சொந்த அலுவல் காரணமாக இரண்டு நாட்கள் தென்காசி வந்திருக்கிறேன். நேற்றிரவு சென்னை எழும்பூரிலிருந்து பொதிகை எக்ஸ்பிரசில் கிளம்பினேன்.
வண்டியில் என் சீட்டை தேடிக் கண்டுபிடித்து செட்டில் ஆனவுடன், எதிர் சீட்டில் உட்கார்ந்திருந்த நபர், தன் தாயாருக்காக என் பெர்த்தை மாற்றிகொள்ளமுடியுமா என்று கேட்டார். “ஒ தாரளமா, பட் செங்கல்பட்டு தாண்டியவுடன் தரட்டுமா?” என்றேன். சந்தோஷமாக தலையசைத்தார். “உனக்கு ஜன்னல் சீட் இந்த முறையும் ராசியில்லைடா மச்சி” என்று நினைத்துகொண்டேன்.
ரயில் கிளம்பிவிட்டால் செல்லுக்கு சிக்னல் கிடைப்பது சிரமம் என்பதால் சீட்டில் செட்டில் ஆனவுடன் முதல் வேலையாக, பேசவேண்டியவர்களிடம் எல்லாம் செல் பேசினேன். நான் பேசி முடித்தவுடன் எதிர் சீட்டு நபர் ஆர்வமாக, “சார்…நீங்க பத்திரிகைகாரரா?” என்று கேட்டார். (ஹி…ஹி…!!)
நம்மை முழுமையாக அடையாளப்படுத்திக் கொண்டால் இவரிடம் விஷயத்தை வாங்க முடியாது என்பதால் “நான் ஒரு Freelance Photograher. கம்ப்யூட்டர் டிசைனராக பணிபுரிந்து வருகிறேன். நண்பர்கள் அழைத்தால் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு சும்மா ஒரு பார்வையாளனாக செல்வேன் அவ்வளவுதான்,” என்று என் பணியின் ஒரு பகுதியை மட்டும் அறிமுகப்படுத்தி கொண்டேன். அவர் சிவகாசியில் ஒரு பட்டாசு கம்பெனியில் சூப்பர்வைசராக பணிபுரிபவர் என்று தெரிந்துகொண்டேன்.
ரயில் புறப்பட ஆரம்பிக்க, எங்கள் பேச்சு வளர்ந்தது. மின்வெட்டு முதல் அமெரிக்க வங்கிகள் திவால் வரை பல விஷயங்கள் பேசினோம். இறுதியாக சாமர்த்தியமாக தலைவரின் அறிக்கை குறித்து அவரிடம் பேச்சை வரவழைத்தேன்.
“இன்னிக்கி பேப்பர் பார்த்தீங்களா? நான் பார்க்க முடியல. என்ன சொல்றார் ரஜினி சார்? அரசியலுக்கு வர்ராரா இல்லியாமா?” என்றேன் அப்பாவியாக. (அவரருகில் தந்தி பேப்பர் இருந்தது!)
“கட்டயப்படுதினா எல்லாம் அரசியலுக்கு வரமுடியாது. நானா இஷ்டப்பட்டு வருவேன்னு சொல்லியிருக்கிறார்” என்றார் பதிலுக்கு.
“ரசிகர்களை ஏதோ சொல்லிட்டார்னு என் ஆபீஸ்ல சொன்னாங்க…?” - நான்
“ஒண்ணுமில்லை ஓவரா ஆடிக்கிட்டிருந்த ரசிகர்கள் வாலை நறுக்கியிருக்கிறார் அவரு,” என்றார்.
“ஏன் என்னாச்சு?”
“ஏதோ ஒரு ஊர்ல ரசிகருங்க அவர் பேர்ல கட்சியெல்லாம் ஆரம்பிச்சாங்க போல…”
“ஏன் சார் அவங்க செஞ்சதுல என்ன தப்பு? இவரா வரமாட்டாரு..இவங்களாவது வரட்டுமே?” இது நான்.
“நீங்க வேற. நாளைக்கு விளையாட்ட இவங்க எலெக்ஷன்ல நிக்கபோயி தோத்துட்டா நாளைக்கு ரஜினி பேறு இல்ல கேட்டுபோயிடும்?”
