பிரபல ஆங்கில இதழ பீப்பிள் (PEOPLE) 2010 ஆம் ஆண்டின் 25 ஆச்சரியமான மனிதர்கள் பற்றிய தொகுப்பை வெளியிட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கர், சித்தார்த் மல்லையா-தீபிகா ஜோடி, எலின் நார்டக்ரன் (கோல்ப் வீரர் டைகர் வூட்சின் முன்னாள் மனைவி), சோனாக்ஷி சின்ஹா, லிசா ரே, அணில் கபூர், விக்கிலீக் ஜூலியன் அசான்ஜ், அமீர்கான், கரீனா கபூர், சிலி நாட்டு சுரங்கத் தொழிலாளர்கள், ஹாலிவுட் சான்ட்ரா புல்லக், சல்மான்கான், முகேஷ் அம்பானி-நீடா அம்பானி உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ள இந்த பட்டியலில் சூப்பர் ஸ்டாரும் இடம்பெற்றுருக்கிறார்.
பட்டியலை எதன் அடிப்படையில் இவர்கள் இறுதி செய்திருக்கிறார்கள் என்பதை ஒவ்வொருவரைப் பற்றியும் இவர்கள் அளித்துக்கள் கருத்துரைகளை வைத்து தான் கண்டுபிடித்தேன். அதாவது இவர்களை பற்றிய எதிர்ப்பார்ப்புக்களையும் கணிப்புக்களையும் மீறி, சாதனை செய்து செய்திகளில் இடம்பிடித்தவர்கள் இவர்கள் அனைவரும்.
அந்த வகையில், அறுபது வயது நிறைவடைந்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி ‘ரோபோ’ என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்து இந்திய அளவில் செய்திகளில் இடம் பிடித்ததர்க்காக இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.
2010 ஆம் ஆண்டில் 60 வயது நிறைவடைந்து, சூப்பர் ஹிட் படமான ரோபோவை கொடுத்திருக்கும் ரஜினி பற்றி உங்களுக்கு தெரியாத பத்து விஷயங்கள்.
1. நண்பர்கள் மற்றும் குடுமப்த்தினர் ஆகியோருடன் பேசும்போது தரையில் சம்மணமிட்டு அமர்ந்து பேசுவதையே விரும்புவார்.
2. தன்னுடைய முதல் காரான TMU 5004 என்னும் பியட் காரில் அடிக்கடி பயணம் செய்ய விரும்புவார்.
3. வீட்டில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேசுவார்.
4. அவித்த வேர்கடலை என்றால் அவருக்கு கொல்லைப் பிரியம். விட்டால் நாள் முழுதும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்.
5. அவருடைய நெருங்கிய நண்பர்கள் அவரை இன்னும் சிவாஜி என்று தான் அழைக்கிறார்கள்.
6. இயல்பாகவே அவர் தயாள குணம் கொண்டவர். தன் காரில் அடிக்கடி ரூ.10,000/- ம் அதற்க்கு மேலும் எடுத்துச் செல்வார். இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்குள் அவற்றை கொடுத்துவிட வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்து அவற்றை தானம் அளிப்பார். வயதானவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர்களுக்கு தருவதையே விரும்புவார்.
7. அவருடைய குரு சுவாமி.சச்சிதானந்த சுவாமிகள் அவருக்கு பரிசளித்த கைகடிகாரத்தையே இன்னும் விரும்பி அணிகிறார்.
8. ஆரம்ப காலங்களில் வசனங்கள் மற்றும் காட்சிகளை உச்சரித்து, நடித்து ப்ராக்டீஸ் செய்து பார்ப்பார். இதற்காக பல மணிநேரங்கள் செலவிடுவார்.
9. சத்ருகன் சின்ஹாவின் ஸ்டைல் அவருக்கு ரொம்ப பிடிக்கும்.
10. அவருக்கு குறும்பு ஜாஸ்தி. மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் வீட்டிற்கு ஒரு முறை மாறுவேடத்தில் சென்று, ராஜ்குமார் பற்றி பல தகவல்களை சொல்லி அவர்களை ஆச்சரியப்படுத்தினார். தன் வேடத்தை களைத்த பிறகே அவர்களுக்கு வந்திருப்பது ரஜினி என்று புரிந்தது.
இதை தவிர 2010 ஆம் ஆண்டின் டாப் 10 மூவீஸ் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதில் ரோபோவும் அடங்கும். மற்ற படங்கள்: பீப்ளி லைவ், ராஜநீதி, இஷ்க், டபாங், கோல்மால் 3 ஆகிய படங்கள்.
[END]
No comments:
Post a Comment