இந்தியத் திரையுலகில் எந்திரன் பெற்றுள்ள வெற்றி எத்துனை பெரியது, முக்கியத்துவம் பெற்றது, தனித்துவம் பெற்றது என்பதை பற்றி விரிவாக அலசி 28/12/2010 அன்றைய Times of India நாளிதழ் மெயின் ஷீட்டில் இரண்டாம் பக்கத்தில் ஒரு மிகப் பெரிய கட்டுரை வெளியாகியுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த் கட்டுரையை தமிழில் அளிக்க வேண்டும் என்பதால் ஒரிஜினல் ஸ்கேனிங் பக்கத்துடன் கூடவே மொழிபெயர்த்தும் தந்திருக்கிறேன். (நாம் இதுவரை மொழி பெயர்த்த கட்டுரைகளில் மிகவும் கடினமான அதிக நேரம் பிடித்த கட்டுரை இது. ஆனாலும் படிக்க படிக்க, எழுத எழுத சுவாரஸ்யம்!)
————————————————————————————–
தமிழ் சினிமாவை ஆளும் ரோபோ! – Times of India – 298/12/2010
2010 – சூர்யா சிங்கத்தின் மூலம் கர்ஜித்தார். விஜய் சுறாவின் மூலம் காணமல் போனார். சிம்பு தனக்கு தானே எம்.ஜி.ஆர். பாணியில் எஸ்.டி.ஆர். என பெயரிட்டுக்கொண்டார்.(??!!), ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் தனது இமேஜை மாற்ற முயற்சித்தார். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ மூலம் சாகவரம் பெற்றுள்ள நண்பேண்டா என்ற வாசகத்தை தந்தார் ஆர்யா. ஆனால் இவர்கள் அனைவரையும் ஒரு ரோபோ தூக்கி சாப்பிட்டுவிட்டது. பத்து நாட்கள் படம் ஓடுவதையே பெரிய விஷயமாக கருதி போஸ்டர் ஒட்டி பார்ட்டி கொடுத்து தயாரிப்பாளர்கள் கொண்டாடும் இன்றைய சூழ்நிலையில், அக்டோபர் 1 இல் ரிலீசாகி நூறாவது நாளை நெருங்கிக்கொண்டிருக்கும் எந்திரன் இன்றும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
திரையுலகம் மற்றும் இன்றைய சினிமாவின் போக்கு குறித்த அனைத்து எதிர்ப்பார்ப்புக்களையும் ஆரூடங்களையும் பொய்யாக்கிவிட்டு, முற்றிலும் ஒன்றுக்கொன்று வித்தியாசமான படங்களை வெற்றிப் பெறச் செய்திருக்கிறார்கள் மக்கள் இந்த ஆண்டு.
உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம்: தமிழில் நீண்ட காலத்துக்கு பிறகு வெளிவந்த கௌபாய் படமான ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்,’ தமிழ் சினிமாவின் செக்குமாட்டுத் தனத்தை கிண்டலடித்து வெளியான ‘தமிழ் படம்’, ஒரு மெல்லிய காதல் கதையினூடே நம்மை ஆங்கிலயேர் காலத்துக்கு கூட்டி சென்ற ‘மதராசப்பட்டினம்’, லிங்குசாமியின் ‘பையா’, நமது மண்மணத்துடன் கிராமியக் காதலை அழகாக சொல்லிய பிரபு சாலமனின் ‘மைனா’, என தமிழ் சினிமாவின் வெற்றி இந்த ஆண்டு ஒரு கதம்பாக அமைந்தது.
