ரோபோ கையில் ரோஜா! சூப்பராக ஒர்க் அவுட் ஆன ஷங்கரின் டெக்னிக்!!


மூளை முடுக்கெல்லாம் எந்திரன் பற்றித்தான் இப்போது பேச்சு
நண்பர்களே, எந்திரன் நடைபோட துவங்கிவிட்டான். இனி எந்திரனின் கதை குறித்து பல்வேறு ஹேஷ்யங்கள், யூகங்கள், ஆரூடங்கள் வெளிவரத்துவங்கும்.
நம் பங்கி்ற்கு எந்திரன் கதை குறித்தும் அந்த படம் உரு பெற்ற விதம் குறித்தும் நான் இது வரை கேள்விப்பட்டதை தருகிறேன். சுவராஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
சிவாஜியின் வெற்றிக்கு பிறகு?
சிவாஜியின் வெற்றிக்கு பிறகு - ஒரு மலையை தூக்கிய பிரமிப்பில் இருந்தார் ரஜினி. அடுத்து என்ன படம் செய்வது, என்ற குழப்பம் இருந்தது. அதே போல், ஷங்கரும் அகில இந்திய அளவில் சிவாஜிக்குப் பிறகு அறி்யப்பட்டுவிட்டதால் ரோபோவை துவக்க இது தான் சரியான தருணம் என்று நினைத்து அது ஒட்டிய முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். ஷாருக்கை சந்தித்து கதை சொல்லி எல்லாம் ஓகேயாகி டிஸ்கஷனில் இருந்தபோது இருவருக்குள்ளும் கருத்து வேறு்பாடு ஏற்பட்டு, படம் கைவிடப்பட்டது. (எல்லாம் ஈகோ பிரச்னை தான் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்)
ஷாருக் கைவிட்டதால் பயங்கர அப்செட்டிலிருந்த ஷங்கர், தன்னை நிரூபித்து காட்டி பாலிவூட்டின் மூக்கை உடைக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டார்.

மூன்று பேர் மட்டுமே
ரோபோவை பொறுத்தவரை - அந்த பட்ஜெட்டுக்கு - அந்த படத்தை மூன்று பேர் மட்டுமே செய்யமுடியும். ஒருவர் ஷாருக். இன்னொருவர் அமீர்கான். மற்றொருவர் நம் சூப்பர் ஸ்டார். இதில் ஷாருக்குடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட, அமீர் கானுக்கு விருப்பம் இருந்தாலும் ஷங்கரை நம்பி இரு முழு ஆண்டுகள் ஒப்படைக்க அவர் தயாராக இல்லை.
நிலைமை இப்படி இருக்க, ஒரு நாள் எதைச்சையாக ஷங்கருக்கு போன் செய்த சூப்பர் ஸ்டார், அவரது அடுத்த படம் பற்றி அக்கறையுடன் விசாரிக்க, ஷங்கருக்கு மூளையில் பொறி தட்டியது. தனது உதவியாளர்களுடன் அவசரமாக விவாதித்து சூப்பர் ஸ்டாரின் இமேஜுக்கு ஏற்றவாறு இன்னும் அந்த ஸ்க்ரிப்டை பாலிஷ் செய்து கதையை ரஜினிக்கு கூற, ஒரு வெற்றிகரமான இயக்குனரை தேடி அடுத்த படம் நடிப்பதற்கு பதில் சிவாஜி என்ற அசத்தலான படம் அளித்த ஷங்கருக்கே அடுத்த படத்தையும் தரலாம் என்று ரஜினி முடிவு செய்ய - அப்படி பிறந்தது தான் இந்த எந்திரன். மேலும் ரஜினியை பொறுத்தவரை ஷங்கர் ஒரு சேப் பெட். மேலும் உண்மையிலேயே இந்த ரோபோ ரஜினி நடிக்க வேண்டியது தான். “எது யாருக்கு உரியதோ அதை பிரிக்க எந்த சக்தியாலும் முடியாது” என்ற கூற்றுக்கு ஏற்ப அது ரஜினியிடமே வந்துவிட்டது. என்னே விந்தை!!
இதற்கான ஆதாரத்தை விரைவில் தருகிறேன்.
மெலிதான அரசியல் நெடி
ரஜினியிடம் ஓகே வாங்கும் பொருட்டு ஷங்கர் ஒரிஜினல் எந்திரன் கதையில் சில சில மாற்றங்கள் செய்துள்ளார். படத்தில் மெலிதான அரசியல் நெடி கண்டிப்பாக இருக்கும். கதை பாதிக்காத வகையில் ஷங்கர் அதை பேக்கேஜ் செய்துள்ளார். வெறும் சயின்ஸ் பிச்ஷனாக மட்டும் இல்லாமல் சமூகவியலும் சிறிது சேர்க்கபட்டுளது. மேலும் சூப்பர் ஸ்டார் இதை ஓகே செய்ததன் முக்கிய காரணம், படம் நிச்சயம் குழந்தைகளை கவரும் என்பதால் தான்.
