கடையடைப்பு தீர்வாகுமா? ரஜினி சொன்ன அற்புதமான யோசனை…




ஏதாவது ஒரு பிரச்னை, போராட்டம் என்றால் நம்மவர்களுக்கு தோன்றும் ஒரே தீர்வு பந்த் மற்றும் கடையடைப்பு தான்.
பந்த் அறிவிக்கப்படும் நாளில், இதனால் விடுமுறை கிடைப்பவர்கள் ஒன்று திரையரங்குகளில் படம் பார்த்துகொண்டோ அல்லது வீட்டில் தூங்கிக்கொண்டோ தங்கள் பொழுதை போக்கி பந்தை அனுஷ்டிப்பர்.

நேற்று தமிழகம் முழுதும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து வியாபாரிகள் சங்கத்தினர் முழு கடையடைப்பு நடத்தினர். பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.
இந்த கடையடைப்பால் வியாபார்களுக்கு கோடிகணக்கான பொருள் நஷ்டம், வருவாய் இழப்பு, உற்பத்தி குறைவு, அரசாங்கத்திற்கு பல கோடிகள் வரி இழப்பு - இது தான் இந்த கடை அடைப்பு சாதித்தது.
இதனால் யாருக்கு என்ன பயன்?
சூப்பர் ஸ்டாரின் தொலைநோக்கு பார்வை…
ஆனால், சூப்பர் ஸ்டார் பல ஆண்டுகளுக்கு முன்பே, 1985 பத்திரிகை பேட்டி ஒன்றிலும், அதற்க்கு பிறகு 1995 தூர் தர்ஷன் பேட்டியிலும், இப்படி தங்கள் வேலையை விட்டுவிட்டு, கடையடைப்புகள் நடத்துவதால் யாருக்கு என்ன லாபம்? இல்லை அதன் மூலம் நம் குறிக்கோள் தான் நிறைவேறுகிறதா?
சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதன் மூலம் ஏதாவது பிரயோஜனம் உண்டா? அதற்க்கு பதிலாக, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நம் ஆதரவை தெரிவித்தும், அவர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாம் அனைவரும் கருப்பு கொடி குத்தி அவரவர் பணியை செய்வோம். பின்னர் நம் ஒரு நாள் ஊதியத்தை திரட்டி அவர்களுக்கு நிவாரண உதவி அளிப்போம். எதிர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவத்த மாதிரியும் ஆயிற்று, நமது பணியையும் செய்தமாதிரி ஆயிற்று, அரசுக்கும் வருவாய் இழப்பு இருக்காது. நமக்கும் நம்மால் முடிந்ததை செய்தோம், என்ற மன நிறைவும் கிடைக்கும்” என்றார்.
ஒரு வேளை, எதிர்காலத்தில் - எந்த ஒரு பிரச்னைக்கும் - இந்த முறை பின்பற்றப்பட்டால், இதற்க்கு முதலில் குரல் கொடுத்தவர் சூப்பர் ஸ்டார் தான் என்பதை நாம் மறக்கக்கூடாது. அனைவரிடத்திலும் இதை எடுத்துசொல்லவும் நாம் தயங்கக் கூடாது.
(ஞான சூனியமும் குமுதத்தில் இதைத்தான் குமுதத்தில் சமீபத்தில் கூறியிருக்கிறது. ஆனால் தலைவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த யோசனையை கூறினார். சொன்னது ரஜினி என்பாதாலயோ என்னவோ, அதை செய்ய பொறுப்புள்ளவர்கள் தயங்குகின்றனர்.)
குறிப்பு: உண்ணாவிரதம் குறித்த நம் பதிவு, எப்போது வெளிவரும் என்று தெரியாது. சூப்பர் ஸ்டார் வரும் சமயம் அங்கு நேரில் சென்று நடப்பவற்றையும் அவரது உரையையும் கவர் செய்துவர முயற்ச்சிக்கிறேன். அலுவலகத்தில் எனக்கு கிடைக்கும் பர்மிஷனை பொறுத்தது அது. ஆகையால் நண்பர்கள் சற்று பொறுமையாக இருக்கவும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...