———————————————————————————-
Continued from Part 1

கேள்வி 14: “தன் சொந்த வாழ்கையில் வரும் இன்ப, துன்பங்களை எப்படி எடுத்து கொள்கிறார்?”
மேடம்: “அவரோ, நாங்களோ அவற்றை தோல்வியாகவே கருதுவது இல்லை. அவற்றை எல்லாம் ஒரு பாடமாகவே எடுத்து கொள்வோம். அந்த மாதிரியான நிகழ்வுகள் எல்லாம் ஒரு மனிதனை அவனின் அடுத்து இடத்திற்கு எடுத்து செல்வதாகும். இந்த நாட்டின் தலை சிறந்த நடிகர்கள் எல்லோருமே அந்த மாதிரியான சூழ்நிலைகளை அவர்களின் வளர்ச்சி பாதையில் சந்தித்து இருப்பார்கள் என்று எனக்கு தெரியும்.
இவ்வளவு காலமாக, எல்லாவற்றையும் சரி சமமாக பார்பதற்கும், ஒரு தனிமனிதனாக, பழசை மறக்காமல் இருப்பதர்க்கும், அவற்றை எண்ணி பார்த்து, அவற்றின் வேர்களை களை எடுத்து, நல்ல ஒரு பாடத்தையும் வாழ்கை அவருக்கு கற்றுகொடுத்து இருக்கிறது. அவர் எதையும் எளிதில் கற்றுகொள்பவர். ஆன்மிகத்தாலும், அவருக்குள் இருக்கும் அந்த அறிவு பசியாலும், அவர் எதையும் கற்று கொள்வதில் கலை தேர்ந்தவராக இருக்கிறார். அவருக்குள் இருக்கும் அந்த ஆர்வம் தான் அவரை எளிதில் கற்று கொள்ள வைக்கிறது. அது மிக பெரிய பலம் அவருக்கு. இவ்வளவு காலமாக, அவர் ஒவ்வொரு விஷயங்களிலும் பலவற்றை கற்று கொண்டு சிற்பியை போல் தன்னை செதுக்கிகொன்டுள்ளார்(உள்ளேவும் சரி வெளியேவும் சரி)”.
கேள்வி 15: “அவர் எப்போது இந்த அளவிற்கு ஓர் மிக பெரிய ஆன்மிகவாதியானார்?”
மேடம்: “ஆன்மிகம் என்பது விதை போன்று, அது இருந்தால் தான் எல்லாம். அவர் பிறவியில் இருந்தே அப்படி தான் என்று நான் நினைக்கிறன். இருவரும் ஆன்மிகத்தில் எங்களை ஈடுபடுத்திகொண்டோம் ஏனெனில், எனது வளர்ப்பு முறையே அப்படிதான். நாங்கள் இருவரும் ஒன்றுதான்.
ஆனால், இருவரும் வெவ்வேறு சூழ்நிலைகளில் இருந்து வந்தவர்கள். சிறுவயதில் இருந்தே அவர் பட்ட கஷ்டங்கள், வறுமை, பல விஷயங்கள் அவருக்கு தெரியாமல் போனது – எனக்கு தெரிந்து அவருக்கு ஆன்மிகம் தான் முக்கியமான ஒன்று. அந்த அவர் கடவுள் மேல் வைத்துள்ள நம்பிக்கையும், அந்த இணக்கமும் தான் அவரின் பாதையில் மிக பெரிய ஒன்று”.
கேள்வி 16: “அவருக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது? அவர் அதிகமாக சாப்பிட மாட்டார், தினமும் யோகா பண்ணுவார் என்றெல்லாம் கூறுகின்றனர். அவரை பற்றி சொல்லுங்களேன்?”
