வேலூரில் எந்திரன் படப்பிடிப்பு, சூப்பர் ஸ்டார் கலந்துகொண்டு நடித்து வருகிறார் என்று தெரிந்தது தான் தாமதம், சாரை சாரையாக நம் ரசிகர்கள் நாள்தொறும் வி.ஐ.டி. க்கு படையெடுத்து வருகின்றனர். உள்ளே அனுமதிக்கப் படாவிட்டாலும் வெளியே இருந்து படப்பிடிப்பு நடக்கும் அந்த இடத்தை பெருமையுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.
பொதுவாக விடுமுறை காலத்தை விரும்பும் மாணவர்கள், “அடடா இப்போது பார்த்து விடுமுறை சீசனாக போய் விட்டதே” என்று வருத்தப்படுகின்றனர்.
இருப்பினும் உள்ளே செல்ல நம் ரசிகர்களுக்கு தெரியாத டெக்னிக்கா? தங்கள் யூனிவெர்சிட்டி ஐ.டி. கார்டை காண்பித்து, ‘பயோ-டெக் ப்ராஜெக்ட்’ என்று கூறி நம் ரசிக மாணவர்கள் சிலர் உள்ளே புகுந்துவிட்டனர். சிறிது தூரத்திலிருந்து சூப்பர் ஸ்டாரை தரிசித்தவர்கள், தங்கள் அனுபவங்களை அனைவருக்கும் சொல்லி சொல்லி புளங்காகிதமடைகின்றனர்.
கருப்பு டி.ஷர்ட், கருப்பு ஜீன்ஸ், கருப்பு கூலிங் க்ளாஸ்
அன்று அவர்கள் பார்த்தபோது தலைவர் இருந்த தோற்றம்: கருப்பு டி.ஷர்ட், கருப்பு ஜீன்ஸ், கருப்பு கூலிங் க்ளாஸ் (வாவ்!!) - மீசையின்றி!! பார்ப்பதற்கு ‘தில்லுமுல்லு’ அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன் போல அவர் இருந்ததாக கூறப்படுகிறது. புகைப்படம் எடுக்க கடும் கட்டுபாடுகள் இருந்தபடியால் படம் எதுவும் எடுக்க இயலைவில்லை. (தகவல் உதவி: ரோபோ சத்யா)
படப்பிடிப்பில் ரசிகர்களின் கட்டுங்கடங்காத கூட்டத்தை பற்றியும் நேற்று எடுக்கப்பட்ட காட்சிகள் குறித்தும் இன்றைய தினத் தந்தி வேலூர் பதிப்பில் வந்த செய்தி இணைக்கப்பட்டுள்ளது. எவ்வித பாரபட்சமும் இன்றி எந்திரன் செய்தியை தவறாது எங்களுக்கு அளித்து வரும் தந்தி குழுமத்திற்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.
//ரஜினிகாந்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வி.ஐ.டி. பல்கலைகழகத்தின் வெளியே குவிந்திருந்தனர். ஏராளமான ரசிகர்கள் வெளியே நின்றிருக்கும் தகவலை கேட்ட ரஜினிகாந்த் வெளியே வந்து ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கையை அசைத்தார். ரஜினிகாந்தை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து சூப்பர் ஸ்டார் வாழ்க என கோஷமிட்டனர்.
ரசிகர்கள் குவிந்ததால் காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பட்டாபி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். நேற்றும் பட யூனிட் குழுவினரை தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.//
முழு செய்திக்கு இணைக்கப்பட்டுள்ள பேப்பர் கட்டிங்கை பார்க்கவும்.

No comments:
Post a Comment