கண்ணுபட போகுதையா… திருச்சி ரசிகர்களின் போஸ்டரை பார்த்து!!



பண்டிகை நாள் நெருங்குவதற்கு முன்பு ஒருபரபரப்பு தொற்றிக்கொள்ளும் அல்லவா அது போல சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் (12/12/2009) நெருங்குவதற்கு முன்பே ரசிகர்களிடம் அந்த பரபரப்பு தோன்ற ஆரம்பித்துவிட்டது.

ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே...
தமிழகம் முழுதும் பிறந்த நாளுக்கு தாங்கள் செய்யப் போகும் சமூகப் பணி என்ன, கொண்டாட்டங்கள் என்ன என்பது போன்ற ஆலோசனைகளில் ரசிகர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி ரசிகர்கள் போஸ்டருக்கு பெயர் பெற்றவர்கள் என்று நமக்கெல்லாம் தெரியும். அருமையான வாசகங்களுடன் அட்டகாசமான ஸ்டில்களை வைத்து அவர்கள் தயார் செய்யும் பிறந்த நாள் போஸ்டரை பார்க்க கோடி கண் வேண்டும்.
இம்முறையும் ரசிகர்கள் கலக்கலான போஸ்டர்களோடு நம்மை சந்தித்து வருகிறார்கள். அதில் இதோ இன்னொரு போஸ்டர். இன்றைக்கு சென்னையில் எடுத்த புகைப்படங்கள் இவை. போஸ்டர் எப்படி? சும்மா அதிருதில்ல…
சரி… திருச்சி ரசிகர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஏதோ போஸ்டரோடு நின்று போகப்போவதில்லை…
தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்கள் செய்யவிருக்கும் சமூக நலப் பணிகளை தெரிந்துகொண்டீர்களானால் நெகிழ்ந்து போவீர்கள்.
“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்ஆலயம் பதினாயிரம் நாட்டல்அன்னவாயினும் புண்ணியங்கோடிஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”
என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப, ஏழைக்கு எழுத்தறிவிக்க புறப்பட்டுவிட்டனர் நம் தோழர்கள். அவர்கள் பணி சிறக்க நம் வாழ்த்துக்கள்.
திருச்சி ரசிகர்களின் பிறந்த நாள் சமூக நலப் பணிகள்
*3 ஆம் வகுப்பு படிக்கும் ஐந்து ஏழை மாணவர்களின் முழு படிப்பு செலவையும் அவர்கள் மேனிலைக் கல்வி கற்கும் வரை இனி ஒவ்வொரு ஆண்டும் ஏற்றுக்கொள்வது.
*தலைவரின் பிறந்த நாளான 12.12.2009 அன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள சுமார் 2000 விழியிழந்தோர் மற்றும் ஆதரவற்றோர், ஆகியோருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.
*சீர் வரிசை பாத்திரங்களுடன் ஒரு ஏழைப் பெண்ணுக்கு இலவசத் திருமணம்.
*5 ஆதரவற்ற முதியோருக்கு மாதாமாதம் ரூ.200/- உதவித் தொகையாக வழங்குவது. இன்னும் பலப் பல….
(மேற்படி அனைத்தும், ரசிகர்கள் தங்கள் சொந்த பணத்தில் இருந்து செய்வது என்பதை நினைவில் வைக்க வேண்டுகிறேன்.)

ஆலய வழிபாடும் உண்டு
*திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார், திருவானைக்கா (நம்ம ஊருங்க!!) ஸ்ரீ ரங்கம், சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து பகுதி கோவில்களிலும் மசூதிகளிலும், தேவாலயங்களிலும் விஷேஷ பிரார்த்தனை செய்வது. (உறையூர் வெக்காளியம்மன் ஆலயத்தில் ஏற்கனவே சிறப்பு வழிபாடு, அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டுவிட்டன!)

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...