
திருமண வைபவங்களின்போது அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது. அப்படி நினைப்பவன் மிகப் பெரிய முட்டாள் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
வைரமுத்து மகன் கபிலன் திருமண நிகழ்ச்சியின்போது பேசுகையில் இவ்வாறு ரஜினி
![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
திருமணத்தில் அனைவரையும் திருப்திபடுத்தவேண்டும் என்பது முடியாத காரியம். அவ்வாறு அனைவரையும் திருப்திபடுத்த வேண்டும் என்று நினைப்பவன் மிகப் பெரிய முட்டாள். இரண்டு திருமணத்தை நடத்தியதன் மூலம் நான் தெரிந்து கொண்டது இதுதான்.
இது தெரிந்திருந்தும் அனைவரையும் திருப்திபடுத்த வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து இங்கு எடுத்திருக்கும் முயற்சி பாராட்டுக்கு உரியது.
கோபம் எனது பலவீனம்:
கோபம் என்பது என்னுடைய பலம் என நீண்ட நாள் நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, அது பலம் அல்ல, பலவீனம் என புரிய வைத்தவர் வைரமுத்து. ஏனெனில் அவர் என்னை விட அதிக கோபக்காரர்.
வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தால்தான், உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். எனவே, மணமக்கள் இருவரும் முதலில் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றார் ரஜினிகாந்த்.
No comments:
Post a Comment