மேலும் ரஜினி கூறிய சிற்சில மாற்றங்களையும் ஆலோசனைகளையும் ஷங்கர் உடனடியாக ஏற்றுக்கொண்டார். உடனே றோபோவில் (எந்திரன்) ரஜினி நடிப்பது என்று முடிவானது.
எத்தனை கோடிகள் வேண்டுமானால் செலவழிக்க தயார்
ரஜினி நடிக்கிறார் என்றதும் எத்தனை கோடிகள் வேண்டுமானால் செலவழிக்க தயார் என்றும் மேலும் மொத்த படத்தின் வியாபாரமும் “ஒயிட்டாக” நடத்தப்படும் என்றும் ஐங்கரன் உறுதியளித்ததால் உடனே அது சூப்பர் ஸ்டாரால் டிக் செய்யப்பட்டது. மேலும் சிவாஜியை வெளிநாடுகளில் நல்ல முறையில் வெளியிட்டு ரஜினியின் நம்பிக்கையை ஐங்கரன் பெற்றிருந்தது. ஷங்கரும் தனக்கு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் உள்ள ஐங்கரன் படத்தை தயாரிப்பது பெட்டர் என்று நினைத்தார்.
இதோ தற்போது எந்திரன் படத்தை வெற்றிகரமாக பல ஹேஷ்யங்களுக்கிடையே துவக்கிவிட்டனர்.
எந்திரனின் உண்மைக்கதை என்ன?
இதுக்கே மூச்சு முட்டுது. கொஞ்சம் ஒரு நாள் வெயிட் பண்ணுங்களேன். எந்திரனின் நிஜக்கதை சுருக்கம் நாளை தரப்படும். (அட முழுக்கதை இல்லீங்க. ஜஸ்ட் ஒரு சின்ன முன்னோட்டம் தான்.)

எங்கெங்கு காணிலும் எந்திரன் பற்றியே பேச்சு
தமிழ் நாட்டில் மூளை முடுக்கெல்லாம் எந்திரன் பற்றித்தான் இப்போது பேச்சு. ஷங்கர் வெளியிட்டுள்ள வித்தியாசமான முதல் டிசைன் கிட்டத்தட்ட அனைவரையும் கவர்ந்திருக்கிறது. கவர்ந்திருக்கிறதோ இல்லையோ பேசவைத்திருக்கிறது.
முக்கிய நாளிதழ்கள் அனைத்திலும் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழகத்தின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
வித்தியாசமாக காணப்படும் ரஜினியின் தோற்றம் மற்றும் போஸ்டர் டிசைன் ஐ சேலம் நகரில் பொதுமக்கள் ஒரு நிமிடம் உற்று பார்த்துவிட்டுத்தான் செல்கின்றனராம். (சேலத்திலிருந்து நண்பர் ஒருவர் கூறியது). அதாவது சேலத்தில் போஸ்டர் ஒட்டிய அடுத்த நிமிடம் இரண்டு பேர் வேடிக்கை பார்க்க அது சீக்கிரமே இருப்பது பேர் ஆனதாக தகவல். (அட நெசமாதாங்க!!) இவனுங்க திருந்தவே மாட்டனுங்க என்று அந்த பக்கம் சென்ற சில பேர் கமென்ட் அடித்ததாக உபரி தகவல்.
மற்றும் பல ஊர்களிலும் எந்திரன் விளம்பரம் குறித்து பேசத்துவங்கிவிட்டனர். (கரண்ட் கட், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள்ல சிக்கி தவிக்கிற மக்களுக்கு இது மாதிரி சென்சேஷனல் செய்திகள் தேவை!!)
சென்னையில் எந்திரன் போஸ்டர் - ஒரு அனுபவம்
காலை பேப்பர் பார்த்துவிட்டு உங்களுக்கு செய்திகள் அப்டேட் செய்த பிறகு, அலுவலகம் செல்லும் வழியில் எந்திரன் போஸ்டர் எங்காவது தென்படுகிறதா என்று பார்த்தல் ஏமாற்றமே மிஞ்சியது. முந்தின இரவு கடும் மழை பெய்ததால் போட்டார் ஒட்டப்படவில்லை என்று புரிந்தது. ஏற்கனவே ஓட்டபட்டிருந்த பலவேறு சுவரொட்டிகள் வருண பகவானின் புண்ணியத்தால் சுவர்களிளுருந்து பிய்ந்து தொங்கிகொண்டிருந்தன.
