தலைவரின் எந்திரன் திரைப்படம் உலகம் முழுக்க 50 நாட்களை கடந்து வெற்றி நடைபோடுகிறது.
கடந்த அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுக்க 3000 திரையரங்குகளில் வெளியாகி வசூலில் புதிய சரித்திரம் படைத்தது. உள்நாடு, வெளிநாடு இரண்டிலும் சேர்த்து இந்தப் படத்தின் மொத்த வசூல் ரூ 350 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை 29, மதுரை 31, திருச்சி 26, சேலம் 26, கோயம்பத்தூர் 8, திருநெல்வேலி 9, நார்த் ஆர்காட் 26, மற்றும் உலகம் முழுவதும் என மொத்தம் 145 திரை அரங்குகளில் வெற்றி நடை போடுகிறான் எந்திரன். இனி இப்படி ஒரு சாதனையை திரையுலகில் எவரேலும் நிகழ்த்தமுடியுமா என்ற ஒரு மிக மிக பிரமாண்ட வினா எழுவதை இத்தருணத்தில் தவிர்க்க முடியவில்லை.
இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரான படம் மட்டுமல்ல... இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படமும் எந்திரனே.
தெலுங்கில் புதிய வசூல் சாதனை நிகழ்த்தியுள்ள ரோபோ, இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆந்திராவில் மகதீரா படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது ரோபோ.
குஜராத், ஹரியானா போன்ற வெளி மாநிலங்கள், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் சில குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் இந்தப் படம் 50 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருப்பதாக சன் பிக்சர்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் எந்திரன் படத்தை ஜப்பானில் வெளியிடும் முயற்சிகளில் உள்ளது சன் பிக்சர்ஸ்.
திருட்டு டிவிடி, இணையதள வெளியீடு என ஒரு படத்துக்கு ஏராளமான சோதனைகள் மலிந்துவிட்ட இந்த நாட்களில், ரூ 350 கோடிக்கும் மேல் வசூலித்த ஒரு படம் 50 நாட்களைக் கடந்தும் ஓடுவது பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
அரிமா அரிமா பாடலில் ரஜினியை வைரமுத்து சிலிக்கான் சிங்கம் என எழுதியுள்ளார். இந்த சிலிக்கான் சிங்கத்திற்கு ஓய்வு கிடையாது என்பதை எந்திரன் நிரூபித்துள்ளது.
Andra
Karnataka
Kerala
Singapore
Malaysia
No comments:
Post a Comment