Making of Endhiran - எந்திரன் மாதிரி இன்னொரு படம் சாத்தியம் இல்லை - சூப்பர் ஸ்டார் ரஜினி.

ந்திரனின் இமாலைய வெற்றிக்கு பின்னால் எவ்வளவு உழைப்பு இருக்கிறது என்பதை ரசிகர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன் எடுக்கப்பட்ட இந்த 'Making Of Endhiran' உண்மையில் தமிழ் திரை உலகம் மட்டுமல்ல, இந்திய திரை உலகத்திற்கும் கூட ஒரு புதுமையான முயற்சி. முதலில் ஷங்கருக்கு ரசிகர்கள் சார்பாக ஒரு மிக பெரிய நன்றி.

காதல் அணுக்கள் பாடலுக்கு தம்பிக்கு எந்த ஊரு படத்தில் வரும் ரஜினி ஒரு இன்ஸ்பரேஷன் என்று ஷங்கர் சொன்ன போது - ஆரம்ப நாட்களில் இருந்து ஷங்கர் எந்த அளவிற்கு தலைவரின் ரசிகனாக இருந்து இருக்கிறார் என்பதை உணர முடிகிறது..

தலைவர் எப்படி இன்றும் யாரும் அசைக்கமுடியாத சக்தியாக திகழ்கிறார் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் தலைவர் காட்டி இருக்கும் கடின உழைப்பே சான்று.

புனேவில் எடுக்கப்பட்ட ரயில் சண்டை காட்சியை பற்றி தலைவர் விவரித்தபோது நம் கண்களில் கண்ணீர். தலைவருக்கு ஒரு அன்பு வேண்டுகோள். இனி எக்காரணம் கொண்டும் நீங்கள் இப்படி பட்ட ரிஸ்க் காட்சிகளில் நடிக்ககூடாது. ஷங்கர் போன்ற இயக்குனர்களுக்கும் இதே வேண்டுகோள். ப்ளீஸ் யூஸ் டூப்ஸ். ரசிகர்களின் அன்பு கட்டளையாக கூட நீங்கள் இதை எடுத்து கொள்ளலாம்.

'வசீகரன் இங்கு தான் இருக்கிறான்' - என்று தலைவர் கர்ஜிக்கும் டப்பிங் காட்சிகள் அருமை. தலைவருடைய மந்திர குரல் மற்றும் டப்பிங் பேசும் காட்சிகளை முதன் முறையாக பார்த்தபொழுது நமக்குள் சிலிர்ப்பு.

கிளைமாக்ஸ் காட்சி குறித்த காட்சிகளை அமெரிக்க ஏர்போர்டில் தலைவரும், ஷங்கரும் விவாதித்த விதமும் அதனால் அங்கு ஏற்பட்ட பரபரப்பும் அழகு. கதையை விவாதிக்க வேறு இடமே கிடைக்கலைய ஷங்கர் சார் ? ஹாஹா.. நல்ல சொன்னிங்க போங்க. அதுவும் அமெரிக்க ஏர்போர்ட்டில். குசும்பு தான்.

தலைவரை ஹாலிவுட் மேக்கப் ஆர்டிஸ்ட் புகழும் காட்சி ஒன்று போதும் தலைவரை பற்றி புரிந்து கொள்ள.. தலைவரின் முகத்தில் எந்திர தனம் வருவதற்கு ஆசிட் ஊற்றி எடுக்கப்பட்ட காட்சிகள் நம்ம பத பதக்க வைக்கின்றன.

தலைவரை ஆறு மணி நேரம் ஒரு டேபிளுக்கு அடியில் படுக்க வைத்துவிட்டு மேக்கப் போட்டு எடுத்த காட்சியை பார்த்தபொழுதும், ஹாலிவுட் டெக்னிசியன்ஸ் நம் தலைவரை புகழ்ந்த பொழுது நம் கண்களில் தாரை தாரையாக கண்ணீர்... இந்த ஒரு உணர்வு தான் தலைவரை நாம் ஒரு நடிகராக மட்டுமே பார்க்கவில்லை என்பதை மற்றவர்களுக்கு புரிய வைக்கிறது.























இந்த 'Making of Endhiran' பார்த்த பிறகு technical விஷயங்களை ரசித்து அனுபவிக்க நாம் எந்திரனை பல முறை பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் தான் மேலோங்குகிறது. அது தான் இந்த எந்திரன் குழுவின் வெற்றியும் கூட.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...