என்னுடைய பதினெட்டு ஆண்டு கால திரையுலக அனுபவத்தில் நான் பார்த்த முதல் அதிசய மனிதர் சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்கிறார் பிரபல ஆடை வடிவமைப்பு நிபுணரான மனீ்ஷ் மல்ஹோத்ரா.இந்தியாவின் மிகச்சிறந்த ஆடை வடிமைப்பாளர்களில் ஒருவர் மனீ்ஷ் மல்ஹோத்ரா. சிவாஜியில் தொடங்கி இப்போது எந்திரன் வரை இவர்தான் ரஜினிக்கு காஸ்ட்யூமர்.சென்னையில் தான் புதிதாக வடிவமைத்துக் கொடுத்த ஒரு ஹை ஸ்டைல் உணவகத்தைத் திறந்து வைக்க வந்திருந்த, மனீ்ஷ் மல்ஹோத்ரா, பின்னர் நிருபர்களிடம் பேசினார். நானும் அமிதாப், ஷாரூக், ஆமிர் கான் என பலருடன் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் ரஜினியுடன் பணியாற்றியது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். அவரைப் போன்ற எளிமையான மனிதரைப் பார்க்க முடியாது. ரஜினியுடன் ஒரு முறை பழகினாலே, பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். அவர் போல நேரம் தவறாத மனிதர்களைப் பார்ப்பது இன்றைய திரையுலகில் அரிது. அவர் நமக்கு முன்னால் வந்துவிடுவாரே என்ற நினைப்பே, என்னை சீக்கிரம் வரவைத்துவிடுகிறது.
அவருடன் பழகுபவர்கள் பெரும்பாலும் தங்கள் தவறுகளைத் தாங்களே திருத்திக் கொள்கின்றனர். இதுதான் ரஜினி எனும் மனிதரின் சிறப்பு. அவரை எப்போதும் ஒரு உலகப் புகழ் பெற்ற நாயகனாகப் பார்க்க முடியாது. ஒரு எளிய மனிதராகத்தான் பார்க்க முடியும். அது எப்படி அவருக்கு மட்டும் சாத்தியமாகிறது என்று புரியவில்லை என்றார் மனீஷ்.

No comments:
Post a Comment