நிலைத்த, நீடித்த, உறுதியான வெற்றிக்கு தயாராகும் ரஜினி!!




சமீபத்தில் நடந்த ரசிகர் சந்திப்பு மூலம் மிகப் பெரிய சமூக மாற்றத்திற்கான விதையை அமைதியாக தூவிவிட்டு எதுவுமே தெரியாதது போல ‘எந்திரன்’ படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் சூப்பர் ஸ்டார்.
ரஜினியின் அரசியல் வாழ்க்கை மற்றும் அதற்கான வாய்ப்புகளை ரசிகர் சந்திப்புக்கு முன்பு மற்றும் ரசிகர் சந்திப்புக்கு பின்பு என்று பேசாமல் பிரித்துவிடலாம். அந்தளவு மக்களிடையே ரசிகர்களிடையே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த சந்திப்பு. அதே போல சூப்பர் ஸ்டாரும் முன்னெப்போதும் இல்லாத உற்சாகத்தில் இருக்கிறார். ஈழத்தமிழர்களுக்காக நிகழ்த்திய உண்ணாவிரத உரை மற்றும், இந்த பேட்டிக்கு பிறகு அவரது நிலையே வேறு.
கழுதை அறியுமா கற்பூர வாசம்..?
‘கழுதை அறியுமா கற்பூர வாசம்..?’ என்பது போல இந்த சந்திப்பின் முக்கியத்துவம் அது நிகழ்த்தபோகும் மாற்றம் குமுதத்தில் ஜோக்கர் பணி செய்து வரும் ‘அரசு’ போன்ற அதிமேதாவிகளுக்கு புரியாது தான். ஆனால் சராசரி மக்களுக்கு புரிந்துவிட்டது. குழப்பத்தில் தத்தளித்து கொண்டிருந்த ரசிகனுக்கு புரிந்துவிட்டது. ‘நாம் காத்திருப்பது எந்த நாளும் வீண் போகாது’ என்ற நம்பிக்கை அவனுக்கு பிறந்துவிட்டது.
வெறும் நடிகன் என்ற தகுதியை தவிர ரஜினிக்கு என்ன உண்டு என்று நினைத்துக்கொண்டிருந்த பலர் - (அவரது கடும் விமர்சகர்கள், எதிர்ப்பாளர்கள் உட்பட ) இந்த பேட்டிக்கு பிறகு தங்கள் கருத்துக்களை மாற்றிக்கொண்டுள்ளனர் என்பது கண்கூடு. சில வாரங்கள் முன்பு வரை ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி மாற்றுக்கருத்து கொண்டிருந்த பலர் தற்போது பேட்டிக்கு பிறகு மனம் மாறியிருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை. (ஆனால் நம் ரசிகர்களில் சிலர் இன்னும் அவரை சந்தேகக்கண்கொண்டு பார்ப்பது தான் கொடுமை!!)
ஆக்கபூர்வமான ஆலோசனைகள் சொன்ன சினிமா எக்ஸ்பிரஸ்
ரஜினியை வைத்து சம்பாதித்துவிட்டு அவரையே குறை கூறிக்கொண்டிருக்கும் பத்திரிக்கைகளுக்கு நடுவே, ‘சிருவும் எந்திரனும்’ என்ற கட்டுரையின் மூலம் ரஜினி என்ன செய்யவேண்டும் என்ற வித்தியாசமான கோணத்தில் அலசி, ஆக்கபூர்வமான ஆலோசனைகள் சொன்னது சினிமா எக்ஸ்பிரஸ். அவர்கள் கட்டுரை வெளியிட்ட நேரம் சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருவது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டு குழப்பம் விளைவிக்கும் ரசிகர்களை அதில் எச்சரித்திருந்தார்.
அதற்கடுத்து சமீபத்தில் ‘விடாக்கண்டர்களும், கொடாக்கண்டர்களும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டு ரஜினியின் அசைவுகளுக்கு காரணம் அரசியல் அல்ல அவருக்குள் இருக்கும் ஒரு சராசரி குடிமகனே என்றும் அவரது முடிவுகளில் எள்ளளவும் சுயநலம் இருந்ததில்லை என்றும் ஆணித்தரமாக மீண்டும் ஒரு முறை உணர்த்தியது சினிமா எக்ஸ்பிரஸ். அதையே நாம் ஆபாச விகடனின் “தந்திரன் - ரஜினியின் முடிவுகளுக்கு பின்னால்….” என்ற கட்டுரைக்கு பதிலடியாக தந்திருந்தோம்.
இனிமே தான்டா இருக்கு வான வேடிக்கையே
இதோ ரசிகர் சந்திப்பிற்கு பிறகு - மீண்டுமொருமுறை சூப்பர் ஸ்டாரை பற்றிய சூப்பர் அலசல் கட்டுரை ஒன்றை திகட்ட திகட்ட தந்திருக்கிறது சினிமா எக்ஸ்பிரஸ்.
ரஜினியின் எதிர்கால திட்டங்களை அலசி, இனி தான்டா இருக்கு வான வேடிக்கையே என்று கூறுகிறது இந்த அலசல். மேலு நிலைத்த, நீடித்த, உறுதியான வெற்றிக்கு ரஜினி தன்னை தயார் படுத்தி வருவதாக கூறுகிறது இந்த கட்டுரை.
மேலோட்டமாக படித்தால் புரியாது
இது ஒரு HEAVY WEIGHT கட்டுரை. சும்மா மேலோட்டமாக படித்தால் புரியாது. எந்த வித வெளிப்புற தொந்தரவும் இல்லாமல் (without any external disturbance) அமைதியான ஒரு சூழலில் இந்த கட்டுரையை படிக்கவேண்டும். படித்துவிட்டு அசைபோடவேண்டும். அப்போது தான் இது சொல்லவரும் விஷயங்களை கிரகித்துக்கொள்ள இயலும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...