வருது வருது எந்திரன் அசத்தல் புகைப்படங்கள் & தொலைக்காட்சியில் நடிகர் சங்க விழா


1) கலைஞர் டி.வி. அசத்துமா?

சூப்பர் ஸ்டார் பங்கேற்று சிறப்பித்த நடிகர் சங்க விழாவின் எக்ஸ்க்ளூசிவ் கவரேஜ் கலைஞர் தொலைக்காட்சியில் இன்று இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்ப இருக்கிறார்கள்.
கடந்த சில நாட்களாக இது குறித்த அசத்தலான ட்ரைலர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
நிகழ்ச்சிகளை சிறப்பாக கவர செய்து அதை அருமையாக எடிட் செய்து வெளியிடுவதில் சன் டி.வி. பெயர் பெற்றது. தற்போது கலைஞர் டி.வி.யும் அந்த பட்டியலில் இடம்பெற்றுவிட்டது என்பதில் ஐயமில்லை. நிகழ்ச்சியை எந்தளவு சிறப்பாக அமுக்கல்கள் இன்றி கலைஞர் டி.வி. கவர் செய்திருக்கிறது என்பத காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
கலைஞர் டி.வி. மேற்படி நிகழ்ச்சியை பிரத்யேகமாக கவர் செய்ததால் இணையதளங்கள் உட்பட யாரும் இந்த நிகழ்ச்சியின் வீடியோவை எடுக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவரின் கார் வந்தபோது நிலவிய ஒரு பரபரப்பான சூழலை மேலே புகைப்படத்தில் பாருங்கள்… பேண்டு வாத்தியங்கள் முழங்க மலர் தூவி சூப்பர் ஸ்டார் வரவேற்கப்பட்ட அழகே தனி…
2) தினகரன் தரும் “எந்திரன்” புகைப்பட ஸ்பெஷல்
நாளை (13/09/2009) வெளிவரும் தினகரன் நாளிதழ் எந்திரன் படத்தின் அட்டகாசமான புதிய புகைப்படங்களோடு வரவிருக்கிறது.
சன் பிக்சர்ஸ் எந்திரனை வாங்கிய சமயத்தில் சில ஸ்டில்களை வெளியிட்டது. அதற்க்கு பிறகு, தற்போது தான் Official புகைப்படங்கள் வெளிவரவிருக்கிறது.
புத்தக வடிவில் மேற்படி ஸ்டில்கள் இலவச இணைப்பாக வெளியாக இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
இது பற்றிய தினகரன் நாளிதழில் வெளியான விளம்பரம் உங்கள் பார்வைக்கு.
3) சௌந்தர்யா ரஜினி அட்லாண்டா பயணம்
சுல்தான் படத்தின் இறுதிகட்ட பணிக்காக சௌந்தர்யா ரஜினி அட்லாண்ட்டா சென்றிருக்கிறார். அவர் திரும்பியதும் முதலில் விவாதிக்கப்படபோவது ஆடியோவை முதலில் தயார் செய்து வெளியிடுவது பற்றி தான்.
ஏ.ஆர.ரஹ்மான் இசையில் சூப்பர் ஸ்டாருக்கு இந்த படத்தில் அறிமுகப் பாடல், டூயட் என அனைத்தும் உண்டு. மொத்தம் ஆறு பாடல்கள். சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக விஜயலட்சுமி நடித்திருக்கிறார். காமெடியனாக் மயில்சாமி நடிக்கிறார். ராகுல் தேவ் வில்லன்.
2010 பொங்கலுக்கு அனேகமாக சுல்தானை எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...