“அதுக்குத் தான் அவரை கூபிடுறாங்க…”
“அதுக்கு இது சரியான நேரம் இல்லை சார். இவனுங்க பேச்சை கேட்டு அவர் இப்போ கட்சியை ஆரம்பிச்சா அப்புறம் ஆத்துல ஒரு கல் சேத்துல ஒரு கால்ல்னு ஆயிடும். எப்போ வரணும்னு அவருக்கு தெரியும் சார். சப்போஸ் தோத்துபோன இன்னிக்கி அவரை இப்படி கூப்பிடுறவன் எல்லாம் நாளைக்கு, அவர் மேல பழிய போட்டுட்டு எஸ்கேப் ஆயிடுவான்”
“நீங்க தீவிர ரஜினி ரசிகர் போலருக்கே?”
“அப்படி இல்லை. அவர் மேல எனக்கு நல்ல மரியாதை உண்டு.” (அட்ரா சக்கை…அட்ரா சக்கை)
“எனக்கு தெரிஞ்சு இந்த பிரச்னைல நிறைய ரசிகர்கள் அவர் மேல அதிருப்தியா இருக்குற மாதிரி தெரியுது?”
“என்ன தான் அதிருப்தியா இருந்தாலும், அவர் மேல இருக்குற ஈர்ப்பு யாருக்கும் குறையாது. சும்மா பேச்சு அது…” (அப்படிப் போடு!)
“சரி வந்த அவரால ஜெயிக்க முடியுமா?”
“அதனால தான் சார் அவர் இப்போ வரலை. நாம வந்தா கண்டிப்பா ஜெயிச்சிடனும்னு அவர் நினைக்கிறார். அதனால்தான் சரியான நேரத்துக்கு வெயிட் பண்றார்.”
“எனக்கென்னவோ அவர் வரவே மாட்டாருன்னு தான் தோணுது…ரசிகர்களும் அவரை நம்ப தாயாராயில்லை” என்றேன் பதிலுக்கு.
“இல்லை சார். அவர் நிச்சயம் வருவார். பாருங்க. அப்போ இப்படி பேசுறவங்க தான் முதல்ல க்யூ கட்டி நிப்பானுங்க சேர்றதுக்கு.”
“குசேலன் படம் பார்த்தீங்களா?” என்று கடைசியாக கேட்டேன்.
“படம் எனக்கு பிடிக்கல சார். ரஜினியை வீணடிச்சிட்டாங்க.” என்றார் ஆதங்கத்துடன்.
சரி ரஜினி மீது அவர் எந்த குற்றச்சாட்டையும் வைக்கவில்லையா என்று தானே கேட்கிறீர்கள்?
அடிக்கடி அவர் பெங்களூருக்கு செல்வதை இவர் ரசிக்கவில்லை என்று புரிந்துகொண்டேன். மேலும் ஹொகேனக்கல் “வருத்தம்” பிரச்னையில் ரஜினி உறுதியாக இருந்திருக்க வேண்டும் என்றும் அந்த வகையில் தனக்கு ஏமாற்றமே என்றும் கூறினார்.
அதற்குள் ரயில் செங்கல்பட்டை தாண்ட, இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், அவரது திருமதி என்னை முறைத்துகொண்டிருப்பது புரிந்தது.
குட் நைட் கூறி ஏன் பெர்த்தில் ஏறி படுத்தேன். காலை, சிவகாசியில் இறங்குவதற்கு முன், என்னிடம் மகிழ்ச்சியாக விடைபெற்றார். அவரிடம் நம்பர் வாங்கிக்கொண்டு என் நம்பரை கொடுத்தேன்.
இவரிடம் பேசிய பலவற்றில் ரஜினி சம்பந்தமாக பேசியதையே இங்கு தந்திருக்கிறேன். ரஜினி மீது விருப்போ அல்லது வெறுப்போ அற்ற ஒரு சராசரி குடிமகனின் நிலைப்பாடு இது.
கொஞ்சம் திருப்தியாக இருக்கிறது இல்லையா?
நடுநிலையாலர்களுள் கிட்டத்தட்ட பெரும்பாலானவர்களின் கருத்து இப்படி தான் இருக்கும். அது மட்டும் உண்மை.
No comments:
Post a Comment