
“வருஷத்துல 15 நாள், எங்கேயாவது  தனியா டூர் அடிச்சிடுவேன். போன வருஷம்   ரிஷிகேஷ் போயிருந்தேன். இந்த வருஷமும் இமயமலைக்கு போக நினைச்சேன்.   அதற்க்கான டீம் யாராவது இருக்கங்களான்னு தேடி பிடிச்சேன். ‘குலு’ங்குற   இடத்துலருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் 1500 அடி உயர்த்துளிருக்குற கஜோல்   மழைப் பகுதியிலிருந்து தொடங்கிச்சு என்னோட பயணம்.
எங்க டீம்ல ஆறு பெண்கள். ஐ.ஐ.டி. ஸ்டூடண்ட்ஸ் சில பேர் இருந்தாங்க. அவங்களுக்கு என்னை தெரிஞ்சி போச்சு. பேசி சிரிச்சிக்கிட்டே நடக்க ஆரம்பித்தோம். பதினொரு நாள் கழிச்சி தான் கீழே இறங்கினோம். செங்குத்தான பாறைகள் நடக்கவே முடியாத வழுக்கு பாறைகள், வெளிச்சம் இல்லாத கும்மிருட்டு மலையில் தூங்கியது எல்லாமே த்ரில் அனுபவம்பா. என்று கூறும் பத்மப் ப்ரியாவின் கண்களில் இன்னும் தெரிகிறது மிரட்சி.

தரையிலிருந்து உயரமான இடம். முகத்தில் அறைவது போன்ற பணி, பார்க்குற   இடமெல்லாம் மலைகள். இதோட முன் பின் அறிமுகமில்லாத மனிதர்கள். இப்படி ஒரு   இடத்தில் இருக்கும்போது தான் வாழ்க்கையின் அர்த்தம் புரிகிறது. ஒரு நாள்   முழுக்க விடாமல் பெய்த மழையால் நாங்கள் கூடாரத்துக்குல்லேயே அடங்கி   கிடந்தோம். வெளியே எட்டி கூட பார்க்கமுடியவில்லை. இருக்குற உணவும்   தீர்ந்துபோச்சு. புதுசா சமைக்க வழியில்லே. ஒன்றரை நாள் இப்படியே போச்சு.   அதிகமான குளிர் அடிச்சதுல ஆறு நாள் குளிக்க முடியலே. பல் துலக்க முடியலே.   ஆனாலும் மலையேறுவது மட்டும் நிற்கவில்லை. ஒரு நாள் இரவு ஒரு மணிக்கு   எழுந்து நடந்தோம். சூரிய வெப்பத்தில் பணி உருக ஆரம்பித்தால் நடக்க   முடியாது. அதனால் அந்த ஒரு நாள் மட்டும் சீக்கிரம் கிளம்பினோம்.   எழுந்திருக்க தான் முடியலியே தவிர நடக்க ஆரம்பிச்ச பிறகு மனசும் உடம்பும்   சுறுசுருப்பாயிடுச்சு. அங்க மூணு மணிக்கே சூரியன் உடிச்சிடுச்சு. அந்த அழகை   சொன்னா புரியாது. நீங்களே பொய் பாருங்க. கீழேயிருந்து கிளம்பும்போது   பேசியல் க்ரீம், பவுடர் அது இதுன்னு நிறையே எடுத்திட்டு போனோம். திரும்புற   போட்து, இதெல்லாம் நமக்கு தேவையா? உடுக்க இரு துணி மட்டும் போதும் என்கிற   நிலைக்கு மனசு வந்திடுச்சு. மனசு நிஜமான வாழ்க்கையை நேசிக்க   ஆரம்பிச்சுடுச்சு.
