சன் பிக்சர்ஸே எதிர்பாராத விறுவிறுப்பு மற்றும் தரத்துடன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன்.கடந்த சில தினங்களாக இந்தப் படத்தின் முக்கியமான ஆக்ஷன் காட்சிகள் சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் பகுதியில் படமாக்கப்பட்டு வருகின்றன.இந்த ஷெட்யூலில் வித்தியாசமான ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதற்காக பர்வீன் ட்ராவல்ஸிலிருந்து ஒரு சொகுசு பஸ்ஸை வாடகைக்கு எடுத்து, அதை ஒரு செயற்கை கம்ப்யூட்டர் ஆராய்ச்சி லேப் ஆகவே மாற்றியிருக்கிறார்கள்.இந்த லேபுக்குள் உள்ள ரஜினியை 20 பேர் தாக்குவது போன்ற காட்சியைப் படமாக்கியிருக்கிறார்கள். எந்திரன் ஷூட்டிங் என்றதும் வழக்கம்போலவே அந்தப் பகுதி முழுக்க பரபரப்பு தொற்றிக் கொண்டதாம்.கிராமப்புற மக்கள் என்றில்லாமல், சிறுசேரி சிப்காட் மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஐடி நிறுவன பணியாளர்களும் கிடைக்கிற கேப்பில் ஷூட்டிங்கை வேடிக்கைப் பார்க்க குழுமிவிட்டார்களாம்.எந்திரன் யூனிட்டைச் சேர்ந்த முக்கிய டெக்னீஷியன் ஒருவர் கூறுகையில், “படத்தின் காட்சியமைப்புகளில் பிரமாண்டம் மட்டுமல்ல… லாஜிக் மீறல் இல்லாமலும் இருக்க வேண்டும் என்பது ஷங்கரின் கட்டாய உத்தரவு. காரணம் ரஜினி சார் இந்த விஷயத்தில் மிகத் தெளிவாக இருப்பதுதான்.ஒவ்வொரு காட்சியும் சர்வதேசத் தரத்தில், எந்த நாட்டு திரைத் தொழில்நுட்ப வல்லுநராக இருந்தாலும் வியக்கும் அளவுக்கு இருக்கும்..", என்றார். 2010- எந்திரன் ஆண்டு எனும் அளவு பிரமாண்ட வெளியீடாக இந்தப் படத்தைக் கொண்டு வர திட்டமிடுகிறது சன் பிக்சர்ஸ்!
No comments:
Post a Comment