“நல்ல குணம் இருந்தால் மெயின் ரோட்டில் போகலாம்; இல்லையென்றால் பைபாஸ் தான்” – சூப்பர் ஸ்டார் ருசிகரப் பேச்சு!

“நல்ல குணம் இருந்தால் மெயின் ரோட்டில் போகலாம்; இல்லையென்றால் பைபாஸ் தான்” – இளைஞன் பட விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி ருசிகரப் பேச்சு!

தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி கதை வசனத்தில், கவிஞர் பா.விஜய் நடிக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கும் ‘இளைஞன்’ படத்தின் பாடல் காசட் வெளியீட்டு விழா ‘சத்யம்’ திரையரங்கில் நேற்று நடைபெற்றது.

‘முதல்வர் கலைஞர் வெளியிட, சூப்பர் ஸ்டார் ரஜினி பெற்றுக்கொள்கிறார்’ என்று சென்னை நகர் முழுக்க போஸ்டர் முழுதும் ஏற்கனவே தலைவர் ரஜினி கலந்துகொள்ளும் விபரம் தெரிந்திருந்தபடியால், கொட்டும் மழையிலும் நிகழ்ச்சி நடக்கும் அரங்கம் முழுக்க முழுக்க நிரம்பியிருந்தது. மாலையில் நடக்கும் நிகழ்ச்சி என்பதால் ஷோ கேன்சல் செய்யப்பட்டிருந்தது.

DSC 7938 640x425   “நல்ல குணம் இருந்தால் மெயின் ரோட்டில் போகலாம்; இல்லையென்றால் பைபாஸ்  தான்” – சூப்பர் ஸ்டார் ருசிகரப் பேச்சு!
வருண பகவான் புண்ணியத்தில் நாம் சற்று தாமதமாக தான் செல்ல முடிந்தது. பால்கனியில் நமது இருக்கைக்கு சென்று அமர்ந்தபோது, சுமன் பேசிக்கொண்டிருந்தார். மழையிலும் ஏ.சி. இயங்கிக்கொண்டிருந்ததால் குளிரில் நடுங்கிக்கொண்டே நிகழ்ச்சியை பார்க்கவேண்டியிருந்தது.

தொடர்ந்து படக் குழுவினர் ஒவ்வொருவராக பேச ஆரம்பித்தனர். ஒவ்வொரு முறையும் உரைநிகழ்த்துபவர்கள் ‘சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களே’ என்று சொல்லும்போதெல்லாம் கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது. வேறு யாருக்கும் கைத்தட்டல் இந்தளவு கிடைக்கவில்லை. ஆகையால், வாலி அவர்கள் பேசும்போது, “யார் பெயரை சொன்னால் கைத்தட்டல் கிடைக்குமோ அவர் பெயரை இப்போது சொல்கிறேன்” என்று கூறி தலைவரை அட்ரஸ் செய்தார். கைதட்டலுக்கு கேட்கவேண்டுமா என்ன?

பேச்சாளர்கள் அனைவரும், சூப்பர் ஸ்டார் பற்றி சில வார்த்தைகள் பேச தவறவில்லை. அனைவரும் அவரவர் பங்கிற்கு சூப்பர் ஸ்டார் பற்றி கூறியது அருமை. அருமை. குறிப்பாக கனிமொழி எம்.பி, மற்றும் கவியரசு வைரமுத்து… ஆகியோர்.

DSC 7668 640x425   “நல்ல குணம் இருந்தால் மெயின் ரோட்டில் போகலாம்; இல்லையென்றால் பைபாஸ்  தான்” – சூப்பர் ஸ்டார் ருசிகரப் பேச்சு!DSC 7672 640x425   “நல்ல குணம் இருந்தால் மெயின் ரோட்டில் போகலாம்; இல்லையென்றால் பைபாஸ்  தான்” – சூப்பர் ஸ்டார் ருசிகரப் பேச்சு!மாலை 6.00 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி இரவு சுமார் 9.00 மணிக்கு தான் முடிந்தது. வெளியே கடும் மழை கொட்டிகொண்டிருந்தபடியால், சத்யம் வளகாத்துக்கு வெளியே கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முதல்வர் வேறு வந்திருந்தபடியால், போக்குவரத்தை சிறிது நேரம் நிறுத்திவைத்து அவர் சென்ற பின்னர் தான் அனுமதித்தார்கள்.

ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தால், நெட் கனக்ஷன் சரிவர இயங்கவில்லை. பவர் கட் வேறு. கிடைத்த சந்தர்ப்பங்களில் தினகரனில் வெளியான செய்தியின் அடிப்படையில் இதை தயார் செய்திருக்கிறேன். இதன் தொடர்ச்சி – நமது பிரத்யேக விரிவான கவரேஜ் – பின்னர் அளிக்கப்படும்.

முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினி காசட் பெற்றுக்கொண்டு வாழ்த்தி பேசியது:

“முதல்வரின் இளமை ரகசியம்”

சென்னை, டிச. 6:
‘இளைஞன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:
மதுரையில் அழகிரி சாரோட திருமண விழாவில் கலந்து கொண்டு விட்டு சென்னை திரும்பியிருந்தேன். அடுத்த நாளே சி.எம். வீட்டுலேருந்து போன். சி.எம். உங்களோட பேச விரும்புறார்னு சொன்னாங்க. அவரும் பேசினார். ‘மதுரைலேருந்து ஜாக்கிரதையா வந்து சேர்ந்தீங்களா?‘ன்னு கேட்டாரு, ஆமான்னு சொன்னேன், ‘டிசம்பர் 5ம் தேதி ஊர்ல இருக்கீங்களா’ன்னு கேட்டாரு. இருக்கேன்னு சொன்னேன். ‘வேறு புரோக்ராம் ஏதும் கமிட் பண்ணியிருக்கீங்களா?’ன்னு கேட்டாரு. இல்லேன்னு சொன்னேன். ‘அப்படீன்னா 5ம் தேதி என்னோட ‘இளைஞன்‘ பட பாடல் வெளியீட்டு விழா இருக்கு. நீங்க வந்தீங்கன்னா சந்தோஷப்படுவேன்’னு சொன்னாரு.
DSC 7673 640x425   “நல்ல குணம் இருந்தால் மெயின் ரோட்டில் போகலாம்; இல்லையென்றால் பைபாஸ்  தான்” – சூப்பர் ஸ்டார் ருசிகரப் பேச்சு!
நல்லா நினைச்சுப் பாருங்க. ஒரு நாட்டின் முதல்வர், மூத்த தலைவர், 87 வயசு முதியவர். ‘நீ வா’ன்னு சொல்லியிருந்தாக்கூட வந்திருப்பேன். என்னவொரு நாகரீகம், கல்ச்சர், பொறுமை பாருங்க அவருக்கு. இந்த மாதிரி நல்ல குணம் இருக்கறதாலதான் அவரது 60 வருஷ பொது வாழ்க்கையில மெயின் ரோட்டில போக முடியுது. இல்லேன்னா பைபாஸ் ரோட்டிலதான் போக முடியும். முதன் முறையா கனிமொழி பேச்சை கேட்டேன். ரொம்ப ஆச்சர்யமா இருந்திச்சு. அருமையா பேசினாங்க.
DSC 7930 640x425   “நல்ல குணம் இருந்தால் மெயின் ரோட்டில் போகலாம்; இல்லையென்றால் பைபாஸ்  தான்” – சூப்பர் ஸ்டார் ருசிகரப் பேச்சு!DSC 7932 640x425   “நல்ல குணம் இருந்தால் மெயின் ரோட்டில் போகலாம்; இல்லையென்றால் பைபாஸ்  தான்” – சூப்பர் ஸ்டார் ருசிகரப் பேச்சு!DSC 7946 640x425   “நல்ல குணம் இருந்தால் மெயின் ரோட்டில் போகலாம்; இல்லையென்றால் பைபாஸ்  தான்” – சூப்பர் ஸ்டார் ருசிகரப் பேச்சு!
இந்த படத்தோட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, இந்த ரஜினிகாந்தோட இன்னொரு டைமன்ஷனை காட்டினவரு. அண்ணாமலையில நடிச்ச பிறகுதான் அதுமாதிரி கேரக்டர்கள்ல என்னை விரும்ப ஆரம்பிச்சாங்க. ‘பாட்ஷா‘வோட வெற்றிக்கு சுரேஷ்கிருஷ்ணா முக்கிய காரணம். அதே மாதிரி இந்தப் படத்தையும் பிரமாண்டமா உருவாக்கியிருக்காரு.
