ரஜினிக்கு அனுமதி; ஜேம்ஸ் பாண்டுக்கு இல்லை!

ந்திரன் படப்பிடிப்பு 2008 இல் துவங்கியபோது, ‘கிளிமாஞ்சரோ’ பாடலை படமாக்க ஷங்கர் இதுவரை சினிமாவில் யாரும் காட்டியிராத ஒரு லொக்கேஷனை தேர்ந்தெடுக்க விரும்பினார். அதிசயக்கித்தக்க வகையில் அவர்கள் முதன் முதலில் சென்று இறங்கிய இடம், ஜேம்ஸ் பான்ட் படத்திற்கு கூட அனுமதி மறுக்கப்பட்ட ஒரு இடமாகும். மாச்சு பிச்சு என்னும் இந்த இடம், பெரு நாட்டில் உள்ளது. நவீன உலக அதிசயங்களில் ஒன்று இது. (Seven Wonders of the Modern World).

Machu Pichu 5  640x450  ரஜினிக்கு அனுமதி; ஜேம்ஸ் பாண்டுக்கு இல்லை!

Hindustan Times – பெங்களூர் பதிப்பில் வெளியான இது பற்றிய இதுவரை கேள்விப்பட்டிராத செய்தியுடன், ரத்னவேலு சமீபத்தில் ஒரு ஆங்கில சானலுக்கு அளித்த பேட்டியிலிருந்து சில தகவல்களை சேர்த்து இந்த பதிவை தந்திருக்கிறேன்.

மூன்று வருடங்களுக்கு முன்பு, Quantum of Solace என்ற ஜேம்ஸ் பான்ட் 007 படத்திற்காக அதன் தயாரிப்பாளர்கள், மேற்படி இடத்தில் ஷூட்டிங் நடத்த அனுமதி கேட்டபோது, பெரு அரசாங்கம் அதற்க்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. UNESCO வின் பாதுகாக்கப்பட்ட இடங்களில் இந்த மாச்சு பிச்சுவும் ஒன்று. படப்பிடிப்பு முதலியவற்றை அனுமதித்தால் அதன் இயற்க்கை அழகு சிதைந்துவிட வாய்ப்புண்டு என்ற அச்சத்தால் வந்தது இந்த மறுப்பு.

ஆனால், சூப்பர் ஸ்டார் இருக்க, இது போன்ற தடைகள் ஏதும் வரமுடியுமா? அதிசயிக்கத்தக்க வகையில் எந்திரன் ஷூடிங்கிற்க்கு இங்கு அனுமதி கிடைத்தது. ஆனால் அப்போதும் சோதனை தீரவில்லை. ஷூட்டிங் நடத்தலாம், ஆனால் லைட்டிங் எதுவும் போடக்கூடாது என்ற நிபந்தனையுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்தது. லைட்டிங் இல்லாமல் ஷூட்டிங்கா? ஒரு படத்திற்கு பகலில் ஷூட்டிங் நடந்தாலும், லைட்டிங் என்பது முக்கியம். காரணம், முகத்தில் விழும் ஷேடோக்களை, லைட்டிங் வைத்து தான் நீக்கமுடியும். லைட்டிங்கே இல்லாமல் எப்படி படப்பிடிப்பு நடத்துவதாம்?

இதில் திடுக்கிடவைக்கும் சமாச்சாரம் என்னவென்றால், இந்த விஷயம் (லைட்டிங் வைக்கக்கொடாது என்ற சமாச்சாரம்) எந்திரன் யூனிட்டுக்கு அங்கு பொய் இறங்கியதும் தான் தெரியுமாம். இத்துனை செலவு செய்து வந்தாயிற்று. படப்பிடிப்பு நடத்தாமல் திரும்பமுடியாது. வேறொரு இடத்தை தேர்வு செய்தால் கூட அதற்க்கும் நேரம் பிடிக்கும். என்ன செய்வது என்று எந்திரன் யூனிட் கையை பிசைந்த போது, ரத்னவேலு கைகொடுத்தார். “லைட்டிங் இல்லாமலே நான் ஒளிப்பதிவு செய்கிறேன். அது என்னால் முடியும்” என்று கூறி, கிளிமாஞ்சரோ பாடலை படம்பிடித்தார் ரேண்டி. பாடல் எப்படி வருமோ என்று திகிலுடன் இருந்தவர்கள், ரஷ் மற்றும் டபுள் பாசிட்டிவ் பார்த்தபிறகு அசந்துவிட்டார்கலாம். சூப்பர் ஸ்டார் விஷேஷமாக பாராட்டு தெரிவித்தாராம். அந்தளவு, ரேண்டி கச்சிதமாக படம்பிடித்திருக்கிராராம்.

Machu Pichu 3  640x444  ரஜினிக்கு அனுமதி; ஜேம்ஸ் பாண்டுக்கு இல்லை!

சரி…மாச்சு பிச்சுவிர்க்கு வருவோம். “அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது. அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்பட்ட முதல் படம் எந்திரன் தான்,” என்று கூறுகிறார் ஷங்கர்.

கிளிமாஞ்சரோ பாடலை பார்க்க பிரமாதமாக இருக்கிறது. ஆனால் அதை எடுக்க அவர்கள் பட்ட பாடு… அப்பப்பா…

அந்த பகுதியில் எங்கு பார்த்தாலும் பூச்சிகள். யூனிட்டாரை அவை பதம் பார்க்கும் வரை அவற்றை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. பிறகு தான் தெரிந்தது, இந்த பூச்சிகடி கொஞ்சம் வித்தியாசமானது என்று. முதலில் அரிப்பு ஏற்படும். பின்னர் அந்த இடம் புண்ணாகிவிடும். கூடவே இலவச இணைப்பாக மூச்சுத்திணறல். இங்கு வந்த பிறகு, கடிபட்ட பலர், தொடர்ந்த பல நாட்கள் சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னரே குணமடைந்தனர். அந்தளவு கடியோ கடி. புண் ஆறிய பிறகு கூட அந்த வடு பெரும்பாலானோருக்கு மறையவில்லையாம்.

(அது சரி… தலைவரும், உலக அழகியும் எப்படி இந்த கடியில இருந்து தப்பிச்சாங்க?)

மாச்சு பிச்சு – சிறு குறிப்பு:

மாச்சு பிச்சு (அப்படினா பழைய மலைன்னு அர்த்தம்), பெரு நாட்டில், இன்கா சாம்ராஜ்ஜியம் விரவியிருந்த காலகட்டத்தில், மலைக்கு மேல் கட்டப்பட்ட ஒரு கட்டுமானம் ஆகும். கட்டப்பட்ட ஆண்டு கி.பி.1450 . பிற்பாடு பெரு மீது நடந்த ஸ்பானிய படையெடுப்பால், பல கட்டுமானங்கள் நிர்மூலமாக்கப்பட்டாலும், இது மட்டும் தப்பியது. 1981 ஆம் ஆண்டு பெரு அரசாங்கம் இதை வரலாற்று நினைவு சின்னமாக அறிவித்தது. 2007 ஆம் ஆண்டு நடந்த “Modern Wonders of World” இணையதள வாஎக்கேடுப்பில், ஏழு நவீன உலக அதிசயங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

என்ன, ‘கிளிமாஞ்சரோ’ பாட்டை இப்போவே பார்க்கனும்னு தோணுதா?

Machu Pichu HT  640x438  ரஜினிக்கு அனுமதி; ஜேம்ஸ் பாண்டுக்கு இல்லை!

[END]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...