இந்த படங்களுக்கு நடுவே, புயலாக நுழைந்த எந்திரன், பட்டி தொட்டி முதல் பட்டணம் வரை, சுழன்றடித்து வயது வித்தியாசம், ஜாதி மதம், இனம் மொழி வேறுபாடு இன்றி, அனைவரையும் ஆட்கொண்டு, பாக்ஸ் ஆபீஸ் சூறாவளியாக உருவெடுத்து, பல ரெக்கார்டுகளை உடைத்து, புதிய சாதனைகளை படைத்தது. இதன் மூலம் தனது உச்சநிலையை, ராஜ்ஜியத்தை இந்தியாவில் மட்டுமல்லாமல் புவியின் மற்ற பக்கங்களிலும் தக்கவைத்துகொண்டார் ரஜினி. சூப்பர் ஸ்டார் ரஜினியின் அசாத்திய ஈர்ப்பு சக்தி, இசைப்புயல் ரஹ்மானின் மேஜிக், இவை தவிர எந்திரனின் பிரம்மாண்ட வெற்றிக்கு மற்றொரு காரணம் இருந்தது. படத்தில் கச்சிதமாக செய்ப்பட்ட VISUAL EFEX எனப்படும் கிராபிக்ஸ் தான் அது.
இந்திய சிநாம்வில் அனிமேட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை எந்திரன் தான் முன்னோடி என்றால் மிகையாகாது.
அனிமேட்ரானிக்ஸ் என்றால் என்ன? (இயந்திரங்களின் அசைவுகளை கொண்டு உயிருள்ள பொருட்களுக்கனான அசைவுகளை செய்தல். ஜூராசிக் பார்க் இப்படித் தான் செய்யப்பட்டது.)
அதை போல ‘light stage technology’ என்னும் நவீன தொழில்நுட்பம். இதன் முன்னோடியும் எந்திரன் தான். ஒரு கூண்டுக்குள் சம்பந்தப்பட்ட நடிகரை உட்காரவைத்து, சுற்றிலும் பல திசைகளிலிருந்து ஒளியை பாய்ச்சி அவரது அங்க அசைவுகள் எப்படியிருக்கும், அவரது உடல் நிறம், தோலின் தன்மை இப்படி பல விஷயங்களை சேகரித்து கிராபிக்க்சில் மறுபதிப்பு செய்தல்). இந்த நவீன தொழில் நுட்பத்தை உலகிலயே பயன்படுத்திய நான்கே படங்களுள் எந்திரனும் ஒன்று. (தெற்காசியாவில் எந்திரன் மட்டுமே!). மற்ற படங்கள் ஸ்பைடர்மேன் II, த க்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன், & அவதார்.
மேற்படி ஹாலிவுட் படங்களை ஒப்பிடுகையில் எந்திரன் கிராபிக்சுக்கு செலவிடப்பட்ட தொகை தூசி. எந்திரன் படத்தின் ஸ்பெஷல் எபக்ட்ஸ் சூப்பர் வைசரான, ஸ்ரீனிவாஸ் மோகன் இது பற்றி கூறுகையில், ஹாலிவுட்டின் அறிவியல் படங்கள் பொதுவாக சுமார் 1,000 கோடி ருபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறன. ஆனால் எந்திரனின் மொத்த பட்ஜெட்டே ரூ.160 கோடிகள் தான். அதில், 40 % மட்டுமே ஸ்பெஷல் எபக்டுகளுக்கு செல்வனாது.
அணிமேற்றாநிக்ஸ் தொழில் நுட்பம் தொடர்பான பணிகள், ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டூடியோவிற்கும், சில CG பணிகள் அங்குள்ள நிறுவனங்களுக்கும் அளிக்கப்பட்டது. ஆனாலும் 60% பணிகள் இங்கு மோகனின் இந்தியன் ஆர்டிஸ்ட் நிறுவனத்தால்தான் செய்யப்பட்டது. அப்படியிருந்தும் கூட மோகன் படத்தின் கிராபிக்ஸ் பணிகளில் பலவற்றை ஹாங் காங், யூ.கே., பிரான்ஸ், ஈரான் என பல நாடுகளில் உள்ள வல்லுனர்களிடம் அவுட்சோர்ஸ் செய்யவேண்டியிருந்தது. (இல்லேன்னா படம் அடுத்த அக்டோபருக்கு கூட வந்திருக்காது!).