மேடம்: “அவர் எல்லோரையும் போலதான். ஒரு நடிகராக, படப்பிடிப்பின்போது, அதற்கேற்ப உணவை எடுத்து கொள்வார். அவருக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அவரே எல்லாவற்றையும் தேர்ந்தெடுப்பார். அவர் நல்ல, ருசியான உணவை அதிகம் விரும்புவார். ஆனால், ஒரு நடிகனாக எப்படி உடலை கட்டுகோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அதனால், அவர் பலவற்றை விட்டுகொடுப்பார். ருசியிலும், அசைவ உணவிலும். இல்லை என்றால், உடலை நன்றாக வைத்திருக்க கடினமாக உழைப்பார். அவருக்கென்று ஒரு சில கோட்பாடுகள் இருக்கின்றது. அதன்படி அவர் நடப்பார்”.

கேள்வி 17: “அவர் வீட்டில் ஒரு குடும்பஸ்தனாக எப்படி இருப்பார்?”
மேடம்: “அவர் நடிகராக வீட்டிற்குள் இருக்க மாட்டார். ஆனால், படப்பிடிப்புக்கு முன்பு, தனக்கென்று நிறைய நேரம் எடுத்து கொள்வார். அதை வீட்டில் செய்தும் ஓத்திகை என்று சொல்லலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து குழப்பிக்கொள்ள மாட்டார். அவர் எப்போதும் ஒரு சாதாரண மனிதன் தான் விட்டுக்குள்.- அப்படி தான் இருக்க விரும்புவார். எங்களுக்கு ஒன்றும் அந்த அளவிற்கு வித்தியாசம் தெரியவில்லை”.

கேள்வி 18: “அப்பாவாக தன் மகள்களுக்கு எப்படி இருக்கிறார்?”
மேடம்: நமக்கு எல்லாம் ஒரு feeling இருக்கும்-‘வெளியில என்ன நடக்குது’ அப்படின்னு. அந்த மாதிரியான ஒரு உணர்வு அவரை பார்க்கும்போது இருக்கும். அவர் எங்களுடன் இருக்கும் போது அந்த ஒரு பிரம்மிப்பு இருக்கும். நாங்கள் அவர்மீது வைத்திருக்கும் அந்த ஒரு மரியாதையையும், அந்த பெருமையையும், அந்த ஒரு உணர்வையும் வெளிகாட்டிக்க மாட்டார். நாங்களும் வெளிபடுத்திக்க மாட்டோம். அது எங்களுக்குள் இருக்கும் ஒரு பரோஸ்பர பரிமாற்றம்.
ஆரம்பத்தில், அவர் வீட்டில் இருப்பர்தற்கே நேரம் இருக்காது. அவருக்கு இரவும் பகலுமாக படப்பிடிப்பு நடக்கும். எப்பப்போ அவருக்கு படப்பிடிப்பு நடக்குதோ, அவருக்கு பகல் என்றால், எங்களுக்கு இரவு, அவருக்கு இரவு என்றல் எங்களுக்கு பகல். எங்களின் காலை உணவு இரவில் இருக்கும், இரவு உணவு பகலில் இருக்கும். இப்படி தான் மாறி மாறி சந்தித்துக்கொண்டு எங்களின் இருபது வருட திருமண வாழ்கை சென்றது. அவர் கடந்த ஏழெட்டு வருடங்களாக தான் வீட்டில் இருக்கிறார் என்று சொல்வேன்.ஆனால், அவர் எப்போது வீட்டில் இருந்தாலும் அப்பாவாக, நண்பனாக,தன வாழ்கை அனுபவங்களை சொல்லிதரும் ஆசானாகவும் தன் மகள்களுக்கு இருப்பார்.
ஆனால், கிடைக்கும் அந்த கொஞ்ச நேரங்களை கூட வீணடிக்க மாட்டார்.
மகள்களுடன் சந்தோசமாக இருப்பார். அவங்ககூட அதிக நேரம் பேசுவதில் செலவிடுவார். இப்போது அது இன்னும் அதிகமாகிருக்கிறது. இப்போது இரு மகள்களும் வளர்ந்து விட்டார்கள். அவர்களிடம் நண்பர்கள் போல் இருப்பார்”.

