குமுதம் இதழ் இல்லத்தின் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார்

என்னதான் குமுதம் இதழ் ரஜினியை விமர்சித்து எழுதி வந்தாலும் குமுதம் இதழ் மீதும் அதன் பதிப்பாளர்கள் மீதும் ரஜினிக்கு எப்போதுமே ஒரு தனி மரியாதை உண்டு.
முன்னாள் குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. தான் இதற்கு காரணம் என்றால் மிகையாகாது.
தற்போது குமுதம் இதழின் முதன்மை ஆசிரியராக இருக்கும் எஸ்.ஏ.பி. ஜவகர் பழனியப்பன் கூட சூப்பர் ஸ்டாரை சில ஆண்டுகளுக்கு முன்பு பிரத்யேக பேட்டிக்காக சென்று சந்தித்தார். சூப்பர் ஸ்டாரும் அவருக்கு “Living with Himalayan Masters” என்ற நூலை பரிசளித்தார் என்பது உங்களுக்கு நினைவிருக்கும்.
குமுதம் இதழின் பதிப்பாளர் திரு.பார்த்தசாரதியின் துணைவியார் திருமதி.கோதை ஆச்சியின் 80 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரிடம் ஆசி பெற தமது துணைவி திருமதி.லதாவுடன் அவரது வீடிற்கு சென்றிருந்தார் சூப்பர் ஸ்டார்.
பெரியோர் சபையில் சூப்பர் ஸ்டாரின் அடக்கத்தை பார்த்தீர்களா? பத்திரிக்கையாளர்களை சூப்பர் ஸ்டார் எந்தளவு மதிக்கிறார் என்பதற்கு இந்த ஒரு புகைப்படமே சாட்சி. குமுதம் ஆசிரியர் முன்பு சூப்பர் ஸ்டார் கைகட்டி நிற்கும் பாங்கை பாருங்கள்…

பிரத்யேக புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு….

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...