Happy wedding day Superstar!!


நண்பர்களே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 28 வது திருமண நாள்.
1981 பிப்ரவரி 26 ஆம் தேதி, ஏழுமலையான் முன்பு சூப்பர் ஸ்டாரின் திருமணம் நடைபெற்றது. அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் செல்வி லதாவின் கழுத்தில் சூப்பர் ஸ்டார் மாங்கல்யம் சூட்டி தமது வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டார்.

அன்றிலிருந்து இன்று வரை சூப்பர் ஸ்டாரின் ஏற்ற இறக்கங்களில் அவருடன் இருந்து, அவரை பக்குவப்பட்ட ஒரு முழு மனிதனாக மாற்றியதில் திருமதி.லதாவுக்கு பெரும் பங்குண்டு.
என்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிடு
விழி நீர் தெளித்து ஒரு கோலமிடு
உலகம் எனக்கென்றும் விளங்காதது
உறவே எனக்கின்று விலங்கானது
அடடா முந்தானை சிறையானது
இதுவே என் வாழ்வில் முறையானது
பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம் வந்ததே….
தம்பதிகள் நீண்ட காலம் சீரோடும் சிறப்போடும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...