கேள்வி 19 & 20: அவர் குடும்பத்தில் எப்படி இருக்கிறார்? உங்களின் குடும்பம் இவ்வளவு பெரிய புகழை எப்படி எதிர்கொள்கிறது?”
மேடம்: “உண்மைய சொல்லனும்னா, ஒரு நடிகரின் வீட்டில் இருப்பது அவ்வளவு சுலபமானது அல்ல. அது எந்த நடிகராக இருந்தாலும் சரிதான். ஏன்னா, நிறைய கட்டுபாடுகள், குறைகள். தனிமை என்ற சுதந்திரம் பறிபோகி விடுகிறது. ஒரு சில விஷயங்கள், கட்டுக்கடங்காமல் போய் விடுகிறது. அதை எல்லாம் விவரிக்க கூட முடியாது. இதெல்லாம் தான் நாங்கள் புகழுக்கு விலையாக கொடுத்திருக்கின்றோம். இதை எல்லாம் தாண்டி, ஒரு உன்னதமான மனிதனுடன் இருப்பது தான் எங்களுக்கு இருக்கும் கடவுளின் அனுகிரகம். எல்லோரும் இப்போது எதாவது செய்து கொண்டு இருக்கிறோம்.
சௌந்தர்யா இப்போது ஒரு company யை உருவாக்கி கொண்டிருக்கிறாள். நான் இங்க கல்வி நிறுவனத்தை நடத்தி கொண்டிருக்கின்றேன். ஐஸ்வர்யா நடனம் கற்று கொண்டிருக்கிறாள். அதே சமயம், இயக்குனராகுவதற்கும் முயற்சி பண்ணிக்கொண்டிருக்கிறாள். எல்லோரும் அவரவர் வேளையில் கவனம் செலுத்தி கொண்டிருக்கின்றோம். அதே சமயம், ஒருத்தர்கொருத்தர், அவரவர் வேலையில் மகிழ்ச்சியோடு மற்றவர்களையும் நன்றாக ஊக்கபடுத்தி கொள்வோம்”.
கேள்வி 21: “அவர் எப்படி பஸ் கண்டக்டராக இருந்து, இப்படி சூப்பர் ஸ்டாராக மாறினார் என்று சொல்லுங்களேன்?”
மேடம்: “அதற்க்கு ஒருத்தருடைய பண்பும், வெற்றியும் தான் காரணம் என்று சொல்வேன். நீங்க கீழே இருந்து மேல செல்வதை எப்படி எடுத்து கொள்கிறீர்கள் என்பது முக்கியம். இவ்வளவு பெரிய வெற்றி, நிதானம், தெளிவு, ஒற்றுமை, புகழ் பெறுவதற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும். – இதில், அவரது ஆன்மிகம் மிக பெரிய பங்கு வகிக்கிறது – எதையும் சமமாக எதிர்கொள்வதற்கு. அதை அவர் பெரித எடுத்து(தலைகனம்)க்கொள்ளாமல் , அதை ஒரு கொடுப்பினையாக எடுத்து கொண்டார். அது அவருக்கு கடவுளின் வரப்பிரசாதம். அவர் நிஜத்தில் ஒரு மனிதன் எப்படி வாழவேண்டுமோ, அப்படி இருக்க முயற்சிக்கிறார். அது ஒரு மிக பெரிய விஷயம்.