இது தவிர இந்தியன் ஆர்டிஸ்ட் நிறுவனத்தின் மற்றொரு புதுமை என்ன தெரியுமா? அனிமேட்டட் ஸ்டோரி போர்ட். அதாவது முழு படமும் 3d கிராபிக்ஸ் செய்யப்பட்டு ஸ்டோரி போர்ட் உருவாக்கப்பட்டது. “ஷங்கர் என்னிடம் முழு கதையையும் முதலிலேயே கூறிவிட்டார். அதற்க்கு பிறகு 3D யில் முழு ஸ்டோரி போர்ட் செய்ய எங்களுக்கு ஆறு மாதம் பிடித்தது. ஆனால் அது தயாரான பிறகு ஷூட்டிங் ஜெட் வேகத்தில் நடைபெற்றது. டைரக்டர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, ஆர்ட் டைரக்டர் சாபு சிரில் உள்ளிட்ட அனைவருக்கும் அவரவர் பணி சுலபமாக இருந்தது. ஆகையால் நேரமோ, ஃபிலிமோ எதுவுமே வேஸ்டாகவில்லை. நிறைய அவற்றை மிச்சப்படுத்த முடிந்தது.
அனிமேட்ரானிக்ஸ், கிராபிக்ஸ், ‘light stage technology’ தொழில்நுட்பம் போன்றவற்றை கொண்டு என்ன செய்ய முடியும் என்று நிரூபித்தது மட்டுமல்லாமல் இது குறித்த விழிப்புணர்வை திரையுலகிற்கும் பொதுமக்களுக்கும் ஏற்படுத்தியது எந்திரன் என்றால் மிகையாகாது. “இதுக்கு முன்னாடியெல்லாம் டைரக்டர்கள் எங்களை கூப்பிட்டு மேட்ரிக்ஸ் டைப் சண்டை காட்சிகள் வேணும். அதுவும் ரெண்டு மூன்று நாட்கள்ல தயார் செய்து தரனும் அப்படி இப்படின்னேல்லாம் கேப்பாங்க. ஆனா இப்போ அவங்களுக்கு ஓரளவு விஷயம் புரிஞ்சிருக்கு. எல்லாத்துக்கும் திட்டமிடல் வேணும்கறதை அவங்க உணர்றாங்க.
“அது மட்டுமா, இங்கே இந்தியாவிலும் அறிவியல் ரீதியிலான கதைகளை படமெடுக்க முடியும், அதுவும் வெற்றிகரமாக எடுக்க முடியும் என்பதை எந்திரன் நிரூபித்துள்ளது. தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை தந்துள்ளது. இது போன்ற படங்களில் முதலீடு செய்யும் ஆர்வம் தற்போது அதிகரித்துள்ளது” என்று கூறுகிறார் மோகன்.
இதன் தொடர்ச்சியாக DreamWorks Pictures, Sony Pictures Imageworks, Rhythm & Hues போன்ற நிறுவனங்கள் கிராபிக்ஸ் பணிக்கு ஆளெடுத்துவருகின்றன.
என்ன, அனிமேஷன் மற்றும் ஸ்பெஷல் எபக்ட்ஸ் தொழிலுக்கு இங்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் அரசு ஆதரவு வேண்டும். அப்போது தான் நாம் இங்கு மேலும் மேலும் அது போன்ற படங்ளை தயாரிக்க முடியும். அடுத்த 3 – 5 ஆண்டுகளில் இந்த துறை ஐந்து மடங்கள் வளர்ச்சி காணும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஐ.டி.துறை போலவே, இந்த துறையிலும் அவுட் சோர்சிங்குகள் செய்யப்படுகின்றது. என்ன அதற்குரிய ஆதாயம் கிடைப்பதில்லை. இந்த நிலை மட்டும் மாறினால், அடுத்த் ‘அவதார்’ நிச்சயம் இங்கு தயாரிக்கப்படும்.
Times of India scan page:
[END]
No comments:
Post a Comment