“விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் ரஜினி” – குமுதத்திற்கு ஷங்கரின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!











அப்பாடா…. எப்படியோ குமுதம் புண்ணியத்தில் கொஞ்சம் பேசியிருக்கிறார் ஷங்கர். எந்திரன் பற்றி அவரிடம் தகவல்களை பெறுவதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறது குமுதம். குமுதத்திற்கு நன்றி!! பேட்டி அடுத்த வாரம் தொடருமாம்… இரண்டாம் வாரம் இன்னும் சுவாரஸ்யமான விஷயங்களை எதிர்பார்க்கலாம்!

சும்மா, மேம்போக்காக படிக்காது விஷயத்தை உள்வாங்கி படித்தால் ஷங்கர் பல விஷயங்களை கூறியிருப்பது புரியும்.
சுருக்கமாக கூறினால் ஷங்கர் கூறியிருக்கும் விஷயங்கள் பற்றி ஒரு சம்மரி:
* இதுவரை வந்த எந்த படத்தின் சாயலும் எந்திரனில் இருக்காது.
* எந்திரனுக்காக இதுவரை இல்லாத அளவு ரஜினி சார் மெனக்கெட்டிருக்கிறார். ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார்.
* ‘டெர்மினேட்டர்’ படத்தில் அர்நால்டுக்காக மோல்ட் எடுத்தது போல நம்ம சூப்பர் ஸ்டாருக்கும் மோல்ட் (அச்சு வார்ப்பு உருவம்) எடுத்திருக்கிறார்கள்.
* ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டூடியோவின் அனிமேஷன் ஜர்னலில் எந்திரன் பற்றிய செய்தி இடம்பிடித்திருக்கிறது.
* சூப்பர் ஸ்டார் (எந்திரன் கேரக்டர்) ஐஸ்வர்யா ராயிடம் கூறும் ஒரு பன்ச் டயலாக் : “மனுஷன் படச்சதிலேயே உருப்படியான ரெண்டே விஷயங்கள் – ஒன்னு நான்; இன்னொன்னு நீ!”
* சூப்பர் ஸ்டாரை போலவே ஒரு மோல்டை உருவாக்கி படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
* படம் டெக்னிக்கலாக தமிழ் சினிமாவை ஒரு பத்து வருடங்கள் முன்னோக்கி அழைத்து செல்லும்.
* எந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டார் எந்த நிர்வாணக் காட்சியிலும் நடிக்கவில்லை.
* படத்தில் அரசியல் பன்ச் டயலாக்குகள் கிடையாது. (ஆனா சீன் இருக்கு… அப்படித்தானே ஷங்கர் சார்?… ஹா… ஹா… ஹா…!)
Over to Kumudam: (Double click to Zoom & Read the articles)

No comments:

Post a Comment