ரஜினி சிறந்த பண்பாளர் - ஐஸ்!


Rajini is the epidome of stardom in the world - Aishwarya Rai, ரஜினி சிறந்த பண்பாளர் - ஐஸ்!

என் கேரியரில் நான் பார்த்த அதிசய மனிதர் ரஜினி. மிகச் சிறந்த மனிதாபிமானி. எளிமையின் உருவம். உலகின் மிகச் சிறந்த நடிகர் என புகழாரம் சூட்டுகிறார் எந்திரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா பச்சன்.
சமீபத்தில் பெரு மற்றும் பிரேசில் நாடுகளில் நடந்த ரஜினியின் எந்திரன் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு மும்பை திரும்பிய ஐஸ்வர்யா ராய், என்டிடிவிக்கு அளித்த பேட்டி:
பத்தாண்டுகளுக்குப் பிறகு ஷங்கருடன் பணியாற்றும் அனுபவம் குறித்து?
நான் எதிர்பார்க்காத ஒன்று. ஜீன்ஸில் நடித்த பிறகு, தான் எடுக்கும் ஒவ்வொரு படத்திலும் எனக்கு கதாநாயகி வாய்ப்பை வழங்க முன்வந்தார் ஷங்கர். ஆனால் எனக்கிருந்த கமிட்மெண்டுகள் அந்தப் படங்களில் நடிக்கவிடாமல் செய்துவிட்டன.
ரோபோவில் கூட நான் நடிப்பது அத்தனை சுலபத்தில் முடிவாகவில்லை. முதலில் நடிப்பதாக இருந்து, பின் முடியாமல் போய், மீண்டும் நடிக்க ஆரம்பித்த படம் இது.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஷங்கருடன் பணியாற்றுவதை மிகச் சிறந்த வாய்ப்பாகப் பார்க்கிறேன்.
உங்கள் குடும்பத்துக்கும் மிக நெருக்கமான, உங்கள் மாமனார் அமிதாப் மற்றும் உங்கள் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்ட இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த அனுபவம் எப்படி?
ஓ... ரஜினி சார் மிகச்சிறந்த பண்பாளர். யாருடனும் ஒப்பிட முடியாத மிகச் சிறந்த மனிதாபிமானி.
உலகின் மிகச் சிறந்த நடிகர் அவர் எனலாம். மிகச் சிறந்த நடிகர்களின் மொத்த உருவாமாக அவரைப் பார்க்கிறேன். அவர் பழகும் விதம், சக நடிகரை நடத்தும் பண்பு எல்லாமே என்னைப் பிரமிக்க வைத்தது.
எளிமை என்றால் என்னவென்பதை அவர் மூலம்தான் நான் நேரில் தெரிந்து கொண்டேன். அவரது பண்பு என்னை வியக்க வைக்கிறது.
ஒரு ஷெட்யூல்தான் நடித்திருக்கிறேன் அவருடன். அதிலேயே என்னால் அவரது உன்னதமான பண்புகளைப் புரிந்து கொள்ள முடிந்தது.
ரஜினியுடன் நடித்தது வாழ்க்கையில் எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அவர் மீது எனக்குள்ள மரியாதையைச் சொல்ல வார்த்தைகள் இல்லை என்றார் ஐஸ்வர்யா ராய்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...