சில விஷயங்கள் ஏன் நடக்கிறது, எதற்கு நடக்கிறது என்ற கேள்விக்கான விடை அந்த ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும். எந்திரனின் தயாரிப்பாளராக திடீரென சன் டி.வி. வந்திருப்பதும் அப்படி தான்.
சில ஆண்டுகளுக்கு முன்பு…
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விகடனின் இலவச இணைப்பு ஒன்றில் கலாநிதி மாறனின் பேட்டி மற்றும் அவரது எதிர்க்கால் லட்சியங்கள் குறித்து செய்திகள் இடம்பெற்றிருந்தன. சன் நெட்வொர்க் தோன்றியது எப்படி, உடனிருக்கும் தளபதிகள் யார் யார் இதைபற்றியெல்லாம் அந்த இதழில் கலாநிதி மாறன் சுவையாக கூறியிருந்தார்.
வீட்டில் எதையோ நான் தேடிக்கொண்டிருக்கையில் கிடைத்தது இது. சுவாரஸ்யமாக இருந்ததால் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.
அந்த சிறப்பிதழில் தனது ரோல் மாடல்களாக பத்து பேரை பட்டியலிட்டிருந்தார் கலாநிதி. அதில் சூப்பர் ஸ்டாரும் ஒருவர்.
அந்த பட்டியல்லுக்கு அவர் அளித்த முன்னுரை என்ன தெரியுமா?
“நாம் சந்திக்கிற ஒவ்வொரு மனிதரும் நமக்கு ஒரு குருவே. அவரிடமிருந்து ஏதாவது ஒன்றை நாம் கற்றுக்கொள்ளலாம் என்று நினைப்பவன் நான். எனக்கு அப்படி வாழ்க்கையை கற்றுத்தந்த ரோல் மாடல்கள் உலகம் முழுக்க உண்டு. எனது டாப் 10 ரோல் மாடல்கள் பற்றி இங்கே சொல்கிறேன்”.
சூப்பர் ஸ்டாரை பற்றி அவர் கூறியிருந்தது இங்கு இணைக்கப்பட்டிருக்கிறது.
ரஜினி… இவரது ரசிகன் நான்! என் பள்ளிப்பருவத்தில் அவரது படங்கள் பார்க்க, ரிலீஸ் தேதியிலேயே தியேட்டருக்கு ஓடிய நினைவுகள் என் நெஞ்சில் நிழலாடுகின்றன. அத்தனை அழகில்லை. அத்தனை நிறமுமில்லை. ஆனாலும், இன்றும் தமிழக அகராதியில் ஸ்டைல் என்றால் அது ரஜினி!
பஸ் கண்டக்டர் சிவாஜி ராவ், மாநிலம் போற்றும் சூப்பர் ஸ்டாரான கதை, ஒவ்வொரு மனிதனுக்கும் தருகிற தன்னம்பிக்கை இருக்கிறதே… அது தான் ரஜின்யின் மிகப் பெரிய ஸ்டைல்!
மூன்று நான்கு ஆண்டுகள் ஆகியிருந்தாலும் அந்த பழைய விகடனை புரட்டியபோது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் இன்று? ஹூம்…. எப்படியிருந்த விகடன் இன்று இப்படி ஆகிவிட்டதே!! பெருமூச்சு தான் வருகிறது.

No comments:
Post a Comment