சூப்பர் ஸ்டார் ரஜினி சென்ற மாதம் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதியின் திருமணத்திற்கு சென்றபோது, அவரது காரை பைக்கில் பின்தொடர்ந்து சென்ற கார்த்திக் என்ற நம் ரசிகர் ஒருவர் விபத்து ஏற்பட்டு அதில் மரணமடைந்தார்.
விபத்து குறித்து பின்னர் கேள்விப்பட்டவுடன், தலைவர் ரஜினி மிகவும் வேதனையடைந்து இரங்கல் செய்தி விடுத்தார். மேற்படி ரசிகரின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் அளிக்கவிருப்பதாகவும் கூறினார்.
இதையடுத்து அந்த ரசிகரின் குடும்பத்தினர் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் உள்ள தலைவரின் அலுவலகத்துக்கு நேற்று வரவழைக்கப்பட்டனர்.
ரசிகரின் பெற்றோருடன் அவர்களுக்கு துணையாக மதுரை நகர ரஜினி மன்றத்தை சேர்ந்தவர்களும் வந்திருந்தனர்.
விபத்தில் பலியான ரசிகரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார் தலைவர். பின்னர் அந்த குடுமப்த்திற்கு பொருளுதவி அளித்தார். பலியான ரசிகரின் சகோதரிகள் இருவரின் பெயரிலும் தலா 1,00,000/- ரூபாய் பிக்சட் டெப்பாசிட் செய்யப்பட்டு அதற்குரிய வங்கி ஆவணங்கள் அவர்களிடம் தரப்பட்டது. பின்னர் பெற்றோர்களிடம் இரண்டு லட்ச ரூபாய் உடனடி காசோலை தரப்பட்டது.
“உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு எந்த விதத்திலும் ஈடு செய்ய இயலாதது. இருப்பினும் உங்களுக்கு ஏதாவது செய்ய கடமைப்பட்டுள்ளேன். எனவே இதை செய்கிறேன். எதிர்காலத்தில் உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் என்னிடம் தயங்காமல் கேளுங்கள்” என்று தலைவர் அவர்களிடம் உறுதி கூறினார்.
மேலும் விபத்தில் சிறிய காயங்கள் அடைந்த இரு ரசிகர்களுக்கு தலா ரூ.20,000/- தரப்பட்டது.
“ரசிகர்கள் இது போன்ற நிகழ்சிகளுக்கு வாகனங்களில் வரும்போதும் செல்லும்போது, மிகவும் கவனமாக செல்லவேண்டும். தங்களது பெற்றோர்களையும் குடும்பத்தினரையும் மனதில் கொள்ளவேண்டும்” என்று அவர்களிடம் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
மன்ற விஷயங்களை பேச ரசிகர்கள் முற்ப்பட்டபோது, “இது அதற்க்கான சூழல் அல்ல. நாம் பின்னர் அது குறித்து பேசலாம்!” என்று ஸ்ட்ரிக்ட்டாக கூறிவிட்டார் தலைவர்.
[END]
No comments:
Post a Comment