கேள்வி 22: “அவரின் இந்த மாபெரும் புகழ், பேருக்கு இதுதான் காரணம் என்று நினைகிறீர்களா”
மேடம்: இந்த புகழ், பணம், பேர் எதுவும் அவரை பாதிக்கவில்லை என்று தான் நான் நினைக்கிறன். இதை எல்லாம் தாண்டி, அவர் ஒரு நல்ல மனிதனாகவே வழ ஆசைபடுகிறார். அவர் பழையது எல்லாவற்றையும் ஏற்று கொண்டார். அவர் கடந்து வந்த சூழ்நிலைகள், துன்பங்கள், கட்டுபாடுகள் அனைத்தையும் ஏற்று கொண்டார். அவற்றை எல்லாம் உள்வாங்கி, வெற்றிகரமாக அவற்றை எல்லாம் தாண்டி, ஒரு நல்லவனாக இருக்க ஆசைபடுகிறார்.
கேள்வி 23: “இவ்வளவு நிறைய ரசிகர்கள் இருப்பது குறித்தும், அவர்களின் விருப்பதை நிறைவேற்றுவது குறித்தும் என்றைக்காவது கவலைபட்டிருகின்றாரா?”
மேடம்: “கண்டிப்பாக. எல்லா நடிகர்களும் மக்களால் எந்த அளவிற்கு அன்பினால், எந்த அளவிற்கு உயர்வா எண்ணப்படுறாங்க. அதற்குரிய கவலையும், கடமையும் கண்டிப்பா அவர்கள் உணரனும். ரசிகர்களும் மக்களும் அங்கே இருக்கிறார்கள், அவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும்ன்னு நினைக்கணும். அது எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும்.
கேள்வி : 24 “ரஜினி அவர்கள் இவ்வளவு சாதித்த பிறகும், தேசிய அளவில் அவர் அங்கீகாரம் இன்னும் பெறவில்லை என்று நினைக்கிறீர்களா?
மேடம் : இது தொடர்பாக இரண்டு கருத்துக்களை கூற விரும்புகிறேன். அவரைப் பொறுத்தவரை மக்களின் அங்கீகாரத்தையும் அன்பையும் தான் மிகப் பெரிய விருதாக நினைக்கிறார். அவரது படங்கள், நல்ல பிசினஸ் செய்கின்றன. அனைவராலும் விரும்பி பார்க்கப்படுகிறது. ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கூட ஓடுகிறது. இதை விட பெரிய விருது இருக்க முடியுமா என்ன?
அதே சமயம் நாகேஷ் அவர்கள் முதல் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் வரை திறைமையான கலைங்கர்களுக்கு போதிய அளவு தேசிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற கருத்து நிலவுகிறது. நமது திறமைக்குரிய தேசிய அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்றே நான் கருதுகிறேன். அதற்க்கு முக்கிய காரணம் பல திறைமையான கலைஞர்கள் தமிழிலிருந்து பிரிந்து சென்று இப்போது தேசிய அளவில் பரவலாக இருக்கிறார்கள்.

கேள்வி : 25 “அவரது 60 வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”
மேடம் : உலகம் முழுதும் இருக்கும் ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், நீங்கள் அனைவரும் எங்கள் குடும்ப உறுப்பினர்களை போன்றவர்கள். ஒரு மிகப் பெரிய குடும்பம் இது. தங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போல எங்களை இம்மக்கள் பாவிபப்து, தவம் செய்தால் கூட கிடைக்காத மிகப் பெரிய பேறு.
தனது பிறந்த நாளை அவர் காணும் இந்நன்னாளில், அதை சிறப்பான முறையில் பல்வேறு விதங்களில் கொண்டாடிய ரசிகர்களுக்கு என் நன்றி. ரத்த தானம், கோவில்களில் பூஜை, தர்ம காரியங்கள், என உலகம் முழுதும் அவரவர் சக்திக்கேற்றபடி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இத்துனை அன்பை எங்கள் மீது வைத்துள்ளதற்கு என் இரு கரங்களை குவித்து அனைவருக்கும் நன்றி என்று கூற விரும்புகிறேன்.

