தலையை கொடுத்த ஷங்கர்

'தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா' என்பதெல்லாம் ஏட்டு சுரைக்காய்தான்போலிருக்கிறது. ரோபோ கதையை ஷாரூக்கானிடம் சொல்லி, அந்த திட்டம் கைவிடப்பட்டது யாவரும் அறிந்ததுதான். ஆனால், வழிவிட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டிய ஷாருக், ஷங்கருக்கு கொடுக்கும் டார்ச்சர்களை பார்த்தால், தலை நிமிர்ந்து நிற்க வேண்டிய ஷங்கர் தலையை கொடுத்துவிட்டாரோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.
'தானும் படுக்க மாட்டான். தள்ளியும் படுக்க மாட்டான்' என்று போகிற போக்கில் சொல்லப்படுகிற பழமொழிக்கு சரியான உதாரணம் இந்த ஷாரூக். ரோபோ தயாரிப்பில் இருந்து விலகிக் கொண்டவர் அப்படியே முழுவதுமாக விலகிக் கொள்ள வேண்டியதுதானே? அதை விட்டு விட்டு தானும் அதே போல ஒரு படத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறாராம். இவரை நம்பி கதை சொன்ன ஷங்கருக்கு ஷாரூக் செய்யும் துரோகம் இது என்றால், ரோபோ என்ற பெயரில் வெவ்வேறு சப் டைட்டில்களை சேர்த்து சுமார் ஒன்பது தலைப்புகளை பதிவு செய்து வைத்திருப்பது பச்சை துரோகம்.
இன்று வடமாநிலங்களிலும் வெற்றிக் கொடி நாட்டி வரும் நமது கலைஞர்கள், இனிமேல் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு ஷங்கர்-ஷாரூக் பிரச்சனை ஒரு உதாரணம்!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...