எந்திரன்..ரகசியங்களை திறக்கும் ஷங்கர்!
தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் ரஜினியின் நடிப்பில் ஷங்கர் உருவாக்கும் 'எந்திரன்-தி ரோபோ'. பாதிப் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கிட்டத்தட்ட ரூ.200 கேடி செலவில் சன் பிக்சர்ஸ் மிகப் பிரமாண்டமாக உருவாக்கி வரும் இந்த சர்வதேச தமிழ் திரைப்படம் குறித்து இதுவரை வெளிவந்த செய்திகளில் பெரும்பாலானவை அவரவர் மனம் போன போக்கில் எழுதப்படவையே.இதில் உண்மை எது, கப்ஸா எது என்றே தெரியாத நிலை. ஷங்கரோ படப்பிடிப்பு முடிந்த பின்னரும் கூட வாய் திறக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் ரகம்.ஆனால் இந்த முறை அப்படியெல்லாம் விட்டுவிட முடியாது, இந்த நெருக்கடியான காலகட்டத்தில் எக்கச்சக்கமான இன்வெஸ்ட்மெண்ட், பாதுகாப்பாக படத்தைக் கொண்டு போய் சேர்க்க வேண்டியிருப்பதால் படம் குறித்து முதல் முறையாக வாய் திறந்துள்ளார்.அவர் அளித்துள்ள பேட்டி: தமிழில் பேண்டஸி கதைகள் நிறைய வரவேண்டும். எந்தப் படத்தையும் கொடுக்க வேண்டிய விதத்தில் கொடுத்தால் தமிழ் ரசிகர்கள் விரும்பி வரவேற்பார்கள்.ஃபேண்டஸி கதைகளை தமிழில் மிக அழகாக, பிரமாண்டமாகத் தரமுடியும். அதற்கான உலக மார்க்கெட் உருவாகியுள்ளது.எந்திரன் என்னுடைய, ரஜினி சாருடைய கனவுப் படம் என்பது உண்மையே.இந்தப் படத்தில் அனிமேட்ரானிக்ஸ் எனும் புதிய உத்தியைப் புகுத்தியுள்ளேன். ஹாலிவுட் படங்களில் இப்போது அறிமுகமாகியுள்ள உத்தி. இதற்கு முந்தைய படங்களில் அனிமேஷன் முறையில் படங்கலை வரைந்து கிராபிக்ஸ் செய்வார்கள். இப்போது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ரோபோடிக்ஸ் டெக்னாலஜியைப் பயன்படுத்தி பொம்மைகளுக்கு உயிர் கொடுத்து உலவ விட்டிருக்கிறோம். எந்திரனில் மிக அற்புதமான, விஞ்ஞான அடிப்படியிலான செட்களை உருவாக்கியுள்ளோம். முழுக்க முழுக்க 'ப்யூச்சரிஸ்டிக்' செட்கள் அவை. மிகச் சிறப்பாக வந்துள்ளன. ஒவ்வொரு பாடலும் அட்டகாசமாக எழுதப்பட்டு, அருமையாக மெட்டமைக்கப்பட்டுள்ளன...ரஜினியுடன்...சிவாஜிக்குப் பிறகு மீண்டும் ரஜினி சாருடன் பணியாற்றுவது மகிழ்ச்சியான ஒரு அனுபவம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவருடன் பணியாற்றத் துவங்கிய பிறகுதான் அவர் எத்தனை பவர்ஃபுல் மனிதர், எத்தனை எளிமையானவர், பணிவானவர் என்பதைப் புரிந்து கொண்டேன். அவருடன் பணியாற்றுபவர்களுக்கும் அவரது இந்தப் பணிவு வரும் என்பதே உண்மை.எந்திரனில் தனி காமெடி ட்ராக் கிடையாது. கதையிலேயே தேவையான நகைச்சுவை உள்ளது. கருணாஸும் சந்தானமும்தான் காமெடி பகுதியை செய்கிறார்கள்.சிவாஜியில் இடம்பெற்ற ஸ்டைல் ஸாங்கைவிட பலமடங்கு புதுமையான பாடல் ஒன்று இந்தப் படத்திலும் இருக்கு. ரஜினி சார் பிரமிக்க வச்சிருக்கார். அந்தப் பாடலுக்கு நடனம் அமைத்த பிரபு தேவாவே, நான் இதுவரை இப்படி ஒரு கடினமான மூவ்மெண்டை அமைத்ததில்லை என்றார். அந்த அளவுக்கு வித்தியாசமான ரஜினியையும், அவரது ஸ்டைல் நடனத்தையும் பார்க்கப் போகிறீர்கள்!" என்கிறார் ஷங்கர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment