
ஆன்லைன் பாடல் விற்பனையில், ரஜினிகாந்த்
![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
முன்னணி ஆன்லைன் விற்பனையகமான ஆப்பிள் ஐட்யூன் ஸ்டோர்ஸின் சர்வதேச இசைப் பிரிவில், எந்திரன் முதலிடத்தைப் பிடித்தது. இருப்பினும் தற்போது அது 2வது இடத்திற்கு வந்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் நடந்த விற்பனையில்தான் எந்திரனுக்கு இந்த சாதனை கிடைத்துள்ளது. 2வது இடத்திற்கு வந்தாலும் கூட முதலிடத்தை பிடித்த முதல் தமிழ்
![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
ஒரு தமிழ்ப் படத்தின் ஆடியோ விற்பனை முதலிடத்தைப் பிடித்தது ஆப்பிள் ஐட்யூன் ஸ்டோர்ஸின் வரலாற்றில் இதுதான் முதல் முறையாம்.
எந்திரன் ஆடியோ மலேசியாவில் வெளியிடப்பட்ட 2 நாட்களுக்குள் இந்த சாதனையை அது படைத்துள்ளது.
ஆப்பிள் ஐட்யூன் இணையதள விற்பனையகம் மூலம் கடந்த 2 நாட்களில் விற்பனையான ஆடியோக்களிலேயே எந்திரனின் பங்கு 70 சதவீதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் படம் என்பதோடு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை என்பதும் கூடுதல் போனஸாக அமைந்துள்ளதால், எந்திரன் பட பாடல்களுக்கு ஆன்லைன் விற்பனையில் கிராக்கி ஏற்பட்டுள்ளதாம்.
No comments:
Post a Comment