‘சந்திரமுகி’ படம் உருவானப்போ, அதுல இளையராஜா மியூசிக் போட்டா நல்லா இருக்குமுன்னு யோசிச்சேன். ஏன்னா அது மியூசிக்கல் சப்ஜெக்ட். ஆனா டிஷ்கசன்ல அதுபற்றி பேசாம போயிட்டேன். அதுக்கு பிறகு ஞாபகம் வந்து இளையராஜாவ போடுங்கன்னு சொன்னப்போ வித்யாசாகரை போட்டுட்டதா சொன்னாங்க. அவரு நல்ல பண்ணுவார்னு சொன்னாங்க. சொன்ன மாதிரியே பண்ணினார். இதுக்காக அவரை ஏழுட்டு தடவை மீட் பண்ணியிருக்கேன். அவரு இந்தப் படத்துக்கு அருமையா மியூசிக் போட்டிருக்காரு.
ஒரு நல்ல நடிகரா பா.விஜயை பார்க்குறேன். ஷங்கர் தன்னோட படத்துக்கு சில பாட்டெழுத வாலியையும், பா.விஜய்யையும் தேடுவாரு. இது இந்த காலத்துக்கும் பாட்டு எழுதுற இளைஞரா வாலிய காட்டுது. வாலிக்கு இணையா எழுதுற இளைஞரா பா.விஜய்ய காட்டுது.
நடிகர்கள்லேயே திரைக்கு பின்னாடி எனக்கு பிடிச்ச அற்புதமான மனிதர் நம்பியார். அவர்கிட்ட ஒருமுறை உங்க வயசென்ன என்று கேட்டேன். அதுக்கு அவர் ‘என் உடம்புக்கு 80, மனசுக்கு 18‘ன்னு சொன்னாரு. அதுமாதிரிதான் நம் முதல்வர் கலைஞர் இளைமையா இருக்கார்.
கர்நாடகாவுல தொட்டனகோடான்னு பெரிய டிராமா ஆர்ட்டிஸ்ட், பாடகர் இருந்தார். அவர் தன்னோட சுயசரிதையில கடவுள் எனக்கு பணம் மட்டும் கொடுத்திருந்தா, 60 வயசுல செத்து போயிருப்பேன். கலைய கொடுத்ததாலதான் வாழ்ந்திட்டிருக்கேன்னு சொன்னார். அதேமாதிரி கலைஞர் அரசியல்வாதி, எழுத்தாளர் என்பதை தாண்டி, அவர் கலைஞர் என்பதால்தான் அவரால் இன்றைக்கும் இளைஞனா வேலை செய்ய முடியுது. அவரது பேனாவுக்கு வயசாகாது. என்னோட பேனாவுக்கு வயசாயிடும். ஏன்னா நான் வெறும் நடிகன் மட்டும்தான். மனசு மட்டும்தான் வேலை செய்யும், மூளைக்கு பெருசா வேலையில்ல. அவருக்கு இரண்டுமே வேலை செய்யும்.
இவ்வாறு ரஜினி பேசினார்.
DSC 7707 640x425   “நல்ல குணம் இருந்தால் மெயின் ரோட்டில் போகலாம்; இல்லையென்றால் பைபாஸ்  தான்” – சூப்பர் ஸ்டார் ருசிகரப் பேச்சு!
விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கவிஞர் வைரமுத்து நடிகர் சுமன், நடிகைகள் குஷ்பு, மீரா ஜாஸ்மின், ரம்யா நம்பீசன், நமீதா, இசை அமைப்பாளர் வித்யாசாகர் மத்திய மாநில அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டர்.
முன்னதாக தயாரிப்பாளர் மார்ட்டின் வரவேற்றார். முடிவில் படத்தின் நாயகனும், பாடலாசிரியருமான பா.விஜய் நன்றி கூறினார். (நன்றி : தினகரன், 06/12/2010)

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...