒரு ஜே.)
(தகவல் உதவி: Peraveen)

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...