ரஜினி சாரி இவ்வளவு புகழையும் தலைக்கு ஏற விடாமல் எளிமையா இருக்கிரார்ணா அதுக்கு காரணம் இது போன்ற பயணங்கள் அவருக்கு தந்த பக்குவம் தான்.” நாம் இந்த செய்தியை இங்கு வெளியிட காரணமான அந்த இரண்டு வரிகளை கூறி தனது பயண அனுவபவத்தை கூறி முடித்தார் பத்மப்ரியா. (நூற்றுக்கு நூறு உண்மைங்க!)
எப்படி இருந்துச்சு பத்மப்ரியா சொன்னது? ஏதோ நாமும் உடன் போய்விட்டு வந்த ஃபீலிங்கை தருதுல்லே…
(தலைவா… எப்போ ரிஷிகேஷ் போகப்போறீங்க?)
2) சூர்யாவிடம் தலைவர் சொன்ன வார்த்தைகள் என்ன?
தமிழ் சினிமா வர்த்தகத்தில் சூப்பர்  ஸ்டாருக்கு அடுத்த இடத்தில் – வெகு  தூரத்தில் – கமல் இருக்கிறார். அவருக்கு  அடுத்த இடத்திலிருப்பவர்…சூர்யா.  உண்மையான திறமையும் அதேர்கேற்றார் போல  வெற்றியும் இப்போ சூர்யா வசம்.  (ஆணவம் தலைக்கேறாமல் பார்த்துகோங்க சூர்யா.  அது தான் முக்கியம்!)
இரு வேறு சந்தர்ப்பங்களில் சூப்பர் ஸ்டாரை தற்செயலாக சந்திக்க நேர்ந்த   சூர்யாவுக்கு தலைவர் சொன்னவை: “மக்கள் உங்க கிட்டே ரொம்ப   எதிர்ப்பார்க்குறாங்க சூர்யா. பார்த்து கவனமா படங்களை செலக்ட் செய்ங்க.   அடுத்து நீ இப்போ ஹீரோ மட்டும் கிடையாது. நடிகன். சண்டை போடு, டூயட் பாடு.   இரண்டு படத்துல நல்லா நடிக்கவும் செஞ்சிடு” ன்னு அட்வைஸ் பண்ணார். கொஞ்சம்   பயமாத்தான் இருக்கு என்று சொல்லும் சூர்யாவிடம் உண்மையில் சற்று பயம்   தெரிகிறது. இந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ளவேண்டுமே என்ற பயம் தான் அது.
தலைவர் சொல்றதை கேளுங்க சூர்யா. அது போதும்.
3) சூப்பர் ஸ்டாரின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்…
எந்திரன் படப்பிடிப்பின் நிறைவு நாளன்று அனைவரும் சற்று கனத்த இதயத்துடன் இருந்தனர். ஐஸ்வர்யா ராய்க்கு அந்த உணர்வு சற்று கூடுதலாகவே இருந்தது. இறுதி நாள் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் அந்த இடத்தை விட்டு அகலவே ஐஸ்வர்யாவுக்கு மனமில்லை.
அப்போது தான் மொத்த யூனிட்டுமே வியக்கும் அளவிற்கு ஐஸ்வர்யா அந்த செயலை   செய்தார். யாரும் எதிர்பாராத வகையில் ரஜினி காலில் திடீரென்று விழுந்து   வணங்கி, தன்னை வாழ்த்தி ஆசி வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
ஐஸ்வர்யாராய்  செயல் ரஜினிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு கணம் என்ன  சொல்வதென்று  புரியாமல் தடுமாறினார். பின்னர் தன்னை ஆசுவாசப்படுத்திக்  கொண்டு  ஐஸ்வர்யாராயை ஆசீர்வதித்தார். நீ எனக்கும் மருமகள் போல தான் என்று  சொல்லி  வாழ்த்து கூறினார்.
ஐஸ்வர்யா ராயின் பணிவை பார்த்து படப்பிடிப்பு குழுவினர் வியந்தார்கள்.
4) ரஜினி, கமல்… யார் பெஸ்ட்? த்ரிஷாவின் பதில்!
