
பல சாதனைகளை உடைத்தும், பல சாதனைகளை படைத்தும் தென்னிந்தியா திரை வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதிய சூப்பர் ஸ்டாரின் சிவாஜி திரைப்படம், ஹிந்தியில் வரும் ஜனவரி 8 ஆம் தேதி உலகம் முழுதும் ரிலீஸ் செய்யப்படுகிறது.
சிவாஜி திரைப்படம் தமிழ் பதிப்பாகவே மும்பை, டில்லி, கொல்கட்டா உள்ளிட்ட பல இடங்களில் இந்தியா முழுதும் சக்கை போடு போட்டது குறிப்பிடத்தக்கது. அன்றைய பல ஹிந்தி படங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு சிவாஜி வசூலில் மேற்ப்படி நகரங்களில் சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சிவாஜி படத்தை மிக அதிக விலைக்கு விற்ற ஏ.வி.எம். நிறுவனம் கையில் வைத்திருந்த பொக்கிஷத்தின் அருமையை உணராது சிவாஜியின் வட இந்தியா மற்றும் அயல்நாட்டு உரிமையை சந்திரமுகியின் விலையை ஒட்டியே விற்பனை செய்தது. ஆனால் சிவாஜியோ சந்திரமுகியைவிட பல மடங்கு வசூலை கொட்டியது. மேற்படி உரிமையை பெற்றவர்கள் இந்த பண மழையில் திக்குமுக்காடிவிட்டனர். சிவாஜியை வாங்கி வெளியிட்டவர்கள் பலரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் கணிசமாக அதிகரித்தது. பல திரையரங்குகள் புனர் வாழ்வு பெற்றன. (குசேலன் அதிக விலைக்கு விற்கப்பட்டாலும், அதனால் நஷ்டம் என்று போர்க்கொடி தூக்கியவர்களுக்கு அனைத்தும் முறைப்படி பிரமிட் மற்றும் வெளியீட்டாளர்களால் சூப்பர் ஸ்டாரின் தலையீட்டின் பேரில் செட்டில் செய்யப்பட்டன!! முண்டாசு தட்டுபவர்கள் இப்படி செட்டில் செய்தவர்கள் வேறு யாரையாவது காட்ட முடியுமா?)
Sivaji Tamil version release in Mumabi theatres (2007)
உலகெங்கிலும் உயர்ந்துவிட்ட சூப்பர் ஸ்டாரின் செல்வாக்கு, சந்திரமுகி ஏற்படுத்திய பரபரப்பு மற்றும் அதன் அபார வெற்றி, சூப்பர் ஸ்டார் - ஷங்கர் - ரஹ்மான் - ஏ.வி.எம். கூட்டணி ஆகியற்றுக்கு இருந்த எதிர்பார்ப்பு ஆகிய அனைத்தும் சேர்ந்து சிவாஜிக்கு வரலாறு காணாத (உண்மையான) ஒப்பனிங்கை கொடுத்தது. படம் அட்வான்ஸ் புக்கிங்கிலேயே சாதனை படைத்து அனைவரையும் பிரமிக்க வைத்தது.
இந்நிலையில் மும்பை உள்ளிட்ட பல வட இந்தியா நகரங்களில் சிவாஜியின் வெற்றியை பார்த்து தமிழ் ரிலீசின் போதே இந்தியில் டப் செய்து வெளியிடாமல் விட்டதற்கு ஏ.வி.எம். நிறுவனம் மிகவும் வருத்தப்பட்டது.
வட இந்திய மக்கள் பலர் சிவாஜியின் தமிழ் பதிப்பையே 2007 ஆம் ஆண்டு பார்த்து ரசித்துவிட்ட படியால், இந்தியில் படம் எந்தளவு க்ளிக் ஆகும் என்று தெரியவில்லை… அதுவும் மூன்றாண்டுகள் கழித்து.
எப்படியும் சிவாஜி இந்த இந்தி பதிப்பிலும் சாதனை படைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment