“எனது நட்சத்திரம் எனக்கு தெரியாது” – துரை தயாநிதியின் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் உருக்கம்! Full Speech!!

துரையில் நடைபெற்ற மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதியின் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்துகொண்டார். அவருடன் அவரது துணைவி லதா மற்றும் மருமகன் நடிகர் தனுஷ் ஆகியோரும் வந்திருந்தனர்.

பல்வேறு அரசிய தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் மணமக்களை ஆசீர்வதித்து சூப்பர் ஸ்டார் ரஜினி பேசினார். அவரது உரை மற்றும் முழு திருமண நிகழ்ச்சிகள் மதுரையில் இயங்கும் உள்ளூர் கேபிள் டி.வி.யான் தயா டி.வி.யில் ஒளிபரப்பட்டது. ரசிகர்களும் பொதுமக்களும் கண்டு ரசித்தனர்.

Rajini MKA 640x272  “எனது நட்சத்திரம் எனக்கு தெரியாது” – துரை தயாநிதியின் திருமணத்தில் சூப்பர் ஸ்டார்  உருக்கம்! Full Speech!!

சூப்பர் ஸ்டார் ரஜினி பேசியதாவது :

“எல்லா புகழும் இறைவனுக்கே. மதுரையில் நடைபெறும் இப்படி ஒரு அருமையான நிகழ்ச்சியை சிறப்புடன் நடத்தி வைத்த நிதியமைச்சர் அன்பழகன், விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து பல்வேறு பணிகளுக்கு இடையே மதுரை வந்துள்ள மத்திய நிதி மந்திரி பிரணாப்முகர்ஜி மற்றும் இந்திய திருநாட்டின் மூத்த அரசியல் தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தமிழக மக்களுக்கும் எனது முதல் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.”

“எனக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு பேரன்கள் உள்ளனர். இரண்டு பேரன்களுடன் விளையாடும் போதே இவ்வளவு சந்தோஷம் என்றால், பேரன்களின் குழந்தைகளுடன் விளையாடும் போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அதிலும் பேரக்குழந்தைகளின் திருமணத்தை நடத்தி வைப்பது என்பது அதைவிட சிறந்ததாகும். கொள்ளு பேரன்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் முதல்வர் கருணாநிதி எப்படி சந்தோஷமாக இருப்பார் நினைத்துபாருங்கள். அந்த வகையில் முதல்-அமைச்சர் கருணாநிதி தனது பேரன்களின் திருமணத்தை நடத்தி வைத்து நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.”

“மதுரைக்கு 32 ஆண்டுக்கு பிறகு இப்போது வருகிறேன். இங்கு எனக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. என்னால் இது மறக்க முடியாதது. முன்பு வந்தபோது மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்றேன். கோவிலில் அர்ச்சனை செய்த போது, என் நட்சத்திரம் என்ன என்று கேட்டார்கள். எனது நட்சத்திரம் எனக்கு அப்போது தெரியாது. அப்போது என்னுடன் வந்திருந்த சச்சு அம்மா, சுவாமி பேருக்கே அர்ச்சனை செய்யுங்க என்றார். நான் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்ற பிறகு தான் என் நட்சத்திரத்தை ஜாதகத்தை தோண்டி எடுத்தனர். நான் பிற்காலத்தில் தெரிந்துகொண்டேன், அந்த சுவாமியின் நட்சத்திரம் தான் என்னுடையதும் என்று.” (திருவோணம் நட்சத்திரம் மகாவிஷ்ணுவின் நட்சத்திரம் ஆகும்).

“முதல்வருக்கு 2 மிகப்பெரிய சொத்துக்கள் உள்ளன. ஒன்று தி.மு.க. என்னும் கட்சி, மற்றொன்று அவரது மகன்களான மு.க.அழகிரி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆவார்கள். தி.மு.க.வை மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலினும், இவர்களை தி.மு.க.வும் காக்க வேண்டும்.”

“அழகிரி, ஸ்டாலினை 38 ஆண்டுக்கு முன்னாலே எனக்கு தெரியும். கோபாலபுரம் அப்போது ஒரு குறுக்கு சந்து. 8 மணிக்கு மேல் காக்கா, நாய், நரி கூட போகாது. மாடி மேல உட்கார்ந்து பேச்சுலர்கள் வழக்கமாக கலட்டா செய்து கொண்டிருப்போம். தெருவில் 2, 3 பேருடன் பேசிக்கொண்டிருப்பார் ஸ்டாலின், 10, 15 பேருடன் போனால் அழகிரி என்று சொல்வார்கள்.”

“நான் இதுவரை ஸ்டாலினுடன் மட்டுமே அதிகம் பழகி உள்ளேன். அழகிரியிடம் அந்த அளவிற்கு பழகாவிட்டாலும் தற்போது ஏதோ பல ஆண்டு அவருடன் பழகியது போன்ற ஒரு உணர்வு எனக்கு ஏற்பட்டுள்ளது.”
“மணமக்கள் பொருத்தமாக இருக்கிறார்கள். இது காதல் திருமணம். ஒருத்தரை ஒருத்தர் புரிந்து வைத்திருக்கிறீர்கள். பொருத்தம், லட்சணம், அழகு இந்த மூன்றும் நிறைந்த புதுமண காதல் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டும், விட்டு கொடுத்தும் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்வில் ஒத்துழைத்து சென்றால் வாழ்வு என்றும் சிறக்கும்” என்றார்.

[END]

No comments:

Post a Comment