“ரஜினி என்ற மாவீரன் போற்றப்படவேண்டும்; தூற்றபடக்கூடாது” - ஆபாச.விகடனுக்கு பதிலடி




நான் ஏற்கனவே எச்சரித்திருந்த படி, சூப்பர் ஸ்டாரின் உண்ணாவிரததையும், அவரது சமீபத்திய ரசிகர் சந்திப்பையும் கொச்சை படுத்தி, தூ.வி.யும், இன்று வெளிவந்துள்ள ஆபாச.வியும் கட்டுரைகள் எழுதியுள்ளன.
விமர்சனங்களை வரவேற்கும் ரஜினி - விமர்சிக்க இவர்களுக்கு தகுதியுண்டா ?
சூப்பர் ஸ்டார் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவர் அல்ல. அவற்றை அவர் வரவேற்றே வந்துள்ளார். விமர்சனங்களை பொறுத்தவரை, அவர் எவ்வளவோ பார்த்துவிட்டார். அவைகள் அவருக்கு உரமிட்டிருக்கின்றனவே தவிர, அவரை வேறு ஒன்று செய்யமுடியவில்லை. அவரும் சம்பந்தப்பட்ட பத்திரிக்கைகளுக்கு எதிராக கூட இதுவரை பேசியதில்லை.
நிலைமை இப்படி இருக்க, அவரைப்பற்றி யாராவது எழுதினால், என் பொருட்படுத்துகிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். வாஸ்தவம்தான். அப்படி எழுதுபவர்களது நோக்கம் தான் நம்மை சினங்கொல்லச் செய்கிறது. ஒரு விமர்சகனாக அனைவரையும் விமர்சித்துவிட்டு ரஜினியையும் விமர்சித்து எழுதினால் ஒ.கே. ஆனால், நம் விமர்சகர்கள் அப்படியா?
ஞானசூன்யத்துக்கு ஒரு கேள்வி
ஏதோ தான் நடுநிலையாளன் என்பது போல் காட்டிக்கொள்ளும் ஞானி, மற்றவர்களைவிட்டுவிட்டு, திரும்ப திரும்ப தி.மு.க. தலைவரையும், ரஜினியையும் மட்டுமே மட்டமாக விமர்சிப்பது ஏன்? அரசியல் கட்சி தலைவராக நாளொரு காமெடி காட்சி அரங்கேற்றி வரும் விஷகாந்தையும், பொறுப்புள்ள எதிர்கட்சி தலைவராக முழுதும் பரிணமிக்காத ஜெயலலிதாவையும் இவர் விமர்சிக்க மறுப்பது ஏன்? அவர்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களா? அல்லது அவர்கள் விமர்சிக்க கூடிய எதையும் செய்யவேயில்லையா? விஷகாந்தின் மாநாட்டு குளறுபடிகளையும், பொதுமக்களே முகம் சுளித்த ஆடம்பரத்தையும், அதற்காக அவரது தொண்டர்கள் பணத்தை தண்ணீராக வாரியிரைத்ததைப் பற்றியும் சிங்கார சென்னை அதனால் நாறியதையும், மாநாட்டு உரையில் வெளிப்பட்ட விஷகாந்தின் அரவேக்காட்டுதனமான, சுயநலம் கொண்ட, உரையை ஏன் விமர்சிக்கவில்லை? ‘ஐயோ’ பக்கங்களில் ஏன் குட்டவில்லை?
ஒருவர் பெட்டி தருகிறார். மற்றவர் இவரது வக்கிரத்தை தொலைக்காட்சியிலும் கொட்ட ஸ்லாட் (ஜெயா.டி.வி.) தருகிறார். இது தான் இவனது நடுநிலையின் லட்சணம்.
ஞானி, விகடன், தினமலர் ஆகிய இந்த ஓநாய்கள், விஷகாந்தை வளர்த்துவிடவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக ரஜினியை தரக் விமர்சிப்பதுதான் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ரஜினி மீது ரசிகர்களுக்கு விரக்தி வர வேண்டும், வெறுப்பு வர வேண்டும், அது விஷகாந்துக்கு ஆதரவாக மாறவேண்டும் - இவர்களது லட்சியம், நடுநிலைமையின் லட்சணம். (ஹொகேனக்கல் வருத்த சர்ச்சையில், “இனி ரஜினி சூப்பர் ஸ்டார் அல்ல” என்றான் இந்த ஞானி) ரசிகர்கள் இவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடக்கூடாதே என்று தான் நான் நண்பர் வினோ ஆகியோர் விஷகாந்துக்கு எதிரான பதிவுகளை போட்டோம்.
விகடனுக்கு சினிமா எக்ஸ்பிரஸ் சரியான பதிலடி
மேட்டருக்கு வருவோம். இன்றைக்கு வெளியாகியிருக்கும் ஆபாச.விகடனின் கட்டுரைக்கு தக்க பதிலடி தருவது போல் யதார்த்தமாக அமைந்துவிட்டது நான் இந்த பதிவில் இணைத்திருக்கும் சினிமா எக்ஸ்பிரஸ் கட்டுரை. சிருவும், இந்திரனும் என்கின்ற அருமையான ஒரு கட்டுரை எழுதியிருந்த நரேந்திரா கமல்ராஜ் என்பவர் தான் இதையும் எழுதியுள்ளார். ரசிகர்களின் அரசியல் எதிர்ப்பார்ப்புகளுக்கு ரஜினி காரணமல்ல என்று இந்த கட்டுரை சொல்கிறது. அவரை அரசியலிலிருந்து அந்நியப்படுத்திக் காண்பித்தாலும், ஆண்டவன் என்கின்ற பெரும் சக்திக்கு அவர் கட்டுப்பட்டவர் என்று கூறுகிறது இந்த கட்டுரை. ஒரு சில இடங்களில், ரஜினியை விமர்சித்து அவரை குறை கூறியிருப்பதே இது நடுநிலையாக எழுதப்பட்டுள்ளது என்பதற்கு சாட்சி. கட்டுரையாளருக்கு நெஞ்சார்ந்த நன்றி.
கட்டுரையின் கடைசி வரிகள் தான் விகடனுக்கு பதிலடி:“ரஜினி என்கின்ற சுத்த வீரன், போற்றத்தான் பட வேண்டுமேயொழிய, தூற்றப்படக்கூடாது.”
(நண்பர் ஈ.ரா. கூறியதைப் போல இறைவன் போட்ட விதைக்கு மழை தானாகவே கிடைக்குது பார்த்தீர்களா?)

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...