மேக்ஸிம் ஆங்கில இதழின் அட்டை படத்தில் ஸ்ரேயாவுக்கு அடுத்து இடம் பிடித்திருப்பது த்ரிஷா (தமிழ் நடிகைகளில்). சமீபத்தில் வெளியாகியுள்ள மேக்ஸிம் இதழுக்கு த்ரிஷா படு கவர்ச்சியான போஸ்களுடன் SHORT & SWEET பேட்டி ஒன்றும் கொடுத்திருக்கிறார்.
தலைவரை பற்றி ஒரு கேள்விக்கு பதிலளித்திருப்பதால் அதை மட்டும் இங்கு தருகிறேன்.
மேக்சிம்: தமிழில் வெற்றிகரமான நடிகையாக இருக்கிறீர்கள். யார் சிறந்தவர்…. கமலா…? ரஜினியா…?
த்ரிஷா: இருவரும் வெவ்வேறு வகையில் வித்தியாசமானவர்கள். ரஜினிகாந்த் ஒரு ஸ்டார் என்றால் கமல் சற்று சீரியசான ஒரு நடிகர். எல்லோரிடமும் பணிபுரியவேண்டும் என்ற ஆவல் உள்ளவர். சுலபமாக அணுகமுடியாதவர் போன்று முதலில் தெரிவார். ஆனால் அப்படியல்ல. ஆனால் ரஜினியோ முழுமையாக ஒரு மக்கள் கலைஞர். (இதன் அர்த்தம் என்னவென்றால், ரஜினியை மக்கள் சுலபமாக தங்களுடன் ரிலேட் செய்து கொள்கின்றனர்!)
(நமது தளத்திற்கு இருக்கும் பெண் வாசகர்களை கருதி, மேக்சிம் இதழின் அட்டை படத்தை பிரசுரிக்கும் எண்ணத்தை கைவிட்டுவிட்டேன். ஸாரி…!)
5) சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் – கனவுக் கன்னி தமன்னா
ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டிருந்த தமன்னாவின் மார்க்கெட்டில்   எதிர்பார்த்த விதமாய் ஒரு சிறிய தடங்கல். (காரணத்தை சொல்லனுமா என்ன?)   இருப்பினும் மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்குமா கதையாக இன்னும்   முதலிடத்தில் தான் இருக்கிறார் தமன்னா.
பிலிம்பேர் இதழின் 57 வது ஆண்டு விருதுகள் வழங்கும் விழா வரும் ஆகஸ்ட் 7   ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. அதற்க்கான நியமனப் பட்டியலை   அறிவிக்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் கலந்துகொண்டு   குத்துவிளக்கேற்றி பேசிய நடிகை தமன்னா கூறியதாவது: “இது போன்ற விருதுகள்   திரைப் படைத்துறையினரை மிகவும் ஊக்குவிக்க உதவும். சூர்யா, கார்த்தி,   விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளேன். அவர்களில்   என்னை கவர்ந்தவர் இவர் தான் என தனிப்பட்ட முறையில் சொல்ல முடியாது.   ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கிறது. அதை தான்   பார்க்கவேண்டும்.
ரஜினிகாந்த்துடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கம் எல்லா நடிகைகளிடமும் இருக்கும். அந்த பொன்னான வாய்ப்புக்காக நானும் காத்திருக்கிறேன்.
பாலிவுட்டில் ஹ்ரித்திக் ரோஷனை எனக்கு பிடிக்கும். இங்கு தங்கள் இடத்தை தக்க வைத்துகொள்ள நடிகைகளிட்யே கடும் போட்டி இருக்கிறது. அது தேவையான ஒன்று தான்.” என்று கூறினார் தம்மு.
(என்னோட ஆசை என்னன்னா… தலைவர் சினிமாவிலிருந்து விலகுவதற்கு முன்பு, அவருடன் தமன்னாவும், அனுஷ்காவும் ஒரு படத்திலாவது நடித்துவிடவேண்டும் என்பது தான். ஹி… ஹி… !!)
