அதே சுறுசுறுப்பு! அதே மின்னல் நடை!! — திருமண நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார்!!!

சூப்பர் ஸ்டாரின் நண்பர்கள் வீட்டில் நடைபெறும் திருமணம் மற்றும் விஷேஷங்கள் எதுவானாலும் சூப்பர் ஸ்டாருக்கு சொந்தமான  ராகவேந்திரா மண்டபத்தில் தான் நடைபெறும். தனது நண்பர்களுக்கு சூப்பர் ஸ்டார் போட்டிருக்கும் அன்புக்கட்டளை இது. அதே ஏற்று அவரது நண்பர்களின் வீட்டு திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் இங்கு தான் பெரும்பாலும் நடைபெறும். அரிதாகவே வேறு இடத்தில் நடைபெறும். இப்படி நண்பர்கள் வீட்டு விசேஷங்கள் தனது மண்டபத்தில் நடைபெறும்போது அதற்கென எந்த கட்டணமும் தலைவர் தரப்பில் வசூலிப்பது கிடையாது என்று கூறப்படுகிறது.


சூப்பர் ஸ்டாரின் நண்பர்கள் முரளி, விட்டல், மற்றும் வேறு நண்பர்கள் பலரது வீட்டு விசேஷங்கள் ராகவேந்திரா மண்டபத்தில் தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்பு அப்படி ஒரு திருமணம் ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்றது. (நமது தள வாசகரின் நண்பர் ஒருவர் அந்த திருமணதிற்கு சென்றிருந்தார்). தனது நெருங்கிய நண்பர் வீட்டு திருமணம் என்பதால் சூப்பர் ஸ்டார் இந்த திருமணத்திற்கு நிச்சயம் வருவார் என்று நம்பிக்கை திருமணத்திற்கு வந்திருந்தவர்களிடம் நிலவியது. ஆகையால் ஒரு வித பதட்டம் கலந்த எதிர்பார்ப்புடன் “அவர் வருவாரா? மாட்டாரா?” என அனைவரும் காத்திருந்தனர்.
திடீரென மின்னல் வெட்டியது போல ஒரே பரபரப்பு. கறுப்பு மின்னல் தனக்கே உரிய சுறுசுறுப்புடனும் சிங்க நடையுடனும், வேகமாக மண்டபத்துக்குள் நுழைய அனைவரும் ஒரு கணம் எழுந்து நின்று வரவேற்பு கொடுத்தது கண்கொள்ளாகாட்சி.
அனைவருக்கும் வணக்கம் தெரிவித்துக்கொண்டே வந்தவர், நேரே சென்று மணமக்களிடம் கைகுலுக்கி வாழ்த்த, இருவரும் தலைவரின் கால்களில் வீழ்ந்து ஆசிபெற்றனர். சில வினாடிகள், புகைப்படத்துக்கும் வீடியோவுக்கும் போஸ் கொடுத்தபின்பு, அதே வேகத்துடன் கிளம்பினார்.
சூப்பர் ஸ்டார் வந்திருப்பதை பார்த்ததும் அங்கிருந்த பலர் உடனடியாக அவரவர் மொபைலில் அவரை படமெடுக்க துவங்கினர். யாரும் அதை தடுக்க முயலவில்லை. கோபப்படவும் இல்லை. தலைவர் அவர் பாட்டுக்கு புன்னகைத்தபடியே சென்றார்.
தலைவர் மணமக்களை வாழ்த்திவிட்டு திரும்பியபோது, அவரை தனது செல்போனில் புகைப்படமேடுத்துக்கொண்டிருந்த நம் நண்பருக்கு கைகள் ஏனோ நடுங்கியது. இருப்பினும் அட்ஜெஸ்ட் செய்து க்ளிக்கினார். சூப்பர் ஸ்டார் சற்று அருகே போகும்போது, இவர் அருகே ஓடிச் சென்று கைகுலுக்க, பதிலுக்கு கைகுலுக்கிய தலைவர், நண்பரின் தோளை தட்டிவிட்டு சென்றது தான் ஹைலைட். (அவர் தான் விடுற மூச்சுலயே ஜாதகத்தை அலசுறவராச்சே!)
தலைவரை பார்த்து நண்பர் கைகொடுத்த விஷயத்தை கேள்விப்பட்ட நம் நண்பரின் நண்பர்கள் சிலர், “கையை பாலிதீன் கவர்ல சுத்தி கட்டிட்டு (பாய்ஸ் சித்தார்த் கணக்கா) படுத்துக்கோ. மறந்து போய் கூட கையை நனைச்சிடாதே! நீ குளிக்கலேன்னா ஒன்னும் ஆகிடாது…” அப்படின்னு, சொல்லி(மிரட்டி) வெச்சிருக்காங்களாம் ! (ஹி..ஹி…!!)
[END]

No comments:

Post a Comment