“சோதனை வந்தாதானேய்யா சாதனை வரும்” என்ற தலைவரின் புகழ் பெற்ற ரியல் லைஃப் பன்ச்சுக்கு சரியான உதாரணம் ரோபோ தெலுங்கு பதிப்பு தான்.
‘ரோபோ’ தெலுங்கில் வெளியாவதற்கு முன்பு, படத்தை பற்றி அவதூறாக வேண்டுமென்றே திட்டமிட்டு வதந்தி பரப்பப்பட்டது. இந்த படத்தை வாங்கிய தோட்டம் கண்ணா ராவுக்கு கலவரம் ஏற்படுத்தும் வகையில் சில ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாயின… “இத்துனை பெரிய தொகைக்கு விற்கிறார்களே… தயாரிப்பாளருக்கு ஏதாவது மிஞ்சுமா?” என்றெல்லாம் ஏகடியம் பேசினார்கள். ………..ஆனால் நடந்தது என்ன?
நீங்களே பாருங்கள்…….!!
* ஆந்திராவில் இது வரை வந்த டாப் வசூல் படங்களில் ரோபோவுக்கு இரண்டாவது (மகதீராவுக்கு அடுத்து) கிடைத்துள்ளது. (ரோபோ டப்பிங் படம் என்பதை நினைவில் கொள்ளவும்).
* 2010 ஆம் ஆண்டு வெளியான படங்களில் முதலிடம் ரோபோ.. ரோபோவே தான்.
* ஆந்திராவின் ALL-TIME TOP GROSSER படங்கள் லிஸ்ட்டில் ரோபோவும் இடம்பிடித்துவிட்டது. (ஆந்திராவின் பிற ALL-TIME BIG GROSSERS போக்கிரி, அருந்ததி, சிம்மா, மகதீரா, பிருந்தாவனம் ETC.)
* ஆந்திராவில் – வெளியான முதல் வாரத்தில் – ரோபோ வசூல் செய்த மொத்த தொகை ரூ.15.5 கோடிகள். ஆந்திராவை பொறுத்தவரை இது இரண்டாவது பெரிய ஓப்பனிங்.
* இரண்டாவது வாரத்தில் வசூல் செய்த மொத்த தொகை – ரூ.23.2 கோடிகள்.
* நிஜாம் விநியோக வட்டத்தில் நான்கு வாரங்களுக்குள் ரூ.9 கோடிக்கு மேல் வசூல் செய்த வெகு சில படங்களுள் ரோபோவும் ஒன்று. (மற்றவை : மகதீரா & பிருந்தாவனம்).
* ஆந்திராவில் நான்கு வார முடிவில் ரோபோ வசூல் செய்த மொத்த லாபம் ரூ.30.5 கோடிகள். (இதில் பெரும்பான்மையான வசூல் நிஜாம், CEDED, குண்டூர் ஆகிய மாவட்டங்களில் வந்தவை!)
* ஆந்திர திரையுலக வரலாற்றில் இன்றுவரை இரண்டாவது அதிக வசூல் செய்த படமாக ரோபோ மாறியிருக்கிறது. இது வரை சிட்டி வசூலித்த மொத்த லாபத் தொகை ரூ. 35.67 கோடிகள்.
* ஐந்தாவது வார முடிவில் – கிழக்கு கோதாவரி (East Godavari) மாவட்டத்தில் – அதிக வசூலித்த படங்களுள் ரோபோவும் ஒன்று. (மகதீரா, போக்கிரி, ஜல்சா, அருந்ததி, அதுர்ஸ் ஆகியவை மற்ற படங்கள்).
* கிருஷ்ணா மாவட்டத்தில் இதுவரை அதிக பட்ச லாபம் ஈட்டித் தந்த 4 படங்களுள் ரோபோவும் ஒன்று. இம்மாவட்டத்தில் மட்டும் ரோபோ ரூ.2 கோடிகள் விநியோகஸ்தருக்கு லாபம் ஈட்டித் தந்தது. இம்மாவட்டத்தில் ரோபோவை வெளியிட்டவர் திரு.அலங்கார் பிரசாத். (மகதீரா, போக்கிரி, இந்த்ரா ஆகியவை மற்ற படங்கள்).
* இதுவரை தெலுங்கில் வெளியான சூப்பர் ஸ்டாரின் படங்களுள் மிகப் பெரிய வெற்றி பெற்றிருப்பதும் எந்திரனே.
* அதேபோல, தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகிய படங்களில் வசூலில் முதலிடத்தில் இருப்பது ரோபோடா… ரோபோ!
* ரோபோவுக்கு பிறகு வெளியான பல தெலுங்கு படங்கள் வந்த சுவடே தெரியாது காணாமல் போய்விட… 50 நாட்களுக்கு பின்னரும் கூட ரோபோ பல தியேட்டர்களில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. (இணைக்கப்பட்டுள்ள விளம்பரத்தை பாருங்கள்!).
* ரோபோ தெலுங்கு தயாரிப்பாளர் தோட்டம் கண்ணா ராவ் அளித்துள்ள 50 வது நாள் விளம்பரம் உங்கள் பார்வைக்கு. (சன் பிக்சர்சிடம் நாம் நிறைய எதிர்பார்த்தோம். ஆனா? ஹூம்…!)
மேற்காணப்படும் விளம்பரத்தில் உள்ள வாசகங்களின் தமிழாக்கம்:
ரிலீசான அனைத்து சென்டர்களிலும் ரோபோவின் சரித்திர சாதனை!!
நூறாவது நாளை நோக்கி…!!
“எங்கள் முதல் தயாரிப்பை மிகப் பெரிய வெற்றி அடையச் செய்த அனைத்து ரசிகர்களுக்கும் திரையுலக நண்பர்களுக்கும் பத்திரிக்கைகளுக்கும் விநோயோகஸ்தர்களுக்கும் மீடியாவுக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எங்கள் இதயப் பூர்வமான நன்றி.”
- இப்படிக்கு தோட்டா கண்ணையா, ஸ்ரீ கிருஷ்ணா ட்ரேடர்ஸ், மேற்கு கோதாவரி ஜில்லா.
மேற்படி பாக்ஸ் ஆபீஸ் செய்திகளுக்கான ஆதாரம் :
http://www.andhraboxoffice.com/info.aspx?id=27&cid=6&fid=1
(இந்த தொகுப்பை தயார் செய்ய நமக்கு பேருதவியாக இருந்த நண்பர் R.கோபி மற்றும் தெலுங்கு மொழி பெயர்ப்பில் உதவியாக இருந்த நண்பர் TVE ராஜேஷ் இருவருக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றி!)
[ரோபோவின் ஈடு இணையற்ற மாபெரும் வெற்றி குறித்த தொலைகாட்சி செய்தி வீடியோ க்ளிப்பிங்குகள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் நம் தளத்திற்கு அளித்த விஷேஷ தகவல்கள்.... Get ready folks to read them in Part 2]
[Part 1 Ends.....to be continued in Part 2]
No comments:
Post a Comment