கிராபிக்ஸ் (CG) மூலம் காட்சிகள் வடிவமைக்கப்பட்ட பிறகே படப்பிடிப்பு நடத்தப்படுகிறது - எந்திரன் ஆச்சரியங்கள்!!


சூப்பர் ஸ்டாரின் சிவாஜி திரைப்படம், விற்பனை முதல் வசூல் வரை பல சாதனைகளை படைத்தது. அதுமட்டுமின்றி டெக்னிக்கலாக பல விஷயங்கள் சிவாஜி படத்தில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
அதுபோல் தற்போது தயாரிப்பிலிருக்கும் எந்திரன் படம் சிவாஜியை விட பல மடங்கு ஆச்சரியங்களை உள்ளடக்கி இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ரத்னவேலு இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் எந்திரன் குறித்து கூறியிருப்பதை மட்டும் கீழே தருகிறேன். நேரத்தை சேமிக்கும் பொருட்டு படத்திற்கான Computer Graphics CG பணி உடனுக்குடன் சுடச் சுட தயாராகி வருகிறது என்று நாம் முன்பே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்து உங்களுக்கு நினைவிருக்கலாம்.
எந்திரனில் கடைப்பிடிக்கப்படும் புதிய வழிமுறைகள்
“எந்திரன் ஷங்கர் சாரின் லட்சியப் படம். நான் இதற்க்கு முன்பு ஒளிப்பதிவு செய்த சேது, வாரணம் ஆயிரம் போன்று உணர்வுப்பூர்வமாக இல்லாமல் எந்திரன் மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும். இது என் தனிச் சிறப்பு வாய்ந்தது என்று கூற பல காரணங்கள் இருக்கின்றன. பொதுவாக படப்பிடிப்பு முழுதும் முடிந்தவுடன் Computer Graphics CG பணி மேற்க்கொள்ளப்படும். ஆனால் என்திரனில் அது உடனக்குடன் செய்யப்படுகிறது. நாங்கள் ஏற்கனவே பல ‘Pre-production’ பணிகள் செய்துவிட்டோம். சொல்லப்போனால் படப்பிடிப்பை விட இதற்க்கு தான் அதிக சிரத்தை எடுத்துக்கொண்டோம். இதன் மூல பணத்தையும் நரத்தையும் நன்கு மிச்சப்படுத்தலாம். நாங்கள் இதுவரை ஒன்றிரண்டு பாடல்கள் மற்றும் சில காட்சிகளை தான் எடுத்திருக்கிறோம். தமிழ் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு காட்சி எப்படி இருக்கவேண்டு என்று Computer Graphics மூலம் தீர்மானிக்கப்பட்ட பிறகே அது படம் பிடிக்கப்படுகிறது. CG யை பார்த்த பிறகு நிபுணர்கள் அந்த காட்சியை படம்பிடிக்க தேவையான வழிமுறைகள் மற்றும் அதற்க்கு தேவையான பட்ஜெட் குறித்து தங்கள் ஆலோசனைகளை வழங்குகிறார்கள். எந்திரனை பொறுத்த வரை என் திறமையை காட்ட ஷங்கர் எனக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார். எதையும் திட்டமிட்டே அவர் செய்கிறார். (Courtesy: Times of India)
…………………………………………………………………………………………………………………
உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்…
அதெப்படி CG மூலம் எடுக்க வேண்டிய காட்சிகளை தீர்மானிக்கிறார்கள்?
பொதுவாக அனிமேஷன் செய்பவர்கள் தாங்கள் எடுக்கவேண்டிய காட்சி குறித்து முதலில் Story Board வரைவார்கள். அதை அடிப்படையாக வைத்து அனிமேட் செய்வார்கள். நேரத்தை, மனித சக்தியை இதன் மூலம் பெருமளவு மிச்சப்படுத்தலாம். இதை தான் ரத்னவேலு கூறியிருக்கிறார்.காஸ்ட் கண்ட்ரோலுக்கு (Cost Control) இது நிச்சயம் தேவை. அதுமட்டுமின்றி நாம் மனதில் நினைப்பதை கொண்டுவர இந்த Story Board மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை அனிமேஷனுக்கு மட்டும் தான் பயன்படுத்தவேண்டும் என்பதில்லை. இது போன்ற Pre-production பணிகளுக்கும் பயன்படுத்தலாம். இதன் மூலம் எடுக்க வேண்டிய காட்சி என்னவென்று ஒரு ஐடியா முன்கூட்டியே கிடைத்துவிடுகிறது. ஆகையால் படச் சுருள் பயன்பாடு (Film Roll usage), படப்பிடிப்பு நேரம், ஷூட்டிங் செலவு என அனைத்தையும் கட்டுக்குள் கொண்டுவரலாம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...