ரஜினி இந்திய மண்ணின் நிஜமான மைந்தன்-அமிதாப் பச்சன்


ரஜினி இந்திய மண்ணின் நிஜமான மைந்தன். ஒரு இந்தியக் குடிமகனுக்கு சிறந்த உதாரணம் ரஜினி [^], என்றார் அமிதாப் பச்சன்.

ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடித்த ரோபோ படத்தின் இசை வெளியீட்டு விழா மும்பையில் பிரமாண்டமாக நடந்தது. பாலிவுட் [^] சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இசைத் தகடை வெளியிட்டார்.

அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், இயக்குநர் [^] ஷங்கர், ரசூல் பூக்குட்டி, ஏ ஆர் ரஹ்மான், சக் பிக்சர்ஸ் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா என பிரபலங்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

இசை வெளியீட்டுக்குப் பிறகு அமிதாப் பச்சன் பேசியது:

ரஜினியுடன் இருப்பது எப்போதுமே மகிழ்ச்சிக்குரிய விஷயம். அவரைப் போன்ற கலைஞர்கள் ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறைதான் வருவார்கள்.

இந்திய மண்ணின் உண்மையான மைந்தன் ரஜினிதான். ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உதாரணமாகத் திகழ்பவர் ரஜினி.

அவரது மனித நேயம், எளிமையை நான் மிகவும் விரும்புகிறேன். வானளாவிய புகழ், செல்வாக்கு எல்லாம் இருந்தும், ஒரு சாதாரண மனிதனாகவே தன் வாழ்நாள் முழுதும் இருந்து வருகிறார் ரஜினி. அவரைப் போன்ற ஒரு சிறந்த மனிதரை, நண்பரை, கலைஞரை நான் பார்த்ததில்லை," என்றார் அமிதாப்.

இயக்குநர் ஷங்கர் பேசுகையில், "ரோபோ ஒரு தமிழ்ப் படமோ, தெலுங்குப் படமோ, இந்திப் படமோ அல்ல. இது ஒரு இந்தியப் படம் [^]. இந்தியாவின் படைப்பாற்றலை உலகுக்குப் பறைசாற்றும் ஒரு படம்" என்றார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...