6) மதராசப்பட்டினம் – அவசியம் பார்க்க வேண்டிய படம் !
பொதுவாக தலைவரின் படங்களை தவிர்த்து, மற்றவர்களின் படங்களை பற்றி நான்   அதிகம் நம் தளத்தில் REFER செய்வது கிடையாது. அப்படி REFER  செய்திருந்தால்   தலைவர் ஏதாவது ஒரு விதத்தில் அதில் சம்பந்தப்பட்டிருப்பார்.
இருப்பினும் இதற்க்கெல்லாம் அப்பாற்ப்பட்டு என்னை பாதித்த – நான் உங்களிடம்   பகிர்ந்து கொள்ளவேண்டிய படங்கள் – சில உண்டு. (நேரமில்லாத காரணத்தால் சில   படங்களை பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாமல் போனதுண்டு.) அப்படி   என்னை சமீபத்தில் பாதித்த படம் மதராசப்பட்டினம். 60 வருடங்களுக்கு முந்தைய   சென்னையை, ஸாரி மதராசப்பட்டினத்தை அப்படியே கண் முன்னர் கொண்டு வந்து   நிறுத்தியிருக்கிறார்கள். கூடவே ஒரு அருமையான காதல் கதையுடன்.   (ஆனந்தபுரத்து வீடு படத்தையும் ஒரு முறை பார்க்க வேண்டும் என்று   நினைக்கிறேன். 13 வருடங்களுக்கு முன்பு சன். டி.வி.யில். ஒளிபரப்பான   நாகாவின் மர்மதேசம் ஒரு நாள் விடாமல் பார்த்தவன் நான்.)
மதராசப்பட்டினத்திற்க்கு வருவோம்…. இப்படி ஒரு காலகட்டத்தில் நாம் மீண்டும் நுழைய மாட்டோமா என்று ஏங்கவைக்கும் அளவிற்கு வெள்ளந்தியான மனிதர்கள். மாசற்ற நகரம். போக்குவரத்து நெரிசலற்ற சென்னை நகர் சாலைகள். படத்தை பாருங்கள்… சென்னை அப்படியே மதராசப்பட்டினமாக மாறக்கூடாதா என்று மனம் ஏங்கும்.
படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் படக்குழுவினரின் உழைப்பு தெரிகிறது. சவாலான ஒரு சப்ஜெக்டை கையில் எடுத்து அதை அழகாக படம்பிடித்து வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் விஜய். தரமான சினிமா ஆர்வலர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படமிது. குடும்பத்துடன். பைரசியை புறக்கணித்து திரையரங்குகளில் சென்று இப்படத்தை பாருங்கள். இது போன்று தரமான படைப்புக்களை ஊக்குவியுங்கள். தமிழ் சினிமா தழைக்கும்.
நல்ல திரைப்படங்களை அதுவும் வெற்றி திரைப்படங்களை தேடி பிடித்து பார்க்கும் வழக்கமுடைய நம் தலைவர் இந்த படத்தை பார்க்காது விட்டுவிடுவாரா என்ன? விரைவில் சூப்பர் ஸ்டார் இப்படத்தை பார்க்கக்கூடும். நானும் அந்த செய்தியை இங்கு பகிர்ந்துக்கொள்ளத் தான் போகிறேன்.
[நன்றி: குமுதம், ஆனந்த விகடன், MAXIM மாத இதழ், DECCAN CHRONICLE & தினகரன்]
[END]
Translation
- By Dr.Suneel
1.the reason for superstar’s humility- padmapriya speaks about her trip to rishikesh
padamapriya seems to be a different personality , unlike other  actress who go for disco the partying etc she has visited rishikesh  recently with her friends, she has shared her experience in kumudham
:i used to go to different places every yr, last yr i went to rishikesh  this time i thought of going to himalayas, my journey started from a  place 40 km from kulu, kajol hills at the altitude of 1500 ft, in our  team there were 6 girls , a few were from iit they identified me and  gave a good company, and we walked for 11 days and came down.the  experiences were really bone chilling, slippery rocks, sleeping in total  darkness and the steep slopes all unforgettable experiences.the hight  altitudes, piercing cold, travelling with unknown people and a spot like  this these things made me to realise the meaning of life. one day there  was heavy rainfall and we were not able to come out of the tent  unfortunately we were out of food reserves and couldnt cook also, we  stayed like this for nearly a day and a half.because of the cold wasnt  able to bath and brush for nearly 6 days.one day we woke by 1 o clock  and started walking because after sunrise the snow starts melting and  difficult to walk down. sun rises around 3 am there, the experience cant  be expalined through words, it should be felt.while we were climbing we  took cosmetics with us but when we came down we felt that these are  unnecessary and just simple robes are enough and the heart started  loving the simple and genuine life.
the reason for rajini sir to be so humble is the experiences he has  gained from such travels.(the reason for posting this article lies in  the last lines of the post)
2.superstars words of wisdom to suriya
in the commercial tamil cinema world kamal is distant second after the  unquestionable superstars numero uno position, after kamal suriya is in  the next position.he has got good talent and his films are running good  as well.in 2 different occasions suriya met thalaivar and he was given  the advices from thalaivar,”people are expecting a lot from you suriya  so be selective, then you are not just a hero, you can do commercial  movies with fight, duet etc but you are an actor too so do atleast 2  movies with acting scope” in suriyas eyes we could sense the fear, fear  of establishing himself and maintaining the momentum of victory .(plz  follow thalaivars advice naturally all the success will come for you)
3.aish falling at the feet of thalaivar
at the last day of endhiran shoot everyone had a heavy heart .aish also  had that feling and she was having no inclination to leave the sets. to  the surprise of the entire unit, she fell at the feet of thalaivar and  sought thalaivars blessings, thalaivar was stunned for a moment then  later he gave his wishes and said that she is also like a daughter in  law for him.every one was surprised on seeing the humility of aishwarya.
4.thalaivar ,kamal who is the best- trisha
after shreya, now trisha has come in the covers of the maxim magazine  .she has given a short and sweet interview
maxime- in tamil you are an established artist, who is the best kamal or  rajini?
trisha-both are different in there own right.rajini is a star while  kamal though appears to be a little serious actor and he may look like a  person who is difficult to approach but he is not like that but rajini  is a out and out people’s star( the meaning is -people are able to  relate with thalaivar easily)
5.waiting to act with superstar-tamanna
tamanna ,whose market was surging up like a rocket had a small downfall,  even then she has maintained herself to stay on top.filmfare’s 57th  award function is scheduled for august 7 in chennai.during a function  which released the nominees for the award, she spoke after lighting the  lamp (punch lamp -kuthu vilaku!!:)).these kind of awards will motivate  people.i hav acted with several leading actors like  surya,dhanush,vijay,kaarthi i cant tell that any one actor is great ,  everyone have there own merit and specialty.like every other actress who  wish to share screen with rajini i also eagerly await such a golden  opportunity.in the bollywood i love hrithik roshan.in tamilnadu there is  a tough competition in order to sustain one’s place ,but this  competition is for the good.
6.madaras patinam- a must watch
usually i wont speak about other movies, but if i really love that movie  i will share about that though i have missed writing about some movies  because of time.
they have brought befor our eyes the chennai city /madarasa patinam  which was before 60 yrs and with a wonderful love story too.on watching  the movie one cant stop the feeling is that impossible to enter this  madarasa patinam which had innocent people , pollution less places and  clean roads.we can see the hardwork of the unit in every frame and the  director vijay has done a neat job.these kind of movies should be  encouraged for the sake of well being of tamil cinema.kill piracy by  watching this movie in theatres with family.thalaivar doesnt mis good  movies,soon thalaivar will watch the movie ,and i will post the info  after that .

 

No comments:
Post a Comment