குசேலன்: ரஜினியைக் கொண்டாடும் அமெரிக்கர்கள்!!


சிவாஜியை விட பல மடங்கு அதிக எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது சூப்பர்ஸ்டார் ரஜினியின் குசேலன் திரைப்படத்துக்கு, இங்கு மட்டுமல்ல... அமெரிக்கா, கனடா மற்றும் ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும். தமிழகத்தில் கூட இந்த அளவு குசேலனுக்குக் கொண்டாட்டங்கள் நடக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்பும் வகையில் அமெரிக்காவின் பல நகரங்களில் ரஜினிக்கு கட் அவுட், அன்னதானம், சிறப்பு நிகழ்ச்சிகள் என குசேலன் திருவிழா களைகட்டி வருகிறது. அமெரிக்காவின் வர்த்தகத் தலைநகர் எனப்படும் நியூயார்க்கின் நியூ ஜெர்ஸி பகுதியில் குசேலன் வெளியாகும் திரையரங்கின் முன் ரஜினியின் மிகப் பெரிய வினைல் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இதை ஒரு அதிசயம் போல் பார்த்துச் செல்லும் அமெரிக்கர்கள், ஆர்வம் மிகுதியில் இந்த கட் அவுட்டுகளுக்கு முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதும் நடக்கிறது.
சிகாகோவில் நண்பர்களுக்கு விருந்து!!
குசேலன் திரைப்படம் இரு நண்பர்களுக்கிடையிலான நெகிழ்ச்சியான நட்பைச் சொல்லும் கதை என்பதால், சிகாகோவில் ரஜினி ரசிகர்கள் இணைந்து தங்கள் நெருங்கிய நண்பர்களையெல்லாம் வரவழைத்து விருந்தளித்த சுவாரஸ்யமான நிகழ்ச்சி நேற்று பிற்பகல் நடந்தது. சிகாகோவின் முக்கிய வீதியான நேபர்வில்லேயில் ரஜினியின் 25 அடி நீள வினைல் பேனர் தொங்க விடப்பட்டுள்ளது. சிகாகோவில் குசேலனுக்கு டிக்கெட் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்ட சில மணிநேரங்களில் முழுவதுமாக விற்றுத் தீர்ந்து போயுள்ளது. இந்த டிக்கெட்டுகளுடன் குசேலன் ஆடியோ சிடிக்களை இலவசமாக விநியோகித்துள்ளர். இதில் அதிசயம் என்னவென்றால், முதல் நாள் ஷோவுக்கு டிக்கெட் வாங்கியவர்களில் கணிசமான அமெரிக்கர்களும் உண்டு என்பதுதான். ஒரு காலத்தில் நாம் அவர்களுடைய சூப்பர் ஸ்டார்கள் அர்னால்ட் ஷ்வார்ஸ்நெக்கரையும், ஸ்டெல்லோனையும் கொண்டாடினோம். இப்போது அவர்கள் முறை... நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியைக் கொண்டாடுகிறார்கள். ரசித்து மகிழ்வோமே!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...