
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 60வது பிறந்த நாளை எந்திரன் படப்பிடிப்பில், படக்குழுவினருடன் கொண்டாடினார்.முன்னதாக எந்திரன் படத்தின் டைட்டில் வடிவில் கேக் தயார் செய்திருந்தனர். ரஜினி படப்பிடிப்புத் தளத்துக்குள் நுழைந்ததும், அவருக்கு மலர்க்கொத்துக்களை வழங்கினர் படக் குழுவினர். பின்னர் கேக் வெட்டிய ரஜினி, இயக்குநர் ஷங்கர், ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு உள்ளிட்டோருக்கு ஊட்டினார். அனைவருக்கும் எந்திரன் கேக் வழங்கப்பட்டது. ரஜினி கேக் வெட்டும் தகவல் கிடைத்ததும் ஏராளமானோர் அங்கு திரண்டுவிட்டனர். ரஜினியை மொபைலில் படமெடுக்கவும், அவருக்கு வாழ்த்துக் கூறவும் முண்டியடித்தனர்.
No comments:
Post a Comment