மனதில் பட்டதைப் பேச நான் எவனுக்கும் பயப்பட மாட்டேன்..! - ரஜினி


நான் மனதில் பட்டதைப் பேசுவேன். அதற்காக எப்போதும் எவனுக்கும் பயப்பட மாட்டேன் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.தமிழ் சினிமா துறையினருக்கு, சென்னையை அடுத்த பையனூர் அருகே குடியிருப்பு நிலம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, முதல்வர் கருணாநிதி வழங்கி இருக்கிறார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதல் அமைச்சர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், சனிக்கிழமை மாலை பிரமாண்ட பாராட்டு விழா நடைபெற்றது.விழாக்களுக்கு வரும்படி தங்களை மிரட்டுவதாக நடிகர் அஜீத் பேசிய பிறகு ஏற்பட்ட சலசலப்பு அடங்குவதற்குள் ரஜினி பேச அழைக்கப்பட்டார்.

விழாவில் ரஜினி பேசியதாவது:



"கலைஞர் இடம் கொடுப்பது, வீடு கட்டிக்கொடுப்பது பெரியதல்ல. கலைஞர் கொடுக்கும் இந்த வீடு கஷ்டப்படும் ஏழைத் தொழிலாளர்களுக்கு போய் சேர வேண்டும். பணக்காரர்கள் இதில் கையை நீட்டி விடாதீர்கள். அப்போதுதான் கலைஞர் உண்மையாக சந்தோஷப்படுவார். நான் எவனுக்கும் பயப்பட மாட்டேன். என் மனதில் பட்டதைத்தான் பேசுவேன். இங்கேயே பேசிவிடுவேன்.



கஷ்டப்படாம சம்பாதிக்க ஆசைப்பட்டா!



மதுரைக்குப் போக வேண்டிய ஒருத்தன் பாக்கெட்டில் 350 ரூபாய் வைத்திருந்தான். மதுரைக்குப் போக 300 ரூபாய் பஸ் செலவு. மீதி 50 ரூபாயை சாப்பாட்டுக்கு வைத்திருக்கிறான். ஒரு ஹோட்டலுக்கு போகிறான். ஹோட்டலுக்கு வெளியில் சாப்பாடு இலவசம். அதற்கு பணம் உங்களோடு பேரன் கொடுப்பான் என்று எழுதியிருந்தது.ஹோட்டலுக்கு போய் கேட்கிறான். என்னங்க சாப்பாடு இலவசம்னு போட்டிருக்கீங்க, பேரன் வந்து பணம் கொடுப்பான் என்று எழுதியிருக்கீங்க. எனக்கு 4 வயது பையன் இருக்கான். நான் சாப்பிட முடியுமா என்று கேட்கிறான். சாப்பிடுங்க. உங்கள் பேரன் வந்து பணம் கொடுப்பான் என்று ஹோட்டல் முதலாளி சொல்கிறார். ஹோட்டல் முதலாளி சொன்ன பின்னர் சிக்கன், மட்டன் அது இதுன்னு எவ்வளவு சாப்பிட முடியுமோ ஃபுல்லா சாப்பிடுறான். சாப்பிட்டு எழுந்து கிளம்பும்போது, ஹோட்டல் முதலாளி பணம் கேட்கிறார். சாப்பிட்டவன் சொல்கிறான், என் பேரன் வந்து பணம் கொடுப்பான்.. என்று.அது இருக்கட்டும். உங்கத் தாத்தா சாப்பிட்டத்துக்கு நீதானே பணம் கொடுக்கணும். அப்படின்னு சொல்லி பாக்கெட்ல இருந்த பணம், கையில் இருந்த வாட்ச், இடுப்பில் இருந்த வெள்ளி கயிறு உட்பட அனைத்தையும் ஹோட்டல் முதலாளி கழட்டிக்கொள்கிறார். இப்படித்தான் கஷ்டப்படாம நாம எதுக்காவது ஆசைப்பட்டா, நம்ம கையில் இருப்பது எந்த வழியில் போகும்னு தெரியாது. அதனால வசதியா இருக்கிறவங்க, கலைஞர் கொடுக்கிற வீட்டை ஏமாத்தி வாங்கினா. உங்க கையில இருக்கிறது எந்த வழியில போகும்னு உங்களுக்கே தெரியாது. அரசியல்ல இருக்கிறவங்களுக்கு இரும்பு மனுசும், கல் நெஞ்சும் கொண்டவங்களாதான் இருப்பாங்க. ஆனால் பராசத்தி படத்தை திரையில போட்டதும், இந்த காட்சியை ஒரே டேக்கில நடித்து முடிச்சுட்டாருனு சொல்லி தேம்பி அழுதீங்களே. இவ்வளவு மென்மையான மனசு கொண்ட நீங்க எப்படி இந்த அரசியல்ல இத்தனை நாளா இருக்கீங்க? அமிதாப்பச்சன் சின்ன வயசுல ஜெயித்தது பெரிய விஷயமல்ல. அவரது 60வது வயதில் பெரிய கஷ்டம் வந்தது. வீட்டையே அடமானம் வைத்துவிட்டார். படமும் எதுவும் கிடைக்கல. அவ்வளவு கஷ்டப்பட்ட நேரத்திலும் யாருக்கிட்டேயும் உதவிக்காக நின்னதுல்ல. ஆனால் தனி மனிதனா நின்னு ஜெயிச்சு அந்த வீட்டை மீட்டதும் இல்லாம. அதே ஏரியாவுல்ல இன்னும் 2 வீடு வாங்கியிருக்காரு. அதுதான் அமிதாப் பச்சன் என்றார் ரஜினிகாந்த்.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...