கேள்வி : 26: “பிறந்த நாளன்று அவர் ஏன் ரசிகர்களை சந்திப்பதில்லை? அதிகப்படியான கூட்டத்தை சமாளிக்க முடியாது என்று அவர் கருதுகிறாரா அல்லது அனைவரையும் திருப்திபடுத்துவது கடினம் என்று நினைக்கிறாரா ?”
மேடம் : ஆம்… என்ன செய்வது… ஒரே நேரத்தில் அவரை குறிப்பிட்ட இடத்தில் அனைவரும் சந்திக்க விரும்புகிறார்கள். அது சாத்தியமல்லவே. மேலும், அவரது முக்கிய கவலை என்னவென்றால் அவர்கள் எவ்வாறு வருவார்கள்? லாரிகளில், வேன்களில், பஸ்களில், தங்கள் கைக்காசை செலவு செய்து வருவார்கள். அவர்களால் அந்த செலவை தாங்க முடியுமா என்று தெரியாது. தவிர அவர்கள் வரும் வழியில் அவர்கள் பாதுகாப்பு மிகவும் முக்கியம். விபத்துக்கள் நடக்க வாய்ப்புகள் இருக்கிறது. அவர்கள் திரும்ப வந்து சேரும் வரை அவர்கள் வீட்டிலுள்ளவர்கள் கவலையுடன் இருப்பார்கள். இதையெல்லாம் அவர் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. ரசிகர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார். தவிர அந்த குறிப்பிட்ட நாளில் தனிமையிலும், தியானத்திலும், பிரார்த்தனையிலும், ஆத்ம விசாரணையிலும் அவர் செலவிடுவதையே விரும்புவார்.
கேள்வி 27: “அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகிறார்களே…. அவர் அரசியலுக்கு வருவாரா?”
மேடம் : நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் சம்பவங்கள் குறித்து அக்கறைகொள்ளும் சிறந்த தேசியவாதி அவர். ஒரு நல்ல குடிமகன். மக்களின் முன்னேற்றம் குறித்து அவர் மிகவும் அக்கறை கொண்டுள்ளார். தவிர, ஒட்டுமொத்த மனிதகுலமும் முன்னேற்றமடைய வேண்டும் என்று கருதுகிறார். அவருடைய ஆன்மீக ஈடுபாடு வேண்டுமானால் இதற்க்கு காரணமாக இருக்கலாம்.
தவிர, அவர் தலைமையேற்க முற்றிலும் தகுதியுடைய — தலைமைப் பண்புகள் அனைத்தும் பொருந்திய — மிகச் சிறந்த தலைவர் அவர். அவர் காத்திருப்பது மேலிருந்து வரவேண்டிய அந்த கட்டளைக்காகத் தான். அது மட்டும் கிடைத்தால், அவர் உங்கள் கேள்விகளுக்கெல்லாம் நிச்சயம் பதில் சொல்வார்.
கேள்வி 28: “அவர் பிறந்த நாளுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்?”
மேடம் : அவர் பிறந் நாளை மிகவும் PRIVATE ஆக நாங்கள் கொண்டாடுவது வழக்கம். அவர் அன்று எங்களுடன் இல்லாதிருந்தாலும் நாங்கள் அதை தவற விடுவதில்லை. இரு பெண்களுக்கு ஒரு அம்மாவாக, ஒரு குடும்பத் தலைவியாக, அவர் மீது என் நிர்பந்தங்கள் சில உண்டு. அதை நான் விடுவதில்லை. விடவும் மாட்டேன். அவர் என்னை பொறுத்தவரை இரண்டு நபர். ஒருவர், தனது குழந்தைப் பருவ இன்பங்களை தவற விட்ட மூத்த மகன். இன்னொருவர், என் கணவர். ஒரு மனைவியாக வாழ்வில் சின்ன சின்ன சந்தோஷங்களை அவருக்கு அளிக்க முயற்சிக்கிறேன். அனைத்து பண்டிகை மற்றும் முக்கிய நாட்களை இதற்க்கு பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.
No comments:
Post a Comment