சரி இன்று இரவு தான் மீதமுள்ள போஸ்டர்களை ஒட்டுவார்கள் என்று அலுவலகம் சேர்ந்துவிட்டேன். பின்னிரவு பணி முடித்து திரும்புகையில் கோடம்பாக்கம் சிக்னல் சந்திப்பில் போஸ்டர் ஓட்டபட்டிருந்ததை பார்த்து வண்டியை நிறுத்தி காமிராவில் க்ளிக் செய்ய தொடங்கினேன்.
அந்த போலீஸ்காரர் சொன்னது என்ன?
சிக்னலில் பணியிலிருந்த போலீஸ்காரர் என்னை பார்த்தார். என்ன நினைத்தாரோ என் அருகில் வந்தார். சரி, ஹிஸ்டரி ஆப் த இன்சிடென்ட் முதல் ஜியாக்ரபிய் ஆப் த இன்வால்வ்மென்ட் வரை அனைத்தையும் இவரிடம் சொல்லவேண்டுமா என்று நினைத்து அசௌகரியமாக உணர்ந்தேன். (இப்போதிருக்கும் நிலையில் பொது இடங்களில் இது போன்று இஷ்டத்திற்கு காமெராவை உபயோகப்படுத்த முடியாது)
என்னருகில் வந்தவர், என்ன ஏது என்ற விசாரிக்க, நான் ஒரு ப்ரீலான்ஸ் (Freelance) போட்டோக்ரபார் என்று கூறினேன். பிறகு அவர் காத்திருந்தது போல என்னிடம், “அது வந்து சார், அந்த ரோஜாப்பூ பத்தி என்ன நினைக்கிறீங்க? வித்தியாசமா இருக்குல்ல அது” என்றாரே பார்க்கலாம். அப்படிப்போடு!!!!! நான் சுதாரித்து கொண்டேன்.
“எனக்கு தெரியல சார். நீங்களே சொல்லுங்க…” என்றேன். (ஜஸ்ட் பொது மக்கள் பார்வை எப்படி இருக்குன்னு தெரியவேண்டாமா?)
“உதட்டுக்கு பதில்லா ரோஜாப்பூ வெச்சிருக்கிறது புதுமையா இருக்கு. இங்கிலீஷ் படம் போஸ்டர் மாதிரி இருக்கு டிசைன். காலைல கூட நானும் சார்ஜென்ட்டும் இது பத்திதான் பேசிகிட்டு இருந்தோம். ரஜினியை இது வரைக்கும் பார்த்திராத கெட்டப்ல காட்டுவாங்கன்னு அவர் சொன்னாரு.”
“ஒ….அப்படியா?”
“சார் எவ்வளவோ போஸ்டர் பார்த்திருக்கோம். கைல அருவா, இல்லைன்னா கத்தி இல்லைன்னா மெஷின் கன் இல்லாட்டி குண்டு - இது தான் வெச்சிருப்பாங்க. ஆனால் இதுல ரோஜாப்பூ வெச்சிருக்கிறது ரொம்ப சூப்பரா இருக்கு. பாக்குறதுக்கு அழகாகவும் இருக்கு.” என்று விளக்கம் கொடுத்தார் அந்த காவலர்.
இன்னும் சற்று நேரம் அவரிடம் பேசிவிட்டு வண்டியை கிளப்பினேன்.
மக்கள் அனைத்தையும் மறந்துவிட்டு இயந்திரன் மூடுக்கு வந்துவிட்டார்கள் என்று தெரிந்துகொண்டேன்.
இப்போது புரிந்ததா ஷங்கர் ஏன் ரோபோ (ரஜினி) கையில் ரோஜாப்பூ கொடுத்தார் என்று? மக்களை பேசவைத்துவிட்டாரே. சபாஷ். உண்மையில் ரோபோ கையில் ஏ கே 47 எதிர்ப்பார்த்த நம் அனைவரின் யூகங்களை பொய்யாக்கிவிட்டு ‘ரோஜாப்பூ’ கொடுத்து விளம்பரத்தை பேசவைத்துவிட்டார் ஷங்கர். ரியல்லி க்ரேட் மிஸ்டர் ஷங்கர்.
இணைக்கப்பட்டுள்ளது சென்னையில் எடுத்த இன்றைய போஸ்டர்கள். மழை காரணமாக ஒரு சில இடங்களில் மட்டுமே போஸ்டர் காணப்பட்டது. மீதி இடங்கள் இன்று இரவு ஒட்டப்படும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...