Police Summons Director Shankar On Enthiran Story Issue (எந்திரன் கதை-ஷங்கருக்கு போலீஸ் சம்மன்!)
எந்திரன் கதை திருட்டுப் புகார் -விசாரணைக்கு வருமாறு ஷங்கருக்கு போலீஸ் சம்மன்
எந்திரன் கதை திருடப்பட்டதாக கூறப்பட்டுள்ள புகார் குறித்து விசாரிக்க போலீஸ் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்கு வருமாறு கூறி இயக்குநர் ஷங்கருக்கு போலீஸ் தரப்பிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான படம் எந்திரன். இப்படம் வெளியான சில நாட்களிலேயே இக்கதை எங்களுடைய படைப்பிலிருந்து திருடப்பட்டது என்று கூறி இரண்டு எழுத்தாளர்கள் புகார்களைத் தெரிவித்தனர்.
வாரப் பத்திரிக்கை ஒன்றில் பணியாற்றி வரும் ஆரூர் தமிழ்நாடன் என்கிற அமுதா தமிழ்நாடன், பிரபல சிறுகதை, தொடர்கதை எழுத்தாளரான ஆர்னிகா நாசர் ஆகியோரே அவர்கள்.
ஆர்னிகா நாசர் கொடுத்த புகாரில், ஜூகிபா என்ற தனது கதையையே எந்திரன் என்ற பெயரில் ஷங்கர் படமாக்கியுள்ளதாக போலீஸில் தெரிவித்திருந்தார். அதேபோல ஆரூர் தமிழ்நாடனும், தான் எழுதிய கதையை எடுத்து, அதில் சினிமானத்தனத்தைச் சேர்த்து எந்திரன் என்ற பெயரில் படமாக்கி விட்டதாக கூறியிருந்தார்.
இவர்களில் ஆரூர் தமிழ்நாடன், இழப்பீடு கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவின், திருட்டு வீடியோ பிரிவு விசாரணைக்கு ஆணையர் ராஜேந்திரன் உத்தரவி்ட்டுள்ளார்.
இதையடுத்து துணை ஆணையர் ஸ்ரீதர் மேற்பார்வையில் விசாரணையை தொடங்கியுள்ளார் இன்ஸ்பெக்டர் முத்துவேல் பாண்டி. இதன் ஒருபகுதியாக இயக்குநர் ஷங்கர், ஆரூர் தமிழ்நாடன் மற்றும் அவருடைய கதை பிரசுரமான பத்திரிக்கை ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்று அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment